Monday, May 2, 2011

மங்காத்தா ரிலீஸ் தேதி....?

ஜீத் ரசிகர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான். மன்றங்களே வேண்டாம் என்று அவர்களது நாயகன் அஜீத் அறிவித்து விட்ட நிலையிலும் கூட அஜீத் நடித்துள்ள மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கவும் அதை ரசிக்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அஜீத் ரசிகர்கள் அத்தனை பேரும் ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அஜீத் விடுத்துள்ள அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளனர். ஆனாலும் அவர்கள் சற்றும் தளரவில்லை. மன்றங்களுக்குள் புகுந்து விட்ட தேவையில்லாத அரசியலைக் களையும் வகையில்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அஜீத். ஆனால் அவர் ரசிகர்களைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அஜீத் அறிவிப்பை ஓரம் கட்டி வைத்து விட்ட அவர்கள் தற்போது அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்காக காத்துள்ளனர்.

அஜீத்தின் பிறந்த நாள்ளான மே 1. இந்தத் தேதியில்தான் மங்காத்தா வருவதாக திட்டமிடப்படடஜ்டிருந்தது. தற்போது அது ஜூனுக்குத் தள்ளிப் போய் விட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தை பெரும் வெற்றியாக்குவதறப்காக அவர்கள் தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அஜீத் ரசிகர்களின் இந்த வித்தியாச ஆர்வம், திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...