Thursday, March 31, 2011

முதல் இடத்தை கோட்டை விட்டது இந்தியா...!


இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இத்துடன் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ்குற்றம் மிக, மிக குறைந்து விட்டதாகவும், இதுவரை இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் நடப்பு கணக்கெடுப்பில் தான் குறைந்த அளவு இந்த குற்றம் நடந்திருப்பதாகவும் சென்சஸ் விவரத்தில் தெரியவந்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை - 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.

சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது.

 5 நாட்டு மக்கள் தொகையை விட இந்தியா டாப்: மொத்தம் 38. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் ஆண்களைவிட பெண்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம். டில்லியின் வடகிழக்கு பகுதி மக்கள் மிக அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். அருணாசல பிரதேசத்தில் டிபங் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மிக குறைவாக வாழும் பகுதி ஆகும் என்றும் இன்றைய சென்சஸ் விவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

முதல் இடத்தை கோட்டை விட்டதன் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் தான் செல்கிறது என்பது புலனாகிறது..

3 comments:

  1. >>முதல் இடத்தை கோட்டை விட்டதன் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் தான் செல்கிறது என்பது புலனாகிறது..

    ஹா ஹா ஃபினிஷிங்க் டச்?

    ReplyDelete
  2. சீனாவின் தற்போதைய மக்கள்தொகை எவ்வளவு...?

    சீனாவை இந்தியா தோற்கடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்...?

    சீனாவை தோற்கடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்...!!!

    இதுபோன்ற கேள்விகளுக்கு உங்கள் இடுகையில் பதில் இல்லையே...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...