Showing posts with label கோச்சடையான் டிரெய்லர். Show all posts
Showing posts with label கோச்சடையான் டிரெய்லர். Show all posts

Sunday, June 9, 2013

கோச்சடையான் டிரெய்லர்


சௌந்தர்யா அஷ்வின் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோச்சடையான். ரஜினி டபுள் கெட்-அப்புகளில் 3டி மோஷன் கேப்சூர் முறையில் நடிக்க படமாக்கப்பட்டிருக்கும் கோச்சடையான் ரசிகர்களால் 2013-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். 


கோச்சடையான் திரைப்படத்தைப் பற்றிய உண்மை செய்திகளைவிட அதிக அளவில் வதந்திகளே வெளிவந்துள்ள நிலையில், நாளை கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லர் இணையதளங்களில் ரிலீஸாகிறது என்ற செய்தி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


ஆனால் கோச்ச்டையான் திரைப்படத்தைப் பற்றி சமீபத்தில் பேசிய திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் “இந்திய சினிமாவின் சரித்திரத்தில் இது முக்கிய நிகழ்வு. கோச்சடையான் இந்திய சினிமாவையே அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை. 

கோச்சடையான் திரைப்படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் சிறு குழந்தையைப் போல தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினார். கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு சிறு பகுதியை தனது நண்பர்களுக்கு திரையிட்டுக்காட்டியிருக்கிறார். படத்தைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மானும் வியந்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.


சில வாரங்களுக்கு முன்பு நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவிலேயே கோச்சடையான் டிரெய்லர் வெளியிடப்படவிருந்தது. ஆனால் டிரெய்லரை பார்த்த ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் கோச்சடையான் டிரெய்லர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இந்நிலையில் நாளை டிரெய்லர் ரிலீஸாகிறது என்ற செய்தி உண்மையா? வதந்தியா? என்பது நாளை தான் தெரியும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...