Monday, May 30, 2011

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!



மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வைகோ பங்கேற்கிறார்.

பிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் இக் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். அப்போது இலங்கையில் நடந்த படுகொலைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளின் பார்வையை வைகோ ஈர்ப்பார் என்று தெரிகிறது.

ஈழத்தமிழர் விவகாரம் குறித்து இங்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...