Thursday, March 31, 2011

முதல் இடத்தை கோட்டை விட்டது இந்தியா...!


இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இத்துடன் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ்குற்றம் மிக, மிக குறைந்து விட்டதாகவும், இதுவரை இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் நடப்பு கணக்கெடுப்பில் தான் குறைந்த அளவு இந்த குற்றம் நடந்திருப்பதாகவும் சென்சஸ் விவரத்தில் தெரியவந்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை - 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.

சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது.

 5 நாட்டு மக்கள் தொகையை விட இந்தியா டாப்: மொத்தம் 38. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களைவிட பெண்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம். டில்லியின் வடகிழக்கு பகுதி மக்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். அருணாசல பிரதேசத்தில் டிபங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மிக குறைவாக வாழும் பகுதி ஆகும் என்றும் இன்றைய சென்சஸ் விவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

முதல் இடத்தை கோட்டை விட்டதன் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் தான் செல்கிறது என்பது புலனாகிறது..

Tuesday, March 29, 2011

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயார் - கலைஞர் அதிர்ச்சி


ஒரு  தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். 

எனவே பணம் கொடுக்க வருவோரை பிடித்துக் கொடுக்க திமுக கூட்டணியினர் ஆயத்தமாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பணத்தைக் கொட்டியாவது இத்தேர்தலில் வென்று விட வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்கள்.

ஒரு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை பணத்தை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். அம்மையார் கும்பல் ஆட்களை அடையாளம் யாரும் தவறி விடக் கூடாது. பணத்தை வைத்து வாக்குகளை விலை பேச வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தொகுதிக்கு ரூ. 10 கோடி செலவிட ஜெயலலிதாவும், அதிமுகவும் தயாராகி விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-வே 10 கோடி ‌ என்றால் அப்போ ஐயா தாங்கள் எவ்வளவு என்று சொல்லி விடுங்கள்... 

Monday, March 28, 2011

அரசியலில் ப்ரிகேஜி கூட படிக்காதவர் விஜயகாந்த்



ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தர்மபுரியில் நேற்று நடந்தது. இதில் தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சாந்தமூர்த்தி மற்றும் பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர்கள் இன்பசேகரன், முல்லைவேந்தன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். கடந்த சில மாதங்களாக பா.ம.க.வைப்பற்றி, நடிகர் கட்சி விமர்சனம் செய்து வருகிறது. பா.ம.க.வைப் பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் அருகதை கிடையாது.

கட்சி தொடங்கியதில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு வரை, அ.தி.மு.க., வையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தவர் விஜயகாந்த். பொதுக் கூட்டங்களில் தனக்கும், எம்.ஜி.ஆருக்கும்தான் கூட்டணி  என்று தற்போது விஜய காந்த் பேசி வருகிறார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியை மதிக்காமல் அரசியலில் ப்ரிகேஜி கூட படிக்காதவர் போல் விஜயகாந்த் பேசி வருகிறார்.

விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட் பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, தமிழக முதல்வர் கருணாநிதியை மீண்டும் 6வது முறை முதல்வர் ஆக்குவோம். வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தர்மபுரி தொகுதியை வழங்கிவிட்டு, பா.ம.க. வேறு தொகுதிகளில் போட்டியிடும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Friday, March 25, 2011

அரசியல் இலவசங்கள் விதி மீறல் அல்ல - தேர்தல் ஆணையம்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சி.டி., போஸ்டர்களை வெளியிட்டார். அதை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அந்த சி.டி.யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, இசை அமைப்பளார் விஜய் ஆண்டனி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லும் வகையில் இந்த சி.டி. அமைந்துள்ளது.
 
இதேபோல் தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் மக்களாட்சிக்கு வாக்களிப்போம், மனசாட்சிக்கு வாக்களிப்போம், உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம், நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கும் விலை மதிப்புள்ள உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
 
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர் களிடம் கூறியதாவது:-
 
அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக இந்த சி.டி., போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், திரையரங்குகள், பொது இடங்களில் ஒளிபரப்படும் போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்படும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தகுதி உள்ள அனைவரும் ஓட்டு போட வேண்டும். புகைப்படங்கள் அடங்கிய பூத்சிலிப், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடி ஊழியர்கள் இதை விநியோகம் செய்வார்கள். யாருக்காவது பூத்சிலிப் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை ஆகிய இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம் பெற வில்லை. இவர்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷன் அனுமதித்த 13 விதமான புகைப்பட சான்றிழ்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வேண்டும். மற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டே ஓட்டு போடலாம்.
 
கிராமங்களில் கிராம அதிகாரிகள் மூலம் பூத்சிலிப் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 48 ஆயிரத்து 356 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.
 
மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.3.8 கோடி பணம் பறிமுதல் ஆகி இருக்கிறது. சிறிய அளவிலான தொகை விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெரிய அளவிலான ரொக்கப்பணம் வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. சோதனை தொடர்பாக கோர்ட்டுக்கு தேர்தல் கமிஷன் 28-ந்தேதி விளக்க அளிக்கும். தற்போது தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்கள் குறைந்து விட்டது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 4-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை கேட்கும் கருத்துகணிப்பு வெளியிடக் கூடாது.   அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரசாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி. எனவே இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும்.  (நன்றி மாலைமலர்)
 
அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசாரம் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி பத்திரிகைகள் வெளியிடலாம். விளம்பரங்களை தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. இதுவரை 1509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Thursday, March 24, 2011

சூர்யா படபிடிப்பில் பரபரப்பு- மக்கள் ஆத்திரம்


நடிகர் சூர்யா - வின் ஏழாம் அறிவு படப்பிடிப்பால், அடையாறு பகுதியில்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்தின் ஷூட்டிங் சென்னைப் பகுதிகளில் நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் அடையாறு பழைய மேம்பாலத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.


இருநூறுக்கும் அதிகமான துணை நடிகர் நடிகைகள் நடனமான, அவர்களுக்கு முன் சூர்யா ஆடிக் கொண்டிருப்பது போல காட்சி எடுக்கப்பட்டது. இதைப் பார்க்க, வாகனங்களில் வந்தவர்களும் பொதுமக்களும் குவிந்துவிட, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பட்டினப்பாக்கம் சிக்னலிலிருந்து இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன.

கொளுத்தும் வெயிலிலில் வாகனங்கள் நடுரோட்டில் நின்றதால் பொதுமக்கள் கடுப்படைந்தனர். ஏற்கெனவே திருப்பூர் அருகே ஒரு கிராமத்தில், மக்களின் குடிநீர் குளத்தை அசுத்தப்படுத்தியதற்காக ஏழாம் அறிவு படக்குழுவினரை மக்கள் விரட்டியடித்தது நினைவிருக்கலாம்!

அநியாயத்துக்கு காமடிப்பண்றாங்கப்பா...

தேர்தல் களம் அதிகமாக சுடுப்பிடித்து வருகிறது....
அதை மையமாக  வைத்து பல்வேறு பதிவுகள் வந்த வண்ணம் உள்ளது.
அதை சார்ந்த கார்டுடன் படங்கள் (சிரிக்க மட்டும்)

 















எப்படியெல்லாம் களை கட்டுதுபாருங்க...
(நன்றி தினமலர்)

Wednesday, March 23, 2011

மாணவர்கள் நுழைவுத் தேர்விற்கான அடிப்படை குறிப்புகள்


நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சில அடிப்படைக் குறிப்புகளை இங்கே தருகிறேன்.. பொதுவாக நாம் எழுதவிருக்கும் நுழைவுத் தேர்விற்கு அடிப்படையான பாடப்பிரிவுகளை நன்கு படித்துக் கொள்வது நல்லது.


அது மட்டுமில்லாமல், கடந்த சில ஆண்டுகளில் வந்த கேள்வித் தாள்களை வாங்கி அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளை படித்துக் கொள்ளலாம். வீட்டில் அவ்வப்போது உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்து அதற்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள்.


தேர்வில் கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, கணிதக் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு அறையில் உங்கள் மதிப்பெண்ணும், நேரமும் மிகவும் முக்கியமானதாகும்.


தேர்வின் போது டைம் மேனேஜ்மென்ட் என்பது மிகவும் முக்கியமானதாகும். எளிதாக கேள்விகளை மிக விரைவாக முடித்துவிட்டு, சற்று கடினமான கேள்விகளுக்கு அதிகப்படியான நேரம் ஒதுக்கி அதற்கான சரியான பதிலை எழுதுவது மிகவும் நல்லது.


3 மணி நேரத்தில் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனில் நேரத்தை திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும்.


சில சிக்கலான கேள்விகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்க்கவும். முதல் முறை படித்ததும் நீங்கள் புரிந்து கொண்டது தவறாகக் கூட இருக்கலாம். எனவே நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.


குழுக் கலந்துரையாடலின் போது உங்கள் பேச்சுத் திறமை, தலைமைப் பண்பு போன்வை கவனிக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரியாத தலைப்பாக இருந்தாலும், அந்த நிமிடத்தில் அந்த தலைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை எளிய வாக்கிய அமைப்புகளில் கனீரென்ற குரலில் பேசுங்கள்.


நேர்முகத் தேர்வில் உங்கள் நடை, உடை, பாவனை போன்றவையும் கவனிக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை பேச்சில் தெரிய வேண்டும்.


இது மட்டுமல்லாமல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப் பிரிவிற்கு அடிப்படையான சில திறமைகளை நீங்களாக வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

Tuesday, March 22, 2011

" பொய் கூறுகிறார் பிரதமர் " - எதிர்கட்சிகள் புகார்:


காங்கிரஸ் ஆட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் தனது அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு பணம் கையூட்டாக வழங்கபட்டது தொடர்பாக பிரதமர் தவறான தகவல் அளித்ததாக அவர் மீது பார்லி.,யில் பா.ஜ., உள்பட எதிர்கட்சிகள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே காரசார வாக்குவாதம் நடந்ததால் பார்லி.,யின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த 2008 ம் ஆண்டில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இடதூரிகள் தங்களுடைய ஆதரவை விலக்கி கொண்டதையடுத்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எம்.பி.,க்களின் ஆதரவை பெறுவதற்கு ரூ. 10 கோடி வரை லஞ்சம் வழங்கபப்பட்டது என விக்கலீக்ஸ் செய்தி வெளியிட்டது.

யாருக்கும் லஞ்சம் வழங்கப்படவில்லை இந்த செய்தி தவறானவை என்றும், இவை யூகங்கள் அடிப்படையிலானவை என்று கடந்த வாரம் நடந்த பார்லியி.,ல் பிரதமர் விளக்கமளித்தார். ஆனால் லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக எதிர்கட்சிகள் கூறியிருந்தன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் என்றும், லஞ்சம் பெற்றது தொடர்பாக கிஸ்ரோ சந்திரோதயா கமிட்டி உறுதி செய்துள்ளது. ஆனால் பிரதமர் பொய் கூறுகிறார். இவர் மீது உரிமை மீறல் கொண்டு வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் அவையில் தெரிவித்தார். இதனால் எதிர்கட்சி மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பா.ஜ.,வெளிநடப்பு செய்தது: தொடர்ந்து எழுந்த அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நிதிநிலை மீதான விவாதம் முடிந்த பின்னர் விவாதிக்கலாம் என்றார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப். இதனை எதிர்கட்சிகள் ஏற்க மறுத்தன. இப்போதே விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பா.ஜ., ‌வலியுறுத்தின. இதற்கு இடதுசாரி கட்சியினரும் ஆதரவ தெரிவித்தனர். அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பா.ஜ., அவையில் ‌இருந்து வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து லோக்சபா இது தொடர்பான விவாதத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சபாநாயகர் மீராகுமார் முடிவு செய்வார். (தினமலர்)

இன்றைய அவையில் லிபியா மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது அயல் நாட்டு விவகாரம் இது குறித்து பிரச்னை எழுப்ப முடியாது என அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

Monday, March 21, 2011

குழப்பத்தில் தேமுதிக-ஆபீஸை பூட்டிக் கொண்டு ஆலோசனை


41 தொகுதிகளை அடையாளம் கண்டு விட்டோம் என்று தேமுதிக கூறிய பின்னரும் கூட அதன் தொகுதிகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்னும் அறிவிக்காமல் உள்ளதால் அக்கட்சியினர் பெரும் குழப்பமடைந்துள்ளனர். இன்றாவது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா என்று கொட்டாவி விட்டபடி அனைவரும் காத்துள்ளனர்.

மகா குழப்பத்தில் தொடர்ந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக கூட்டணி. அதிமுகவின் போக்கால் வெறுத்துப் போன மதிமுக கூட்டணியே வேண்டாம் என்று போய் விட்டது. இன்னொரு முக்கியக் கட்சியான தேமுதிகவோ இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.

இக்கட்சிக் குழுவினர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஜெயலலிதாவுடன், 2 நாட்கள் விடிய விடிய பல மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தி 41 தொகுதிகளையும் அடையாளம் கண்டனர். நேற்றே விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை வரை ஒரு சத்தத்தையும் காணோம்.

நேற்று முழுவதும் தேமுதிக தலைமை அலுவலகம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு படு இறுக்கமாக காணப்பட்டது தேமுதிக அலுவலகம்.

தாங்கள் கேட்ட சில முக்கியத் தொகுதிகளை அதிமுக தர மறுத்து விட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. இதனால்தான் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவிப்பதில் விஜயகாந்த் தாமதம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இன்று தேமுதிக பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றாவது பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகமும் கூடவே நிலவுகிறது.
 
 

Sunday, March 20, 2011

சும்மா சிரிச்சிட்டு போங்க...


 யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வர சூப்பர் ஐடியா!

4 மணிக்கு எழுந்திரிச்சு பிரஸ் பண்ணிட்டு குளிரா இருந்தாலும் குளிங்க. 5 மணி ஆயிடும் அம்மாவ எழுப்பினா காபியோ டீயோ தருவாங்க. 6 மணிக்கு கிளம்பி 6.30க்கு யுனிவர்சிட்டி போயிடுங்க. நீங்கதான்
யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட

**********************************************************************************. 

ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.
 என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்

எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்

***********************************************************************************
திருமணமான ஒரு பெண்ணின் இறுதிச்சடங்கில் பல பேர் அழுது கொண்டு நின்றனர். கணவனுக்கு அருகில் நின்று இன்னொரு ஆணும் அழுது கொண்டு நின்றார்.

அக்கம் பக்கம் நின்றவர்கள் நீ ஏன் அழுகிறாய்?... என்று வினாவினார்கள். அதற்கு அவன் சொன்னான் இது என் கள்ளக்காதலி என்று.


அப்போ அருகில் நின்ற கணவன் சொன்னார்!... ஏன் கவலைப்பட்டு அழுகிறாய்?... வெகு விரைவில் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்!...... 
**********************************************************************************
இது என்னங்க வரவேற்பு பேனர்ல ’கழகத்தின் கண்ணீர்ப் புகையே வருக வருக’ ன்னு வித்தியாசமா எழுதியிருக்காங்க ?'

'அவர் பேச ஆரம்பிச்சாலே, கூட்டம் கலைய ஆரம்பிச்சுடுமாம் !

 

Saturday, March 19, 2011

திமுக தேர்தல் அறிக்கை - முழுவிவரம் (Updated)

தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். கடந்த தேர்தலின் போது தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச டி.வி., 1 ரூபாய் அரிசி என ஏராளமான சலுகைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தல் அறிக்கை தி.மு.க., வெற்றிக்கு பெரிதும் உதவியதால் அதனை கதாநாயகன் என்று கட்சியினர் வர்ணித்தனர். 

வெற்றி பெற்ற பின்னர் முதல்வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சலுகைகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிலையில் இன்று வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிட்டது. 


அதில் 


சொல்வதை செய்வோம் செய்வதையே சொல்வோம்..


1.  தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஆக்க திமுக தொடர்ந்து வலியுருத்தும்.
2. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக கொண்டுவர பாடுபடுவோம்.


3. திருக்குறள் தேசிய நூலாக ஆக்க
4.மத்திய அரசு‌ தேர்வு தமிழில் வர பாடுபடுவோம்.


5. ஈழத் பிரச்சனைக்கு மத்திய அரசு மூலம் நிறந்தர தீர்வு.
6. தொடக்க வேளாண்மை கடன் அதிகப்டுத்தப்படுவோம்.

7. விவசாய மக்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத்திட்டம். விவசாய 
விரிவாக்கத்திட்ட்ம்.

8. ‌வேளாண்மை வங்கிகள் ஒன்றிய அளவில் விரிவுபடுத்துதல்.
9. 1000 சூழல் நிதியாக சிறு குரு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

10. கூட்டறவு கடைகள் நவினப்படுத்தப்படும்.
11. கிராமங்களில் விவசாய சந்தை கூடங்கள்.

12. நெல், பருப்பு தானியங்களுக்கு உரிய விலை நிர்ணயம்.

13. டெல்டா மாவட்டங்களில் கிடைக்கும் வைக்கோலை கொண்டு காளான் வளர்ப்பு.

14. விளங்கால் உயிர் இழந்தால் இழப்பீடு ரூ. 2 00 000.
15. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை விரிவு படுத்த மாவட்டந்தோரும் மையங்கள் கொண்டு பயிற்சிகள் தருதல்.

16. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு உணவு உடை இருப்பிடம் உறுதிச்செய்யப்படும். தொடர்ந்து
17. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி 400000. அதில் 200000 மானியம்.


18. 2006 முதல் 2011 தொடங்கப்பட்ட உற்பத்தி திட்டங்கள் மூலம் 2012 புதிய மின்திட்டங்கள் தொடங்கி அமுல் படுத்துதல்.
19. சோலார் மின் உற்பத்தியை நடைமுறைப்டுத்துதல்.


20. ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மேம்படுத்தி தொடர்ந்து நடத்துதல்.
21.வெள்ள நீரை ‌சேமிக்க புதிய தி்டடங்கள்.


22.மீனவர் இயற்கை சீற்றத்தில் ஏற்படும் இழப்பீட்டு தொகைக்கு ஈடுகட்ட புதிய காப்பீட்டு முறை அறிமுகம் செய்து உதவிசெய்தல்
23.  நாட்டுப்படகு மீனவர்களுக்கு 500 லிட்டர் மானிய விலையில் மண்ணென்ணை.


24. கச்சத்தீவுவை தமிழக மீனவர்கள் பயக்படுத்த உரிமையை பெற்றுத்தர பாடுபடுதல். இத்தீவை திரும்ப பெற நடவடிக்கை.
25.ஆடு. மாடு, கோழி வளர்ப்புக்கு மானியத்துடன் கூடிய கடன்


26. சாண எரி வாயு அமைக்க மானிய கடன் உதவி.
27. மதுரையில் மனநல மருத்துவமனை, காச நோய மருத்துவ‌மனை அமைத்தல்.


28 மாட்டந்தோரும் அரசு கல்லூரிகள்
29. உயிர் காக்கும் திட்டம் மேலும் சிறக்க வழி 


30. நடக்க முடியால் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டுக்கே சென்று மருத்துவ உதவி.


31. சமச்சீர் கல்வி முறை அமுல்
32. அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 சீறுடைகள் இலவசம்


33. அனைத்து மாவட்டத்திலும் பல்கலைகழகங்கள்..
34. முதலாம் ஆண்டு படிக்கும் அரசு கல்லூரி sc மாணவர்களுக்கு லேப்டாப்.

35. 2006-2011 கல்விக்கடன் வட்டியை அரசு ஏற்றுக்கொள்ளும்
36. மாவட்டந்தோறும் செவிலியர் கல்லூரிகள்


37 அந்திய முதலீடுகள் அதிகம் இழுக்கப்படும்
38. சேதுகால்வாய் திட்டம் மீண்டும் துவங்க வழிச்செய்ய பாடுபடுவோம்.


39. ஆண்டுதோரும் மாவட்டந்தோரும் பொங்களல் விளையாட்டு போட்டிகள்
40.மெட்ரோ ரயில் மாமமல்லபுரம், திருபெரும்பூதுர் வரை விரிவுபடுத்தப்படும்


41. மினிபஸ் அதிக அளவு இயக்கப்படும்.
42.முதியோர் ஆதரவுஅற்றோர் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி தொகை மாதம் ரூ. 750.

43. கூட்டறவு சங்ககங்களில் தொடர்ந்து வேலை ‌ செய்யும் நெசவாளிகளுக்கு ஓய்வு ஊதியம் ரூ. 400.
44. ஆதிதிராவிட கிருஸ்துவர்களை SC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை


45. சென்னை பல்கலை-யில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இடஒதிக்கடு.
46. ஆதிதிராவிட, மலைவாழ் மக்களுக்கு நல வாரியம்


47. சாக்கடையை சுத்தம் செய்ய நவீன இயந்திரங்கள்.
48. திருநங்கைகளுக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க நடவடிக்கை


49. கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகளுக்கு இனி ரு. 100000 வழங்கப்படும்.
50. குடும்பத்தில் உள்ள முதல் பட்டதாரிகளுக் அரசு வேலையில் முன்னுரிமை


51. கல்வி நிறுவன விடுதிகளில் மாற்று திறனாளிகளுக்கு தனி இடங்கள்
52. சாலை மேம்பாலங்கள்  அதிக அளவில் அமைக்கப்படும்


53. அரசு ‌ வேலை  செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 4 மாதம்.
54. ரூ 1. அரிசி தொடர்ந்து செயல்படும். மற்றப்பொருள்கள் மானியவிலையில் தொடர்ந்து வழங்கப்படும்


55. குடும்ப அட்டைதாரர்களுக்கு அயோடின் கலந்த ‌1 கிலோ உப்பு மானிய விலையில்.
56. விடுபட்ட அனைவருக்கும் டிவி.  கேஸ் இணைப்பு


57. ஏழை பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ. 30000
58. கர்பிணி பெண்களுக்கான உதவி தொகை ரூ. 10000


59. அனைத்து தாய்மார்களுக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி.


ஆகிய அறிக்ககைகளை கருணாநிதி வெளியிட்டார்..



நண்பர்களே இந்த தகவர் டிவி பார்த்துக்கொண்டு அப்படியே கொடுத்திருக்கிறேன். எழுத்து பிழை இருந்தால் மன்னிக்க..
சில தகவல்கள் விடுபட்டிருக்கலாம்..


நன்றி..

Thursday, March 17, 2011

விஜயகாந்த் தலைமையில் 3 வது அணி .. கட்சிகள் விவரம்!


விஜயகாந்த் தலைமையில் 3 வது அணி அமைந்தால் இணையும் கட்சிகள் 

மதிமுக, 
தேமுதிக, 
இந்திய கம்யூனிஸ்ட், 
மார்க்சிஸ்ட், 
புதிய தமிழகம், கட்சிகள் சேரலாம். 
மேலும் 

முமுக, 
பார்வர்டு பிளாக், 
புரட்சி பாரதம் 

ஆகிய கட்சிகளும் இணையலாம். இந்நிலையில் 3 வது அணியில் ஒரே தேர்தல் அறிக்கை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Wednesday, March 16, 2011

தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடையாது..


தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்குமாறு கூறி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.

தேமுதிக மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கும் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே, ஆனால் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் கிடையாது. எனவே இவற்றுக்கு சுயேச்சைகளுக்கான சின்னமே ஒதுக்கப்படுகிறது.

தேமுதிக ஆரம்பித்தது முதல் கடும் சிரமப்பட்டு முரசு சின்னத்தை பெற்று போட்டியிட்டு வந்தது. அப்படி கிடைக்காத போது முரசு சின்னம் யாருக்கு கிடைத்ததோ அவர்களை தேமுதிக வேட்பாளராக அக்கட்சி அங்கீரித்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது முரசு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேமுதிக உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்காலிக ஏற்பாடாக தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டது. அதன்படி முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிட்டது.

இந்த நிலையில் இந்த சின்னத்தை நிரந்தரமாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியது தேமுதிக. அதேபோல நட்சத்திர சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகளும், சிலிண்டர் சின்னம் கோரி கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் மற்றும் மனித நேய மக்கள்கட்சியும் மனு செய்தன.

இந்த மனுக்களுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தேமுதிக லோக்சபா தேர்தலில் அனைத்துத்தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த ஒரு கட்சி. மேலும் சட்டசபைத் தேர்தலிலும் கூட ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சி வென்றது. எனவே அக்கட்சிக்கு தனிச் சின்னத்தை ஒதுக்க முடியாது. மேற்கண்ட நான்கு கட்சிகளுமே சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவத்துடன் இல்லை. எனவே இவர்களுக்கு தனிச் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியிருந்தது.

இதையடுத்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, குறிப்பிட்ட சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. நான்கு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை அணுகி தீர்வு காண வேண்டும். இந்த கட்சிகள் தாக்கல் செய்யும் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி விட்டது.

இதன் மூலம் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. தேமுதிகவை டெபாசிட் இழந்த கட்சி என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம்கூறியுள்ளதால் முரசை ஒதுக்காது என்றே தெரிகிறது. இதன் மூலம் தேமுதிகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பொதுவாக கூற முடியாத நிலைமைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...