Showing posts with label சத்தியராஜ். Show all posts
Showing posts with label சத்தியராஜ். Show all posts

Thursday, June 13, 2013

அந்த பெருமை எனக்குத்தான்! சத்யராஜிடம் சிவகார்த்திகேயன்!


இயக்குனர் பொன்ராம் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ’பரோட்டா’ சூரி, ஸ்ரீ திவ்யா, பிந்துமாதவி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். 





படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராகவிருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று(12.06.13) நடந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் “படத்துல வர்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்கு சத்யராஜ் சார் நடிச்சா நல்லா இருக்கும்னு நான் சொன்னதும், யாரும் ஒத்துக்கல. 


’சத்யராஜ் சார் எவ்ளோ பெரிய ஆளு. அவர் இந்தில ஷாருக்கான் கூட, தமிழ்ல விஜய் கூட அப்டினு பெரிய ரேஞ்ச்ல போய்கிட்டு இருக்காரு. அவர் நம்ம சின்ன பட்ஜெட் படத்துல நடிப்பாரா’ அப்டினு தயங்குனாங்க. கடைசி முயற்சியா அவர மீட் பண்ணி கதை சொன்னதும், சாருக்கு கதை ரொம்ப புடிச்சுபோனதால உடனே நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாறாம். 


அதனால இந்த படத்துல சத்யராஜ் சார் நடிச்ச பெருமை எனக்கு தான்” என்று கூறினார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க புதுமுக நடிகை ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பரோட்டா சூரி சிவகார்த்திகேயனின் நண்பன் கதாபாத்திரத்தில் வந்து கலக்குகிறார். 


சத்யராஜின் கதாபாத்திரம் சமுதாய பொறுப்புள்ள கதாபாத்திரமாக இருந்தாலும் அவரும் காமெடியில் பிண்ணி எடுத்துவிட்டாராம்.

Tuesday, July 19, 2011

போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'!


பெரியார் அடிக்கடி பிரயோகித்த வார்த்தை வெங்காயம். அது ஏதோ கெட்ட வார்த்தை என்று பலரும் நினைத்ததுண்டு. ஆனால் அந்த வெங்காயம் என்ற வார்த்தைக்குள் எத்தனை பெரிய தத்துவத்தை பெரியார் புரிய வைத்தார் என்பதை பின்னர்தான் அனைவரும் புரிந்து கொண்டனர்.

இன்றைய தலைமுறையினருக்கு பெரியாரின் கொள்கைகளை, புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தின் தலைப்பு 'வெங்காயம்'. போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம் உள்ளனவாம்.

தமிழ் சினிமாவில் பெரியாரின் கொள்கைகளைப் பேசி வருபவரும், அவர் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவருமான சத்யராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

முதல் சிடியை துப்புரவு தொழிலாளர் ஜானய்யா வெளியிட, ஏழுமலை என்ற விவசாயி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், "வெங்காயம்' படம், போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கிற படம்", என்றார்.

ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஈழப்போரின்போது தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்துப் பேசினார்.

இயக்குநர் கவுதமன் பேசும்போது, "வெங்காயம், பெரியார் கொள்கைகளை சித்தரிக்கும் படம். பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்தும் அரசியல் கட்சிகள், இந்த படத்தை வாங்கி, திரைக்கு வருவதற்கு உதவ வேண்டும்'' என்றார்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...