Friday, March 25, 2011

அரசியல் இலவசங்கள் விதி மீறல் அல்ல - தேர்தல் ஆணையம்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சி.டி., போஸ்டர்களை வெளியிட்டார். அதை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அந்த சி.டி.யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, இசை அமைப்பளார் விஜய் ஆண்டனி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லும் வகையில் இந்த சி.டி. அமைந்துள்ளது.
 
இதேபோல் தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் மக்களாட்சிக்கு வாக்களிப்போம், மனசாட்சிக்கு வாக்களிப்போம், உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம், நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கும் விலை மதிப்புள்ள உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
 
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர் களிடம் கூறியதாவது:-
 
அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக இந்த சி.டி., போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், திரையரங்குகள், பொது இடங்களில் ஒளிபரப்படும் போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தகுதி உள்ள அனைவரும் ஓட்டு போட வேண்டும். புகைப்படங்கள் அடங்கிய பூத்சிலிப், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடி ஊழியர்கள் இதை விநியோகம் செய்வார்கள். யாருக்காவது பூத்சிலிப் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை ஆகிய இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம் பெற வில்லை. இவர்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷன் அனுமதித்த 13 விதமான புகைப்பட சான்றிழ்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வேண்டும். மற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டே ஓட்டு போடலாம்.
 
கிராமங்களில் கிராம அதிகாரிகள் மூலம் பூத்சிலிப் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 356 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.
 
மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.3.8 கோடி பணம் பறிமுதல் ஆகி இருக்கிறது. சிறிய அளவிலான தொகை விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெரிய அளவிலான ரொக்கப்பணம் வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. சோதனை தொடர்பாக கோர்ட்டுக்கு தேர்தல் கமிஷன் 28-ந்தேதி விளக்க அளிக்கும். தற்போது தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்கள் குறைந்து விட்டது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை கேட்கும் கருத்துகணிப்பு வெளியிடக் கூடாது.   அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரசாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி. எனவே இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும்.  (நன்றி மாலைமலர்)
 
அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசாரம் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி பத்திரிகைகள் வெளியிடலாம். விளம்பரங்களை தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. இதுவரை 1509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

1 comment:

  1. மக்களே நீங்கள்தான் விழிப்போடு இருக்க வேண்டும்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...