ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதி்க் பாட்ஷாவின் தற்கொலைக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திமுக தெரிவித்துள்ளது.
முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். 2ஜி வழக்கு தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையால் மன உளைச்சலில் தவித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறினர்.
ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரத்திற்குப் பிறகுதான் பாட்ஷாவின் மரணம் குறித்த தகவல் வெளியானதால் அதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. பாட்ஷா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது திமுக அரசு. இந்நிலையில் பாட்ஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து ஒரு டாக்டர்கள் குழுவை அமைத்து சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று இன்று திமுக தெரிவித்துள்ளது. இது குறித்து எந்த விசாரணையையும் சந்தி்க்கத் தயார் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் திமுகவுக்கு சாதிக் பாட்ஷாவின் மரண வழக்கும் ஒரு தலைவலியாக உள்ளது.
கரெக்ட்டு மக்கா....!!
ReplyDeleteகவிதவீதியும் கமெண்ட்ஸ் போடுவாரா...??? இல்லை பாட்டு பாடுவாரா..??? மரியாதையா சொல்லும்ய்யா...???
ReplyDelete