Sunday, April 22, 2018

TIme Loop திரைப்படங்கள் பிடிக்குமா உங்களுக்கு ?


ஒரு சிலருக்கு time loop என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜிக் அதுதான் முன்னமே இந்த கேள்வியை கேட்டுவிட்டேன் , என்னடா இது நடந்ததே திரும்ப திரும்ப நடந்து கொண்டிருக்கின்றதே என்றொரு நிலைக்கு ஒரு சிலர் செல்வதுண்டு அதனாலே அவர்களால் இவ்வாறான கான்சப்ட் இல் எடுக்கும் படக்கங்களை ரசிக்க முடியாமல் போய்விடும் , Edge of Tomorrow திரைப்படத்தை ஒரு சிலர் ரசிக்க முடியவில்லை என்பதை பார்த்திருக்கிறேன் , time loop கான்சப்ட் திரைப்படங்கள் பிடிக்கும் என்றால் இது உங்களுக்கான ஒரு திரைப்படமே…

Jun-young (வாயில் நுழையாத பெயர் தான் , என்ன செய்வது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்) ஒரு பிரபலமான டாக்டர் , வெளி ஊரில் charity வேலைகள் செய்து விட்டு , மீண்டும் நாட்டுக்கு திரும்புகின்ற ஒருவர் , இப்போது இவரது கனவு எல்லாம் தனது மகளை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே..

ஒரு வழியாக நாட்டுக்கு வந்து அப்படியே மெர்சல் விஜய் போல ஏர் போர்ட்டிலேயே ஒரு உயிரை காப்பாற்றி விட்டு( பிற்குறிப்பு இதில் ஹீரோயிசக் காட்சிகள் கிடையாது , ஒரு டாக்டர் என்ன செய்வாரோ அதை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பார்கள் வீணாக பீதியடைய வேண்டாம்) , தனது மகளை சந்திக்க செல்லும் போது வழியில் ஒரு டாக்ஸி ஆக்சிடண்ட் ஆகி , அதன் ட்ரைவர் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க , உடனே அவனுக்கு முதலுதவி செய்துவிட்டு , தனது மகளுக்கு தான் வருவதற்க்கு கொஞ்சம் லேட் ஆகும் என்பதை தெரிவிக்க , ஒருத்தன் போன் காலை ஆன்சர் செய்து , உங்கள் மகள் ஆக்சிடன் ஒன்றில் மாட்டிக் கொண்டால் என்று சொல்ல , உடனே போனை கட் செய்து விட்டு அப்படியே ரைட் சைடில் ஒரு லுக் விட எதிரே டாக்ஸி ட்ரைவர் இடித்தது தன் மகளைத்தான் என்று அறிந்து கொண்டு அவளை ஓடிச்சென்றூ பார்க்க அவள் இறந்து விட்டாள் என்பதை டாக்டர் அறிந்து கொண்டு அடுத்த நிமிடமே , டைம் லூப் பிரச்சனை தொடங்குகின்றது..

இப்போது மீண்டும் Jun-young ப்ளைட்டில் இருந்து கண் முழிக்கின்றார் , ஏற்கனவே நடந்த அனைத்தும் திரும்ப நடக்கின்றது , இந்த முறை மகளை காப்பாற்ற முயற்சி செய்து தோற்றுப் போக , திரும்பவும் முதலில் இருந்து எல்லாம் நடக்க தொடங்குகின்றது , இப்படியே போய் கொண்டிருக்க இந்த டைம்லூப் டாக்டருக்கு மட்டும் அல்ல அங்கு இன்னும் ஒருவனுக்கு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை டாக்டர் அறிந்து கொள்கின்றார் , மற்றையவனின் மனைவி ஆக்ஸிடண்ட் ஆகிய டாக்ஸியில் பயணித்தவல் ஆக்ஸிடண்டில் அவளும் இறந்துவிட்டிருப்பாள் , இப்போது இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதை தடுக்க முயற்சிக்கிறார்கள் , ஒருத்தன் மகளை காப்பாற்ற வேண்டும் , இன்னும் ஒருவன் மனைவியை காப்பாற்ற வேண்டும்.

இப்படியே கதை தொடர இதே டைம்லூப்பினால் மூனாவதாக ஒருத்தனும் பாதிக்கப் பட்டிருப்பான் , அவன் யார் , இவர்கள் மூவருக்கும் என்ன சம்மந்தம் , ஏன் இதெல்லாம் நடக்கின்றது , இவர்கள் காப்பாற்ற நினைத்தவர்களை காப்பாற்றினார்களா என்பதையெல்லாம் படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

a great script.

நன்றி. முகநூலில்...Aashik Stark

விவசாய போராட்டங்கள் நாடகம்தானா....!
நான் திருத்துறைப்பூண்டி வட்டம், குன்னுார் கிராமத்தில், விவசாயம் செய்து வருகிறேன்.என் பாட்டனார் காலத்தில், நல்ல நேரம் பார்த்து, விவசாயத்தில் நல்ல விளைச்சல் வர வேண்டும் என, விதை முகூர்த்தம் செய்வர். 

அதன்படி, விதை தெளித்தல் முதல், அறுவடை வரை பணிகள் நடைபெறும்; அவர்கள் நினைத்தபடி, நல்ல மகசூலும் கிடைத்தது.இன்று, விவசாயத்தை பெரும் பொருட்டாக, விவசாயிகள் நினைப்பது இல்லை. விதை தெளிக்கும்போதே, நஷ்டஈடு, நிவாரணம் வாங்க வேண்டும் என தான் விதைக்கின்றனர். 

விவசாயிகளின் போக்கிற்கு ஏற்ப, அரசும் செயல்படுகிறது. தமிழகத்தில், விவசாயிகள் மீது, அக்கறை உள்ளவர் போல் அய்யாக்கண்ணு, பாண்டியன், மாசிலாமணி என, ஆளுக்கு ஒரு அமைப்பை வைத்துள்ளனர். 
'டிவி'க்களில் இஷ்டத்திற்கு அவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். 
உண்மையாக, விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும், அக்கறை இருந்தால், முதலில் தமிழகத்தில் காணாமல் போன, காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் இவற்றை அவர்கள் கண்டுபிடிக்கட்டும்!

திருச்சியில், காவிரி ஆற்று மணலில் கழுத்தளவு புதைந்து, அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் எத்தனை ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டுள்ளன... ஏரி, குளங்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி விட்டன என்பது, அவருக்கு தெரியுமா...

தமிழகத்தில், திருமலைராஜன், வெட்டாறு, குடமுருட்டி, வெண்ணாறு, மரைக்கா கோரையாறு, பாமணி ஆறு, கோரை ஆறு, அடப்பாறு, முள்ளியாறு, திருவாரூர் ஓடம்போக்கி ஆறு, சென்னையில் கூவம், அரசலாறு, காவிரி, உப நதிகள், கொள்ளிடம் மற்றும் உபநதிகள் ஆக்கிரமிப்புகளால் மூழ்கி உள்ள, ஆறுகளின் பட்டியல் நீண்டபடி உள்ளன.

எந்த ஆற்றிலாவது தண்ணீர் ஓடுகிறதா... அதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை, அய்யாகண்ணு உள்ளிட்ட, அவருடன் போராடுவோர் கண்டறிந்து, பின் காவிரிக்கு வர வேண்டும்; வெத்து போராட்டங்கள் என்றும் வெல்லாது!மாநிலத்தில் நீர் நிலைகளை காப்பாற்ற, உருப்படியான ஐடியாக்களை, அரசுக்கு தெரிவித்து, உறுதுணையாக இருக்க பாருங்கள்! (நி.சங்கர், திருத்துறைப்பூண்டி)

Saturday, April 21, 2018

மெர்க்குரி சினிமா விமர்சனம்வேண்டாவெறுப்பா புள்ளைய பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வச்சானாம். அதுபோல கார்த்திக் சுப்பராஜ் தற்குறித்தனமாக இயக்கியிருக்கும் படம்தான் மெர்க்குரி.

1987 ஆம் வருடம் கமல் நடிப்பில் வெளியானது 'பேசும் படம்'.  இயக்கம்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். அக்மார்க் ப்ளாக் காமடி. சப் டைட்டில் இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே பின்னணி இசையை ஒலிக்க விட்டிருப்பார் எல்.வைத்யநாதன். சின்ன கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்கும். ஆனால் இங்கே...அனைத்தும் தலைகீழ்.

மெர்குரி ஆலையின் விஷக்கசிவால் கேட்கும் - பேசும் திறனை இழக்கும் பள்ளி  நண்பர்கள் இடைவெளி விட்டு மீண்டும் சந்திக்கிறார்கள்.  இக்கொடூர விபத்தில் இறந்தோரின் கல்லறைகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த ஐவரும் காரில் செல்கிறார்கள். அங்கே எதிர்பாராத சிக்கலில் மாட்டி, பிறகு எப்படி தப்பிக்க முயல்கிறார்கள் என்பதுதான் கதை.

30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு சைலன்ட் மூவி என்று பில்ட் அப் தந்ததில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களின்  ஒவ்வொரு அசைவிற்கும் சப் டைட்டில் போட்டு கொல்கிறார்கள். போதாக்குறைக்கு வாங்கிய காசுக்கு மேல் வாசித்து அறுக்கிறார் சந்தோஷ் நாராயண். இதுதான் உங்கள் ஊரில் சைலன்ட் படமா?

ஐந்து பேருக்குமே ஒரே மாதிரியான குறைபாடு, காதல் கத்தரிக்காய், புல்லரிக்கும் பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக்... அடங்கொய்யால!!

இதுபோக இன்னும் ஒரு டஜன் அபத்தங்கள் உண்டு.

மொத்தம் 109 நிமிடங்கள் ஓடும் படத்தில் முதல் பாதி புஸ்வாணம். அதன்பிறகு சப்டைட்டில் மற்றும் பின்னணி இசையின் இம்சை குறைந்ததே என்று சந்தோஷப்பட்டால்.... ஹெச். கூஜா போல கத்தி கத்தியே உசுரை எடுக்கிறார் பிரபுதேவா.

ஒரு வீடு, ஒரு இத்துப்போன ஃபேக்டரி செட், தக்காளி சாதம் போட்டாலே மொத்த ஷூட்டிங்கிற்கு வர ரெடியாக இருக்கும் ஐந்து நபர்கள். இதை வைத்தே மொத்த படத்தையும் ஒப்பேத்தி விட்டார் இயக்குனர் கா.சு.

Don't Breath (2016) ஆங்கில படத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே சுட்டு இங்கே இறக்கிவிட்டு... கதை மற்றும் கதாபாத்திர சமாச்சாரங்களில் டக்கால்டி வேலையை காட்டி விட்டார் பீட்சா பையன்.

பீட்சா சூப்பர். ஜிகர்தண்டா சுமார். இறைவி மொக்கை. மெர்க்குரி படுமொக்கை. அடுத்த படமாவது உருப்படியாக எடுங்க பெரியதம்பி.

மெர்க்குரி 0.5/5
விமர்சனம்.. முகநூலில் Ag Sivakumar

Friday, April 20, 2018

அறுசுவையும்.... அறியாத தகவல்களும்...


காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Thursday, April 19, 2018

உங்களுக்கும் வரலாம்... பெண்களே உஷார்....இன்றைய தினம் இளம் பெண்களை அதிகமாகப் பாதிக்கிற ஹார்மோன் பிரச்னைகளில் தைராய்டு ஹார்மோன் பிரச்னை முன்னிலை வகிக்கிறது. தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. 


இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இதன் இயல்பான எடை 12 லிருந்து 20 கிராம் வரை இருக்கும். இந்த எடைக்கு மேல் அதிகமானால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று பொருள். அப்போது நோயாளியானவர் உணவை விழுங்கும்போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். 

தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு சுரப்பி, தைராக்சின்(T4), டிரைஅயடோதைரோனின் (T3) எனும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இவற்றில் தைராக்சின் செய்யும் பணி முக்கியமானது. தைராய்டு செல்களில் `தைரோகுளோபுலின்’ எனும் புரதம் உள்ளது. இதில் `டைரோசின்’ எனும் அமினோ அமிலம் உள்ளது. 

தைராய்டு செல்கள் ரத்தத்தில் உள்ள அயோடின் சத்தைப் பிரித்தெடுத்து, டைரோசினோடு இணைத்து, தைராக்சின் ஹார்மோனை சுரக்கின்றன. ரத்தத்துக்கு தைராக்சின் ஹார்மோன் தேவைப்படும்போது, அதை அனுப்பி வைக்கின்றன. மற்ற நேரங்களில், அதை தைரோகுளோபுலினில் சேமித்து வைக்கின்றன. இத்தனை செயல்பாடுகளையும் முன்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் `தைராய்டு ஊக்கி ஹார்மோன்’ (TSH) கட்டுப்படுத்துகிறது. 

தைராக்சின் பணிகள்

கருவில் உள்ள குழந்தையின் 11வது வாரத்திலிருந்து சுரக்கத் தொடங்குகின்ற தைராக்சின் ஹார்மோன், அப்போதிலிருந்தே உடலிலுள்ள செல்களின் இயக்கத்தையும், வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்கு தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதி

வினைகள் புரிவதற்கு தைராக்சின் தேவை. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை முடுக்குவது தைராக்சின். புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக்கூழிலிருந்து குளுக்கோஸை பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன்தான். இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. 

மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பதும் தைராக்சின் ஹார்மோன்தான். உடல் செல்களில் பல நொதிகள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது. 

இவ்வாறு உடலின் அன்றாட தேவைக்கு ஏற்ப, கூட்டியும் குறைத்தும் சுரந்து, கருவில் வளரும் குழந்தை முதல் முதிய வயது வரை, அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துல்லியமாக செய்து முடித்து, உடலைப் பேணி இயக்கும் உன்னதமான ஹார்மோன், தைராக்சின். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சியடையாது என்றால் மிகையில்லை. 

குறை தைராய்டுதைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை... உடல் சோர்வு, உடல் தளர்வு, சாதாரண வெப்பத்தைக்கூட குளிர்ச்சியாக உணர்வது, குளிர் தாள முடியாமல் போவது, முடி கொட்டுவது, உலர்ந்த தோல், தோலில் அரிப்பு, பசி குறைவது. அதே நேரத்தில் எடை அதிகரிப்பது, ஞாபக மறதி, மலச்சிக்கல், அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, கருத்தரிப்பதில் பிரச்னை, மூட்டுவலி. 

இப்படிப் பல பிரச்னைகள் குறை தைராய்டு உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் என்றாலும், உடனே பயந்துவிட வேண்டாம். வேறு சில நோய்களிலும் இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு ஏற்படுவதுண்டு. அதே நேரம், டாக்டரை கலந்து ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, தைராய்டு நோயை உறுதி செய்யவும் தயங்க வேண்டாம். 

குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோா்த்துக் கொண்டு பருமனாவதும், குரலில் மாற்றம் ஏற்படுவதும், தோல் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியத் தடயங்களாகும்.ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

தைராய்டு நோயாளிக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாகவே வெளியில் தெரியவரும். என்றாலும், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் குறை தைராய்டு நோய்க்கு `மிக்சிடீமா’ (Myxoedema) என்று பெயர். இதுவே குழந்தைகளுக்கு ஏற்படுமானால், அதைக் `கிரிட்டினிசம்’ (Cretinism) என்று அழைக்கின்றனர்.என்ன காரணம்?அடிப்படையில் உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் `குறை தைராய்டு நோய்’க்கு முக்கியக் காரணம். 

இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு இப்படித்தான் தைராய்டு பிரச்னை உருவாகிறது. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனை சுரக்க முடியாது. 

பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது காணப்படும். அதற்கு ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre) என்று பெயர். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease). 


குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Anti bodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு நோய் உண்டாகிறது. 

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுதல், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சையால் அகற்றுதல், முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைதல் போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு நோய் வரலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படும். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு காரணம்தான். பெற்றோர் யாருக்காவது குறை தைராய்டு இருந்தால், வாரிசுகளுக்கும் அது வர வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கும் குறை தைராய்டுபிறந்த குழந்தைக்கும் குறை தைராய்டு (Cretinism) ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறந்தவுடன் குழந்தை வீறிட்டு அழவில்லை என்றால், மூன்று நாட்களில் தாய்ப்பால் அருந்தவில்லை என்றால், குட்டையாக இருந்தால், மூக்கு சப்பையாக இருந்து, நாக்கு வெளித்தள்ளி, வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கம் காணப்பட்டால், அந்தக் குழந்தைக்குக் குறை தைராய்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

பொதுவாக, குழந்தைக்கு வயது ஏற ஏற அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். ஆனால், குறை தைராய்டு உள்ள குழந்தைக்கு `வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டு திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது போன்ற வளர்ச்சி நிலைகளில் பாதிப்பு ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தநிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றும்.

பள்ளி வயதில் அதன் அறிவு வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்தங்கும். முக்கியமாக, கற்றலில் குறைபாடு கள், நினைவாற்றலில் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை 
உடனடியாக டாக்டரிடம் காண்பிப்பது அவசியம். அலட்சியமாக இருந்தால், குழந்தை எப்போதுமே மந்த புத்தியுடன்தான் இருக்கும். காலத்தோடு கவனித்து, தகுந்த சிகிச்சை பெற்றால், குழந்தைக்கு நோய் குணமாகும்.

காரணம் என்ன?

கருவில் குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன் சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்குக் குறை தைராய்டு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது. 

கர்ப்ப காலத்தில் தாய்க்கு அயோடின் சத்து கிடைக்காமல், தாயின் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, சில அறிகுறிகள் தென்படும். அதாவது, முடி உதிர்வது, உடல் பருப்பது, தோலில் வறட்சி ஏற்படுவது, நெடுநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் தாய் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், குழந்தைக்குப் பிறவியிலேயே குறை தைராய்டு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மிகை தைராய்டுதைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த நிலைமைக்கு `மிகை தைராய்டு’ (Hyperthyroidism) என்று பெயர். இந்த நோய் உள்ளவர்களுக்குப் பசி அதிகமாக இருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். 

விரல்கள் நடுங்கும். விரல் நுனிகள் தடித்திருக்கும். உள்ளங்கை வியர்க்கும். அடிக்கடி மலம் போகும். அடிக்கடி சிறுநீர் கழியும். சிறிது கூட பொறுமை இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். பாலுறவில் விருப்பம் குறையும். திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இந்த நோயை `கிரேவ் நோய்’ (Grave’s disease) என்றும் அழைப்பதுண்டு. இதுவும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிக அளவில் பாதிக்கும். சுமார் இரண்டு சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. முக்கியமாக, 20 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். 

அயோடின் உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு மிகை தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியில் கட்டிகள் தோன்றினாலும், முன்பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி தோன்றும்போதும் இந்த நோய் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள் 

ரத்தத்தில் டிரைஅயடோதைரோனின் (T3), தைராக்சின் (T4), தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) ஆகிய மூன்று ஹார்மோன்களின் அளவைப் பரிசோதித்தால், நோயின் நிலைமை தெரியவரும். இத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் முதலியவற்றின் மூலம் தைராய்டு சுரப்பியின் வடிவம், எடை, அளவு ஆகியவற்றை அளந்து, தைராய்டு பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். `ஐசோடோப் ஸ்கேன்’ பரிசோதனை தைராய்டு பாதிப்புகளை மிகவும் துல்லியமாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. 

சிகிச்சை முறைகள்

அயோடின் குறைவினால் வரும் முன்கழுத்துக்கழலை நோய்க்கு, அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின் பேரில், `எல்தைராக்சின்’(Eltraxin) மாத்திரையைச் சாப்பிட வேண்டும். மிகை தைராய்டு நோய் உள்ளவர்கள் `நியோமெர்க்கசால்’ (Neomercazole) மாத்திரையையும், `புரோபுரனோலால்’ (Propranolol) மாத்திரையையும் சாப்பிட வேண்டும். மருந்தின் அளவு, மருந்து தேவைப்படும் கால அளவு ஆகியவற்றை டாக்டர்தான் தீர்மானிக்க வேண்டும். 

நோயாளியானவர் இந்த மருந்துகளைச் சுயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யப்படும். அதுவே புற்றுநோயாக இருந்தால், அறுவை சிகிச்சையுடன் கதிரியக்கச் சிகிச்சையும் தேவைப்படும். இன்றைய நவீன அணுவியல் மருத்துவத்தில், `ரேடியோ அயோடின் ஐசோடோப்’ சிகிச்சை மூலம் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட தைராய்டு பாதிப்புகளைக் குணப்படுத்த முடியும். `அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, தைராக்சின் இல்லாமல் உடலில் ஒரு செல்லும் வளர்ச்சி அடையாது!
டாக்டா் கு.கணேசன்

பற்களும்.... சிரிப்பும்... ஒரு எச்சரிக்கை பதிவு


ஒருவரை பார்த்த முதல் நொடியில் நாம் அவரிடம் கவனிப்பது என்ன என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் சொன்ன பதில், அவர்களின் சிரிப்பு. ஆக, முகத்தில் முக்கியமாக இருப்பது பற்களும், சிரிப்பும்தான்.

பற்கள் என்றதும் நினைவிற்கு வருவது அழகான சிரிப்பு. பால் போன்ற வெண்மையான வரிசையான பற்கள். இப்படி அழகு சம்பந்தப்பட்ட பற்களை நாம் மனதில் வைத்துள்ளோம். ஆனால் பற்கள் அழகுக்கு உதவுவது அவற்றின் வேலையில் ஒரு சிறிய பகுதி. அழகை தாண்டி அவை செய்யும் வேலைகள் பல உண்டு.

பேச்சில் பெரும் பங்கு : சொற்களை சரியாக உச்சரிக்க மற்றும் சீராக பேசுவதற்கு பற்கள் மிகவும் முக்கியம். சொல் என்பது பல், நாக்கு, உதடு இவை மூன்றும் சேர்ந்து உருவாக்கும் ஓசை. வாயின் அமைப்பு, நாக்கின் நீளம், பற்களின் அளவு மற்றும் அமைப்பு இவை அனைத்தும் சொற்களை உருவாக்குவதில் பங்களிக்கின்றன. 

அதனால்தான் ஒவ்வொருவரின் பேச்சும், உச்சரிப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்று சரியாக இல்லாவிட்டால், பேசுவதில் தடை ஏற்படும். தெத்து பற்கள், கோணல் பற்கள், பற்கள் ஆடும்பொழுது அல்லது பற்கள் விழுந்து காலியாக இருந்தால் என அனைத்து சூழ்நிலையிலும் சொல்லின் உச்சரிப்பு மாறும். பற்களில் பலம் இல்லாமல் ஆடும்பொழுது நம்மால் வார்த்தைகளை சரிவர உச்சரிக்க முடியாது. சரியான இடத்தில் சரியான வரிசையில் பற்கள் இருப்பதும், பற்கள் இல்லாத இடத்தில் பற்கள் கட்டுவதும் ஒருவரின் பேச்சிற்கு அவசியமானது.

உணவை சுவைத்து ருசித்து சாப்பிட ஆசை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ருசியை நம்மால் எப்படி உணர முடிகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். உணவை வாயில் போட்டதும் கரைய தொடங்கும். பின்னர் உணவை அரைப்பதற்கு பற்களும், உமிழ்நீரும் சேர்ந்து உழைக்கும். 

உணவு அரைந்து அதில் நம் சுவை அரும்புகளில் உள்ள திரவங்கள் கலக்கும்பொழுதுதான் உணவின் சுவை மூளைக்கு சென்றடையும். உணவின் சுவையை நாம் உணர முடியும். சரியான பற்கள் இல்லையென்றால், உணவை முழுதாக மசிக்க முடியாது. இதனால் எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் அதன் முழு திருப்தி நமக்கு வராது. சாப்பிடுவதற்கு அடுத்த கட்டம் அதனை விழுங்குதல், அதாவது வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு அனுப்புதல்தான் உணவை விழுங்குவது என்று பொருள். உண்ணுவதும், விழுங்குவதும் அடுத்தடுத்து சரியான இடைவெளியில் நடக்க வேண்டும்.

 உணவை சரியான அளவு மசித்தபின் பற்கள் இறுக்கமாக மூடிக்கொண்டு நாக்கு நம் அன்னத்தின் மேல் அழுத்தினால்தான் உணவு வாயில் இருந்து உணவுக்குழாய்க்கு நகரும். உணவு மட்டுமல்லாது தண்ணீர் போன்ற திரவங்கள், மாத்திரை போன்ற கடினமான பொருட்கள் என பலவற்றை சரியான நேரத்தில் சரியான முறையில் விழுங்குவதற்கு பற்கள் உற்ற துணையாக இருக்கின்றன. வாயின் சுத்தத்தில் பற்களின் பங்கு என்ன என்பதை கண்டிப்பாக அறிய வேண்டும். 

எல்லா மனிதரும் காலை கண்விழித்த உடன் செய்ய வேண்டிய முதல் வேலை பல் துலக்குவது. வேப்பங்குச்சி, சாம்பல், செங்கல், பொடி, டூத்பேஸ்ட் , பிரஷ் என வடிவம் மாறினாலும் பழக்கம் ஒன்றுதான். நம் முன்னோர் காரணமின்றி எதையும் சொல்ல மாட்டார்கள். சுத்தம் செய்யாத பற்களின் மேல் ஒரு படலம் உருவாகும். அதில்தான் கிருமிகள் தங்க ஆரம்பிக்கும். இவற்றை சரியாக அகற்றாவிட்டால் பல் சொத்தை, ஈறு நோய் போன்றவற்றை உருவாக்கும். எனவே பற்களை சுத்தமாக வைப்பதன் மூலம் வாயின் சுத்தமும் பாதுகாக்கப்படுகிறது.
முகத்தின் சமவிகிதம் : மனித முகம் மூன்று சம பங்காக பிரிக்கப்படுகிறது. 

தலை உச்சியில் இருந்து புருவம் வரை முதல் பாகம். புருவத்தில் இருந்து மூக்கின் நுனி வரை இரண்டாம் பாகம். மூக்கின் நுனி முதல் வாய் நாடி வரை மூன்றாம் பாகம். இந்த மூன்று பாகங்களும் சரியான சமவிகிதத்தில் இருப்பதுதான் இயற்கை. இதில் ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் இயற்கை விகிதங்களை உட்பட்டுதான் இருக்கும். பற்கள் இல்லாமலோ அல்லது பற்கள் சரியான வரிசையில் இல்லாவிட்டாலோ, முகத்தின் மூன்றாவது பாகம் மற்ற இரண்டு பாகங்களோடு ஒத்துப்போகாது. இதை சரிசெய்யாவிட்டால் ஒருவரின் முகத்தோற்றமே மாறிவிடும். 

சரியான பல் வரிசை முகத்தின் சமவிகிதத்தை தக்க வைக்க முடியும். எலும்பின் பலம் பற்களின் பலத்தை பொறுத்தே தாடையில் எலும்பின் அளவு இருக்கும். எப்படி மரத்தின் வேர்கள் மண்ணை அரிக்காமல் பிடித்துக்கொள்ளுமோ, அதேபோல்தான் பற்களும் அதைச்சுற்றி உள்ள எலும்பை தேயாமல் பிடித்து வைத்துக்கொள்ளும். பல் இல்லாத வாயில் வேர் இல்லாத மண் போல சிறிதுசிறிதாக எலும்பின் அளவு குறைந்துவிடும். இதனால் தாடையே வலுவிழந்துவிடும். இதனால்தான் விழுந்த பற்களை உடனடியாக கட்டுவது அவசியம். சரியான இடத்தில் பற்கள் நிலையாக இருப்பது தாடை எலும்பின் பலம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.


உடல் ஆரோக்கியம் : வாயே நம் உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடி. ஒருவரின் உடல் உபாதைகளில் முக்கியமான பலவற்றை அவரின் பற்களையும், வாயையும் பார்த்தே கணித்துவிடலாம் என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. வாய் துர்நாற்றம் அனைவராலும் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் ஒன்றாகும். ஆனால் இவை வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதைவிட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறுகள் அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும், வாய் எரிச்சலும் ஏற்படும். ஆக, நம் உடலில் ஏற்படும் பல வகை நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும், உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.


குறட்டைக்கு குட்பை : உறங்கும்போது சுவாசக்குழாய்களில் ஏற்படும் தடைகளினால் வரும் சத்தமே குறட்டை. பற்கள் நேரடியாக குறட்டைக்கு காரணமாக முடியாது. ஆனால், சில பிரச்னைகளால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். அதாவது ஞானபற்கள் முளைக்கும் முன்னர் தாடையில் வீக்கம் ஏற்பட்டால், அதனால் குறட்டை அதிகம் ஆகலாம். கீழ்த்தாடை தலையுடன் சேரும் இடத்தில் தேய்மானம் ஏற்பட்டாலோ, துாங்கும்பொழுது நாக்கு சுவாசக்குழாய்க்கு தடையாக இருந்தாலோ குறட்டை வரலாம். இவ்வாறு வரும் குறட்டையை கட்டுப்படுத்த பற்கள் மற்றும் வாயினால் முடியும். இதற்கு அவரவர் அளவிற்கேற்ப வாயில் ஒரு சாதனம் பொருத்த வேண்டும். அது சுவாசக்குழாய்க்கு எந்த தடையுமின்றி காற்றுப்போக வழிவகுக்கும். 

இதை குறிப்பிட்ட காலம் உபயோகப்படுத்தினால் குறட்டை தொல்லையில் இருந்து விடுபடலாம். பற்களின் மூலம் கழுத்து வலி ஏற்பட 3 காரணங்கள் உண்டு. ஒன்று ஞானப்பற்கள் எனப்படும் கடைசி கடவாய் பற்கள். சிலருக்கு தாடை எலும்புக்குள் புதைந்து இருக்கும்.

 இதைச்சுற்றி கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டால் கழுத்து வலி போன்று தெரியும். இரண்டாவது கீழ் பற்களில் வெகு நாட்களாக கவனிக்கப்படாத சொத்தை மூலம் சீழ் உண்டாகி, அது கழுத்து வரை பரவும் பொழுது கழுத்தில் வலி தெரியும். மூன்றாவதாக பற்களில் சொத்தையே இல்லாமல் கூட பற்களை அதிகம் கடிப்பவர்களுக்கு தாடை எலும்பில் சாதாரண அளவைவிட அதிகமாக அழுத்தம் உண்டாகும். தாடை சார்ந்த தசைகள் கழுத்திலும் உள்ளன. இதனால் கழுத்தில் உள்ள தசைகளிலும் வலி வரும். 

பற்களை சரிசெய்தால் அதனால் ஏற்படும் கழுத்து வலியும், தலை வலியும் சரியாகிவிடும்.
தன்னம்பிக்கை தரும் பற்கள் : கோணலாக அல்லது தெத்து பற்கள் இருப்பவர்கள், முன் பற்களின் நடுவே இடைவெளி இருப்பவர்கள்,பற்கள் இல்லாமல் இருப்பவர்கள், அது தெரியாமல் இருக்க பற்கள் தெரியாமல் பேசவும் சிரிக்கவும் செய்வார்கள். இதுதொடர்ந்தால் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். நம்மையும் அறியாமல் மற்றவர்களுடன் பேசுவதை குறைக்க நேரிடும். நன்றாக பேசுபவர்கள் திடீரென வெளிஇடங்களுக்கு வர தயங்குவார்கள்; பிறரை சந்திப்பதை தவிர்ப்பார்கள். 

இவை எல்லாம் தேவை இல்லாத பயம். எந்த நிலையிலும் பற்களை சரிசெய்து நிலையான பற்களை பொருத்தலாம். இதன்மூலம் இழந்த சிரிப்பையும் தன்னம்பிக்கையையும் பெறலாம். பற்களின் பலத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து, பற்களின் பாதுகாப்பில் தேவையான நேரத்தில் தேவையான அக்கறை செலுத்தினால் உடலும் மனதும் வளம் பெறும்.
நன்றி-டாக்டர் ஜெ. கண்ணபெருமான்,மதுரை. 94441 54551

Wednesday, April 18, 2018

இந்த படம் ஏன் ஆஸ்கார் ஜெயித்தது?


The Shape of Water படத்தை பற்றி நான் படித்த முக்கால்வாசி பதிவுகள் “இந்த படம்லாம் எப்படி ஆஸ்கார் ஜெயிச்சுது”, “இதற்கு போய் ஏன் ஆஸ்கார் கொடுத்தார்கள்” என்ற ரீதியில் கேள்விகள் எழுப்பியவைகளாகவே இருந்தன. சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்தேன். இந்த படம் எப்படி இருக்கு என்பதை எழுதுவதை காட்டிலும், மேலே கேட்ட கேள்விகளுக்காக, படத்தோட context பற்றி, இது ஏன் சிறந்த படம் விருது வாங்கியதுங்கிறத பற்றி எழுதலாம்னு தோணிச்சு. அதோட, இந்த படத்தோட ஆஸ்கார் வெற்றி பற்றி மட்டும்தான் எல்லாரும் பேசுறாங்க . ஆனா இந்த படம் முப்பெரும் film festivalகளில் ஒன்றான வெனிஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான Golden Lion விருதினை ஆஸ்காருக்கு ஆறு மாதங்கள் முன்னே ஜெயித்துவிட்டது. அதை பற்றி யாரும் பேசியது போல தெரியவில்லை. இன்னமும் ஆஸ்கர்தான் உச்சம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமா? :) ஆஸ்கரையாவது Hollywood, வணிகம், capitalist propaganda, narcisstic paradeனு எதையாவது குறை சொல்லலாம். But Venice Golden Lion ? இந்த படத்தை சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் கொண்டாடுவதன் காரணம்?


நல்ல சினிமா என்றாலே அது ஸ்லோவான drama படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஒருவித elitist மனப்பான்மை என்கிற கருத்து சமீபகாலமாக மேற்கத்தைய சினிமா வட்டாரங்களில் கொஞ்சம் மேலோங்கி வருகிறது. நேர்மையாகவும் தரமாகவும் இருக்கும் பட்சத்தில் Genre சினிமா எனப்படும் ஒரு குறிப்பிட்ட conventionகளுக்கு உட்பட்டு வரும் படங்களுக்கு என்ன குறைச்சல், அவைகளையும் பாரபட்சம் பார்க்காமல் விருதுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்கிற கருத்தை தற்போது நிறைய பார்க்கலாம். Mad max fury road, Arrival, Get out, Shape of water, Logan போன்ற genre படங்களின் விருது விழா பங்கேற்பு இந்த கருத்தை ஆமோதிப்பதையும்காணலாம்.

மேலும், என்னதான் தற்போதய ஹாலிவுட் சினிமாவை குறைகூறினாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு Golden Age of Hollywood எனப்படும் (1930-60) காலகட்ட ஹாலிவுட் படங்கள் மேல் என்றுமே மதிப்பும் காதலும் இருக்கும். தற்போது சினிமா துறையில் நிறைய பேரை inspire செய்த காலகட்டம் அது. இந்த Shape of water படம், 1950களில் ஹலிவுட்டில் வந்த Creature from the Black Lagoon (1954), It Came from Beneath the Sea (1955), The Giant Behemoth (1959) போன்ற sea monster படங்களின் டைரக்ட் inspiration. படம் நடக்கும் காலகட்டம், அணுகுண்டுகளால் mutate ஆகி பெருகிவரும் புது creatures, coldwar tension,ரஷ்ய உளவாளிகள், ரகசிய ஆராய்ச்சி கூடம், one dimesional வில்லன் என அந்த படங்களின் tropes இதில் ஏகப்பட்டது இருக்கும். கூடவே ஏகப்பட்ட கிளாசிக் ஹாலிவுட் படங்களின் homage / referenceகளையும் இந்த படத்தில் காணலாம். குறிப்பாக படத்தில் வரும் அந்த கனவு நடன காட்சி ஹாலிவுட் மியூசிக்கல் படங்களின் legendகளான Fred Astire - Ginger Rogers நடித்த Follow the Fleet (1936) பட நடன காட்சியின் மறு உருவாக்கம்.


மேலே கூறிய referenceகளோடு மட்டும் நிற்காமல் இன்றைய காலகட்டதிற்கேற்ப கதயமைப்பை மாற்றியதும் படத்தின் புகழுக்கு காரணம். உதாரணத்திற்கு strong female characterization. மேலே சொன்ன படங்களில் monsterகளிடமிருந்து பெண்ணை ஹீரோ காப்பாற்றுவார். அல்லது King Kong, Beauty and the Beast போன்ற நல்ல monster படங்களில் அந்த monster ஒரு பெண்ணை காப்பாற்றும். ஆனால் இங்கு அந்த monsterரையே ஒரு பெண்தான் காப்பாற்றுகிறார். அதற்கப்புறம், படத்திலிருக்கும் social outcast angle, racism, homosexual references, தன்னை விட தாழ்ந்தது என நாம் நினைக்கும் ஒரு இனத்திடம் நாம் காட்டும் வன்மம், Interracial romance போன்ற contemporary themesஸும் criticsஸை கவர்ந்ததற்கு ஒரு காரணம். இது தவிர Production Design, Cinematography (குறிப்பாக Color tone: Bold lead woman, homosexuality, technology, interracial romance போன்ற, படம் நடக்கும் காலகட்டத்தின்படி, futuristic conceptsகள் நிலவும் சீன்களுக்கு, “Green is the future” என்ற வசனத்தின்படி, green color tone அமைக்கப்பட்டிருக்கும். மற்ற சீன்களுக்கு குறிப்பாக வில்லனின் வீட்டில் நடக்கும் சீன்களுக்கு அந்த வண்ணம் இருக்காது. ஏனென்றால் அங்கு நடப்பவை எதுவும் எல்லாம் அந்த காலகட்டத்தோடு ஏறக்கட்டவேண்டிய past elements), நடிப்பு, இசை, இயக்கம் போன்ற அனைத்து துறைகளிலும் படம் சிறந்தே விளங்கியது.
இதெல்லாம் இபபடம் Venice மற்றும் பொதுவாக விமர்சகர்களிடையே வரவேற்பு பெற காரணம். ஆனால் இப்படம் ஆஸ்கார் வென்றதற்கு வேறொரு ஸ்பெஷல் காரணமும் தனியாக இருக்கிறது. Award seasonனை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். சிறிது காலத்துக்கு முன் சாதாரண members தேர்ந்தெடுக்கக்கூடிய விருதுகளான Golden Globes, BAFTA Awards போன்றவற்றில் வெற்றி பெரும் படங்களே பொதுவாக ஆஸ்காரிலும் வெற்றி பெறும். ஆனால் சமீபகாலமாக இவற்றில் வெற்றி பெறாத படங்கள் ஆஸ்காரில் Best Film விருது வென்றிருக்கின்றன. 2014ல் Boyhood, 2015ல் The Revenant, 2016ல் La la land, 2017ல் Three Billboards மற்ற academic விருது விழாக்களில் வெல்ல, ஆஸ்கரில் முறையே Birdman (2014), Spotlight (2015), Moonlight (2016), Shape of Water (2017) வென்றது. இந்த வேறுபாட்டிற்கு முக்கிய காரணம், சமீப காலமாக Best Film ஆஸ்கார் பிரிவுக்கு மட்டும் பிரத்யேகமாக பழக்கத்திலிருக்கும் Preferential Ballot முறை.
ஆஸ்கரின் மற்ற பிரிவுகளுக்கும் இதர academic விருது வழங்கும் விழாக்களின் எல்லா பிரிவுகளுக்கும், தேர்வு முறை ஒன்றுதான். நாமினேட் செய்த படங்களில் ஒரு படத்தை உறுப்பினர்கள் “சிறந்தது” என்று ஓட்டு போடவேண்டும். எது அதிக ஓட்டு பெற்றதோ அதுவே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் ஆஸ்கர் Best film பிரிவுக்கு மட்டும் உபயோகிக்கப்படும் இந்த Preferential Ballot முறைப்படி, உறுப்பினர்கள் நாமினேட் செய்யப்பட்ட அனைத்து படங்களையும் 1,2,3,4… என்று rank செய்யவேண்டும். எந்த படம் 50 சதவீதத்திற்கு மேல் 1st rank பெறுகிறதோ அதுதான் வின்னர். அப்படி எதுவும் மெஜாரிட்டி பெறவில்லையென்றால், கம்மியாக 1st rank பெற்ற படத்தை [உதாரணத்திற்கு Get Out படம்] eliminate செய்து விட்டு, Get Out படத்தை 1st rankகாக தேர்வு செய்தவர்கள் எந்த படத்திற்கு அடுத்த rank கொடுத்தார்களோ அந்தந்த படங்களுக்கு ஒரு ஓட்டு சேர்க்கப்படும். மறுபடியும் மெஜாரிட்டி செக்கிங், 50% இல்லையென்றால் மறுபடியும் elimination என்று மெஜாரிட்டி கிட்டும்வரை இந்த process தொடர்ந்து நடைபெறும். (கொஞ்சம் complicatedதான். May be இந்த வீடியோ பார்த்தால் ஓரளவிற்கு புரியலாம் https://www.youtube.com/watch?v=dPohsrs0cCA). இந்த முறையின் சாராம்சத்தின்படி, divisive movies எனப்படும் “மிகவும் விரும்பப்படும், இல்லை மிகவும் வெறுக்கப்படும்” வகையான படங்களை விட, பெரிதாக யாராலும் விரும்பப்படவில்லையென்றாலும், அனைவராலும் நல்ல படம் என்று பெயரெடுக்கக்கூடிய படங்களுக்கே வெற்றி பெற வாய்ப்பு அதிகம். அதாவது ஒரு படம் 49% 1st rank + 51% 10th rank பெற்றிருந்தது, இரண்டாவது படம் 45% 2nd rank + 55% 3rd rank பெற்றிருந்தால், இரண்டாவது படமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

Racist content மற்றும் சில காரணங்களுக்காக Three Billboards படம் சிலரால் வெறுக்கப்பட்டு கடைசி rank கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கிளாசிக் சினிமாவை காதலித்து அதன் பாணியில் அவற்றை போற்றி மரியாதை செய்யும் வகையில் வரும் நல்ல படங்களை, குறிப்பாக காதலை மய்யமாக கொண்ட nostalgic/fantastical படங்களை (E.g.: The Artist (2011), La la land(2016)), ஆஸ்கர் உறுப்பினர்கள் என்றுமே கைவிடமாட்டார்கள். அந்த வகையில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் விரும்பப்படாமல் போயிருந்தாலும், நிச்சயமாக யாருடைய வெறுப்பையும் சம்பாதித்திருக்க முடியாத Shape of Water படம், ஆஸ்கார் ஜெயிக்காமல் போயிருந்தால்தான் ஆச்சர்யமான விஷயமாக இருந்திருக்கும்.

முகநூலில்  TOM LEAZAK


Tuesday, April 17, 2018

பழங்கள் பற்றி இந்த விஷயத்தை தெரிஞ்சிகிட்டே ஆகனும....


1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும்

3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும்

5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி

6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப்போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.

8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும்.

11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

12. கொய்யாப்பழம் :- உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

13. பப்பாளி :- மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். 

மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

14. செர்ரி திராட்சை :- கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

15. அன்னாசி :- அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது. 

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

16. விளாம்பழம் :- விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

17. மாதுளம் பழம் :- மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். 
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

18. வாழைப்பழம் :- மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும். 

எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும். 

ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

19. ஆரஞ்சுப்பழம் :- ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். 
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

20. திராட்சைப் பழம் :- எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றhக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. 

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். 

எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.

21. பேரீச்சம்பழம் :- தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

22. எலுமிச்சம்பழம் :- அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

Monday, April 16, 2018

பெண்கள் நகை அணிவது இதுக்குதானா...?பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :

பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. அதனாலேயே திருமணமானவர்கள் மட்டுமே மோதிரவிரலில் மோதிரம் போடுவது.

செயின் , நெக்லஸ் :

கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :

கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிறது.

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. காரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :

வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
இதுவே வளைகாப்பு நிகழ்வுக்கு காரணம்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சமந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வயிற்று சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் . மற்றும் உஷ்ன வாயுவையும் வெளியேற்றுகிறது.

கொலுசு :

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி :

மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.

பில்லாலி

பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

மருத்துவர் மீது மோடிக்கு கோபம் ஏனோ?

 
'மத்திய அரசின் உயரிய விருதுகள் அனைத்துமே, எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. 'நாட்டில் அந்த விருதுகளை பெற, வேறு துறையைச் சேர்ந்த நபர்களே இல்லையா?' என, கேள்வியை எழுப்பியுள்ளார், பிரதமர் மோடி; 
 
இதன் மூலம், மருத்துவர்கள் மீது, மிக கோபமாக உள்ளார் என, தெளிவாக தெரிகிறது. ஜி.பக்தவத்சலம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர், மறைந்த ராமமூர்த்தி போன்றோருக்கு, மத்திய அரசின், 'பி.சி.ராய், பாரத ரத்னா' போன்ற விருதுகள் வழங்கப்பட்டன. 
 
மருத்துவ மாமேதைகள் மட்டுமல்லாது, என்னை போன்ற பல ஆயிரம் மருத்துவர்கள், மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தோம்! இன்று, சினிமாவுக்கு பாட்டு எழுதுவோருக்கும், இசை அமைப்போருக்கும், அந்த பாட்டை பாடியோருக்கும், அந்த பாட்டுக்கு, திரையில் வாய் அசைத்த நடிக-நடிகையருக்கும், ஓடி ஓடி பல பெரிய விருதுகளை கொடுக்கிறது, மத்திய அரசு! 
 
தமிழகத்தில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர், மோகன் காமேஷ், கோவையைச் சேர்ந்த இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர், பழனிவேல், பல ஆண்டுகளாக மருத்துவத் துறையில், கோவை மாவட்ட மக்களுக்கே, சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் விருது பெற தகுதி படைத்தோர் தானே!
 
மருத்துவ மேதைகளுக்கு, மத்திய அரசின் விருதுகளை வழங்குவதில் என்ன தவறு உள்ளது என்பதை, பிரதமர் மோடி தான் மக்களுக்கு விளக்க வேண்டும். மருத்துவர்கள் மேல் உள்ள வெறுப்பால் தானோ என்னவோ, மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவக் கமிஷனை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 
 
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு, ஆறு மாத பிரிஜ் கோர்ஸ் நடத்தி, அவர்களை. எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களுக்கு இணையாக, தேசிய மருத்துவக் கமிஷனில் பதிவு செய்ய வைத்துள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையங்களில், எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்களுக்கு இணையாக அவர்களை நியமிக்க, சட்டம் இயற்றப் போவதாக அறிவித்து, பிரதமர் மோடி, அலோபதி மருத்துவர்களை அச்சுறுத்துகிறாரோ என, எண்ண தோன்றுகிறது. பிரதமர் மோடிக்கு, மருத்துவர்கள் மேல் கோபம் ஏனோ!---

(மருத்துவர், கே.தங்கமுத்து, பொள்ளாச்சி,)

இயற்கையிடம் தான் எத்தனை பாடங்கள்!!


மழை நின்ற பிறகும் தன்னிடம் இருக்கும் இலைகளில் தேங்கிய மழைநீரைக் கொண்டு மீண்டும் ஒரு மழையைப் பொழிகிறது மரங்கள்.

மழை பெய்து ஓய்ந்து, ஊரே அடங்கியதும் மறுநாள் சத்தமே இல்லாமல் குடையைத் தூக்கி கொண்டு வருகிறது காளான்.

குளத்து தண்ணீரில் பிறந்து, அதிலேயே வளர்ந்து வாழும் தாமரையின் இலை, அந்த தண்ணீருடனே பட்டும் படாமல் தான் இருக்கிறது.

காற்று அடித்ததும் கீழே கிடக்கும் காகிதமும் பறந்து பட்டமாக முடியற்சிக்கிறது. உயரத்தில் பறக்கும் பட்டமும் காற்று நின்றதும் தரைக்கு வந்து குப்பை ஆகிறது.

தனக்கு எந்த இரை கிடைத்தாலும் அதை தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணுவதோடு மட்டுமல்லாமல், கூடு கட்டத் தெரியாத வேறு ஒரு பறவைக்கும் தன் கூட்டில் முட்டை இட அனுமதி தந்து அதை அடைகாக்கவும் செய்கின்றன காக்கைகள்.

நாம் மரமா, காளானா, தாமரை இலையா, காற்றா, காகமா என்பது நாம் வாழும் முறையில் தான் இருக்கிறது. 

மரம் எனில் பிறரை மகிழ்வியுங்கள்.
காளான் எனில் பிரச்சனை தீர்ந்ததும் தீர்வு கொண்டு வராதீர்கள். 
தாமரை இலை எனில் வளர்ந்து விட்டோம் என்பதற்காக வளர்த்தவர்களிடமே பட்டும் படாமல் இருக்காதீர்கள்.
காற்று எனில் பிறருக்கு முடிந்த அளவு வாய்ப்பைத் தாருங்கள். 
காகம் எனில் இயலாதவனுக்கு உதவுங்கள்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...