சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி 3டி-யை ஒரு புதிய படத்துக்கு நிகரான ஏற்பாடுகளுடன் வெளியிடத் தயாராகிறது ஏவிஎம் நிறுவனம்.
இந்தப் படத்தை ஜப்பானில் அதிக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறார்கள். படத்தின் விளம்பரத்துக்காக ஹீரோயின் ஸ்ரேயாவை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு. இதை ஸ்ரேயாவே பேட்டிகளில் கூறிவருகிறார்.
சமீபத்திய பேட்டியில், “5 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்தாலும், இப்போது பார்த்தாலும் புத்தம் புதிதாகவே இருக்கும். மீண்டும் மீண்டும்மக்கள் பார்க்க விரும்பும் படம் சிவாஜி. இந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது,” என்றார்.
ரஜினி விரும்பிப் படித்த மொழிபெயர்ப்புப் புத்தகம்!
The Legend of the Holy Drinker – இது ஆஸ்திரிய எழுத்தாளர் ஜோசப் ரோத் எழுதிய ஆங்கில நாவல். இதை தமிழில் புனிதமான குடிகாரன் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்திருந்தார் சுரா.
இந்த நூல்குறித்து சுரா எழுதியுள்ளது:
“அதிர்ஷ்டம் பல தடவைகள் வந்து ஒரு மனிதனின் கதவைத் தட்டிக் கொண்டே
இருக்கும். அதை அவன் அந்தச் சமயத்தில் கவனமாக இருந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கவனமாக இல்லாமல் போய்விட்டால், இந்த புதினத்தின் கதாநாயகனான ஆண்ட்ரியாசின் நிலைதான் அவனுக்கும். இது கதை அல்ல- வாசிப்பவர்களுக்கு பாடமும் கூட. சில வருடங்களுக்கு முன்பு, நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடைய இந்த மொழி பெயர்ப்பு நூலை முழுமையாக வாசித்து, மிகவும் ஈர்க்கப்பட்டார்!”
-Thanks என்வழி ஸ்பெஷல்
படிக்க வேண்டிய புத்தகம் தான்... நன்றி...
ReplyDelete