Saturday, May 25, 2013

மறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்


டி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி சில பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.




வாழ்க்கைச் சுருக்கம் 

சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாக்ப் பிறந்தவர் சௌந்தரராஜன். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். 



டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் 


டி.எம்.எஸ்.... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்! 





· டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ்’ என்றால், செளந்தரராஜன்: `எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது! 

· டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்! 

· மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். 

· டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்! 

· மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது! 

· டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்! 

· டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்! 

· `அடிமை பெண்’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’ 

· பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!’ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்! 

· கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்.`இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி! 

· `நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது! 

· தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்! 

· `வசந்தமாளிகை’ படத்தில் வரும் `யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட `எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்! 

· வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்! 

· காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்! 

· கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும்’ என்பதை `வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்! 

· நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்! 

· எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்! 

· `பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன! 

· `நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்! 

· `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்! 





· மத்திய அமைச்சர் மு.க அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ் பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்! 

· தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) 

· சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை. 

· எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்






T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள் : 

1.மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 ) 
2.வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 ) 
3.மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 ) 
4.ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 ) 
5.ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 ) 
6.மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 ) 
7.யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 ) 
8.சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959) 
9.உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 ) 
10.நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 ) 
11.இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 ) 
12.நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 ) 
13.நினைத்து நினைத்து ( சதாரம் 1956 ) 
14.முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 ) 
15.பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 ) 
16.சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 ) 
17.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 ) 
18.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 ) 
19.டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே ) 
20.முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி ) 
21.ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை ) 
22.கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் ) 
23.என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் ) 
24.வெண்ணிலா வானில் ( மன்னிப்பு ) 
25.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா ) 
26.மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை ) 
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் ) 
28.மெல்ல மெல்ல அருகில் ( சாரதா ) 
29.குயிலாக நான் ( செல்வமகள் ) 
30.மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் ) 
31.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு ) 
32.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் ) 
33.மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் ) 
34.முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை ) 
35.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி ) 
36.ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் ) 
37.எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் ) 
38.திருடாதே பாப்பா ( திருடாதே ) 
39.காசேதான் கடவுளப்பா ( சக்கரம் ) 
40.தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் ) 
41.ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் ) 
42.ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் ) 
43.மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் ) 
44.கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் ) 
45.அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா ) 
46.அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி ) 
47.அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் ) 
48.பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு ) 
49.நான் மலரோடு ( இரு வல்லவர்கள் ) 
50.அஹா மெல்ல நட ( புதிய பறவை ) 
51.அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் ) 
52.யார் அந்த நிலவு ( சாந்தி ) 
53.சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே ) 
54.பொன்மகள் வந்தாள் ( சொர்கம் ) 
55.என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் ) 
56.உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் ) 
57.சத்தியம் இது ( வேட்டைக்காரன் ) 
58.சத்தியமே ( நீலமலைத் திருடன் ) 
59.நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி ) 
60.எங்கே நிம்மதி ( புதிய பறவை ) 
61.தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி ) 
62.சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் ) 
63.நண்டு ஊறுது ( பைரவி ) 
64.அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை ) 
65.ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் ) 
66.உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் ) 
67.எங்கே அவள் ( குமரிக் கோட்டம் ) 
68.ஒரு தரம் ( குமரிக் கோட்டம் ) 
69.யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா ) 
70.அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் ) 
71.மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் ) 
72.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை ) 
73.உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் ) 
74.அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் ) 
75.அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் ) 
76.ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் ) 
77.முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை ) 
78.மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் ) 
79.நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் ) 
80.மலர் கொடுத்தேன் ( திரிசூலம் ) 
81.கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் ) 
82.அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் ) 
83.நீயும் நானும் ( கெளரவம் ) 
84.தெய்வமே ( தெய்வ மகன் ) 
85.யாருக்காக ( வசந்த மாளிகை ) 
86.நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை ) 
87.பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் ) 
88.வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

1 comment:

  1. நல்லதொரு தொகுப்பு... சிறப்பித்தமைக்கு நன்றி...

    அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...