"பொதுத் துறை நிறுவனங்கள் போண்டியானதற்கு, தி.மு.க., ஆட்சிதான் காரணம் என பொய்யான காரணங்களை சொல்லி, தமிழக மக்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுகிறார் ஜெயலலிதா' என, கருணாநிதி தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.
எந்த சந்தர்ப்பத்தில் எப்படி, யாருக்கு பூ சுற்றுவார் கருணாநிதி என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பேசும்போது, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லி, காம்ரேட்களின் காதுகளில் மிக அழகாக பூ சுற்றுவார்.
பிராமணர்கள் மத்தியில் பேசும்போது, "நான் பிராமணர்களை வெறுக்கவில்லை. ராஜாஜியை உண்மையிலேயே நேசிக்கிறேன். பிராமணீயத்தைத்தான் ஈ.வெ.ரா., வெறுத்தார். அவரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த நான், அதைத்தான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்று அவர்களின் காதுகளில் (ஏற்கனவே அவர்கள் பூக்கள் சூடியிருந்தாலும்) தன் பங்குக்கு, கருணாநிதியும் பூ சுற்றுவார்.
தாழ்ந்த குடியினர் மத்தியில் உரையாடும் போது, "நானும் தாழ்ந்த குடியில் அவதரித்தவன். நான் ஒரு ஆண்டி' என்று, பாவம் அவர்களின் காதுகளில் அழகாக பூ சுற்றுவார்.
முஸ்லிம்களின் தோழராக தன்னை காட்டிக்கொள்ள, குல்லா அணிந்து ரம்ஜான் கஞ்சியை விரும்பி குடிப்பார். இயேசுநாதரிடம் இவர் கொண்டிருக்கும் பற்றும், நேசமும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கே இருக்குமா என்பது சந்தேகம் தான்!அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சொல்லாததையெல்லாம், தன்னிடம் அவர்கள் சொன்னதாக, அழகாக புனைந்துரைப்பார்.
ஜெயலலிதாவுக்கு இந்த கலையெல்லாம் சுத்தமாக தெரியாது. தமிழகத்தின் நிதி நிலையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார். யார் காதிலும் பூ சுற்றும் அவசியம் நிச்சயம் அவருக்கு கிடையாது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் வித்தகரும் அவரல்ல.
தன் மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். தமிழகத்தைக் காப்பாற்ற அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை கசப்பானது என்றாலும், தவிர்க்க முடியாதது என்பதை எதிர்காலம் நிச்சயம் உணர்த்தும். தமிழர்களின் காதுகளில், கருணாநிதி சுற்றியிருக்கும் பூக்களே நிறைந்திருக்கும் போது, ஜெயலலிதா புதிதாக பூக்களை எப்படி சுற்ற முடியும்?
முதல் பூ....
ReplyDeleteவாங்க பூ சுற்றி சுற்றி விளையாடுவோம்...!!!
ReplyDeleteகலைஞர் பூச் சுற்றுவார் என்பது தெரியும். அம்மாவுக்குப் பூச் சுற்றத் தெரியாது என்பதும் சரிதான். என்னால் மாலையே சூட்டுவார்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDelete