நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
நல்லது நடந்தால் சரி
ReplyDeleteபெண்கள் ஓட்டை நம்பி
ஆண்கள் ஓட்டை
ஓட்டைவிட்டுவிடாமல் இருக்கவேண்டும்
இப்போது எல்லாம் குடித்துப்பழகிவிட்டார்கள்
அதுதான் குழப்பமாக இருக்கிறது
நல்லதைச் சொல்லிப்போகும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteநம்ப முடியவில்லை, நடந்தால் எல்லோருக்கும் நல்லது.
ReplyDeleteசாமி, ரொம்ப நல்ல விஷயம்தான். இந்த விஷயத்த, அப்படியே http://tamil.oneindia.in/news/2012/07/31/tamilnadu-jaya-decide-bring-prohibition-158758.html பக்கத்துல இருந்து இப்படியா காப்பி அடிக்கறது?
ReplyDeleteஇதே விஷயத்த, ஒருத்தர் அவரோட சொந்த முயற்சியில எழுதி இருக்கார். அதையும் போயி பாருங்க கீழே இருக்கற லிங்குல
http://kalakalappu.blogspot.com/2012/07/blog-post_31.html
இப்போதான் உங்களோட மத்த பதிவெல்லாம் பார்த்தேன். எல்லாமே அப்படியே காப்பி & பேஸ்ட் தானா? நல்லா இருங்க பாஸு
ReplyDeleteதேர்தல் முடிந்ததும் மறுபடியும் திறந்துவிடுவார் என்பது இந்த மக்களுக்கு தெரியாமலா இருக்கும்..?
ReplyDeleteAt least have the courtesy of saying thanks to oneindia
ReplyDeleteநல்லது
ReplyDeleteநடக்குமா என்று தான் தெரிய வில்லை
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
நல்ல திட்டம் . அமுலுக்கு வந்தால் கோடான கோடி உள்ளங்களால் வாழ்த்து பெரும் திட்டம். குற்றம் குறைய நல்ல திட்டம். கோடான கோடி பெண்களின் கழுத்தில் தாலி தொங்க நல்ல திட்டம். நோய் நொடி இன்றி மனிதன் வாழ நல்ல திட்டம் . வாழ்க தமிழ் நாடு, வாழ்க தமிழக முதல் அமைச்சர் . நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteநல்ல திட்டம் . அமுலுக்கு வந்தால் கோடான கோடி உள்ளங்களால் வாழ்த்து பெரும் திட்டம். குற்றம் குறைய நல்ல திட்டம். கோடான கோடி பெண்களின் கழுத்தில் தாலி தொங்க நல்ல திட்டம். நோய் நொடி இன்றி மனிதன் வாழ நல்ல திட்டம் . வாழ்க தமிழ் நாடு, வாழ்க தமிழக முதல் அமைச்சர் . நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteplease close TASMAC it is good for our current and future generations
ReplyDelete