Tuesday, March 8, 2011

இமயமலையில் ரஜினிகாந்த்தின் சொந்த ஆசிரமம்?


சூப்பர் ஸ்டார் தற்போது நடிக்கப் போகும் படம் "ராணா". இதற்கான ஹீரோயின் தேர்வும் சமீபத்தில் தான் முடிந்தது. சூப்பர் ஸ்டாரை பற்றி செய்தி வழங்குபவர்களுக்கும், அதை படிப்பவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷம் தான். ஆனால் சில முக்கியமான செய்திகளும்உள்ளது

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தான் "ராணா" படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல் மாதம் நெருங்கிக் கொண்டே இருந்தாலும் ராணாவின் ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது.

 அது வரை என்ன செய்யப் போகிறார் ரஜினிகாந்த்? தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், அவருக்கு இங்கு இருப்பதும் கடினம் தான். ஆதலால் இமயமலைக்கு செல்லப் போகிறார். வழக்கம் போல் செல்லும் இமயமலை பயணமா என்றால், இது வழக்கமான இமயமலைப் பயணம் இல்லையாம். அடிக்கடி இமயமலை சென்று கொண்டிருப்பதனால், இமயமலையின் அடிவாரத்திலேயே தனக்கென சொந்தமாக ஒரு ஆசிரமம் கட்டிக் கொண்டிருக்கிறாராம் அவர். அங்கு நடந்துக் கொண்டிருக்கும் பணிகளை மேற்பார்வை செய்யப் போகிறாராம் அவர். அவருக்கு ஏற்கனவே இங்கு சொந்தமாக ஒரு ஆசிரமம் உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

2 comments:

  1. ஆசையை துறந்த சித்தர்களை அடிக்கடி பார்க்கச் செல்லும் ரஜினிக்கு இன்னும் பணம் புகழ் மீது உள்ள ஆசை போகவில்லையே!

    ReplyDelete
  2. தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா நண்பரே!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...