கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஆடியோ டிசம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் கமல்ஹாசன் எழுதி, அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடிய ஒரு பாடல் வரிகள் வெளியாகியுள்ளன.
சங்கர் எஹஸான் லாய் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. நடனத்தின் வடிவிலான இந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதியுள்ளார். அவரும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியுள்ளனர்.
பாடல் வரிகள் இதுதான் ..
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
க்ரிஷ்ணா
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்
அருமை...
ReplyDeleteபாடல் வரிகளுக்கு நன்றி...
tm2