25 பைசா நாணயத்தை, புழக்கத்திலிருந்து அரசே நிறுத்திவிட்டது. பிச்சைக்காரர்கள் கூட, 50 பைசா நாணயங்களை வாங்குவதில்லை. பணப்பரிவர்த்தனை நடக்கும் எல்லா இடங்களிலும், 10.49 ரூபாய் எனில், 10 ரூபாய் எனவும், 10.51 ரூபாய் எனில், 11 என்றும், "ரவுண்ட் ஆப்' செய்யப்படுகிறது. மக்களும் இந்த, "ரவுண்ட் ஆப்' முறையை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர்.
ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பிடிவாதமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலையை, அவ்வப்போது கூடுதலாக்கி அறிவிக்கும் போது, பைசா சுத்தமாகவே அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் பெட்ரோல் விலையை, 1.82 ரூபாய் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. மக்கள் மீது கரிசனம் இருந்தால், விலையை உயர்த்தி இருக்கக் கூடாது. கரிசனம் இல்லை என்றான பின், அந்த 18 பைசாவில் என்னவாகிவிடப் போகிறது; பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் கூடுதல் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே!
இனிமேலாவது, ஐ.ஓ.சி., எச்.பி., மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், விலையை கூடுதலாக்கி அறிவிக்கும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று அறிவித்துத் தொலைக்கலாமே! எண்ணெய் நிறுவனங்களின் செவியில் ஏறுமா?
பெட்ரோல் வங்கிகளில் பெட்ரோல் போடும்போது இந்த சில்லரை விஷயம் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் தெரியவில்லை. அங்கு உள்ள மீட்டர்களில் ரூபாய்க்கான அளவு உள்ளதால் பெட்ரோல் போடுவோர்கள் 50 ரூபாய், 100 ரூபாய் எனதான் பெட்ரோல் போடுகின்றனர்.
இனியாவது இந்த பைசா பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமா நாடு..?
இனியாவது இந்த பைசா பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமா நாடு..?
No comments:
Post a Comment