Friday, March 30, 2012

ஏள் தோற்கிறார் வைகோ..? எழுச்சிகள் சில வீழ்ச்சிகள்...?


கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், "புழுதிப்புயல்' சாரி, "புரட்சிப்புயல்' வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார். 

சிறந்த பாராளுமன்றவாதி என பெயர் பெற்ற வைகோ, சமீப காலமாக குழப்பவாதியாக, சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடுக்கத் தெரியாதவராக இருக்கிறார். அவருக்கு, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம், பேச்சு திறமை இருந்தும், எதுவும் சாதிக்க முடியாததற்கு, அவரின், "எடுத்தேன் கவிழ்த்தேன்' முடிவுகளே காரணம். 

எந்த ஒரு செயலிலும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிர்க்கருத்தை எடுப்பதே, வைகோவின் வேலையாக உள்ளது. இதனால் தான், போதிய திறமை இருந்தும், அவரால் வெகுஜன தலைவராக வரமுடியவில்லை. 

அவர் எடுத்த, அவரைக் கவிழ்த்த சில முடிவுகள் இதோ...

தி.மு.க.,வில் இருந்து, துரோகி என்ற பட்டம் கிடைத்ததால் வெளியேறியதாக கூறி, புதுக்கட்சி கண்டார். "ஊழல் ராணி ஜெ.,வின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன்' என்ற கோஷத்துடன், கன்னியாகுமரியில் இருந்து, சென்னை நோக்கி நடைபயணம் சென்றார். 

இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆனால், முடிவில் நடந்ததோ வேறு கதை. எந்த கட்சியை எதிர்த்து நடைபயணம் செய்தாரோ, அதே கட்சியுடன் கூட்டணி வைத்தார். இவரின் இந்த முடிவால், இவர் மீது நம்பிக்கை வைத்த பலர் பின்வாங்கினர். 

அடுத்த சில ஆண்டுகளில், எந்த கட்சியில் இருந்து குறை கூறி வெளியேறினாரோ, அந்த தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தார். இதனால், மீதியிருந்த பலரும் சொல்லாமல் வெளியேறினர். 

ராஜிவ் கொலையில், 20 ஆண்டு விசாரணைக்குப் பிறகு, மூன்று பேருக்கு விதித்த தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி, தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, நியாயமான மனிதர்களை கொதிப்படையச் செய்தது. அவரது தம்பியையோ, மகனையோ, கொன்றிருந்தால் விட்டுவிட சொல்வாரா இவர்? ஏன் இவருக்கு இப்படி ஒரு போராட்டம்? 

சமீபத்தில் நாடே இருளில் மூழ்கிக் கிடக்க, கூடங்குளத்தை திறக்க தவமிருக்கின்றனர். இவரோ, அதை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். 

தனது சொந்த தொகுதியிலேயே, இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாத இவர், மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர், இனியேனும் வெகுஜன மக்களின் விருப்பத்திற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

9 comments:

  1. Yaruda nee.Oruthar Nalla Irukka Kudatha?

    ReplyDelete
  2. கூடங்குளம் அணு மின் நிலையம் திறந்தால் தமிழகம் ஒளிமயமாகிவிடும் என்று நம்பி ஏமாந்த ஏமாளிகளில் தாங்களும் ஒருவர் ((:

    ReplyDelete
  3. First time I reading this blog .... seeing this content I had a quick surf on the old articles , like the half baked,news written here same thing is refelected everywhere.unworthy

    ReplyDelete
  4. நண்பரே கூடன்குளத்தில் 1000 மெகா வாட் மின்சார திட்டம்.தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் 4000 மெகா வாட்.

    1000 மெகா வாட் திட்டமாக இருந்தாலும் அதிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 350 மெகாவாட் மின்சாரமே

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
    ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

    ReplyDelete
  5. பெரும்பான்மை மக்கள் அறியாமையால் வழிதவறும் போது அவர்களை நேர்வழிப்படுத்துபவன் தான் தலைவன்(Leader). வைகோ - தலைவர் (Leader)

    இது போன்ற குப்பைக் கட்டுரைகளை எழுதுவதை விடுத்து எதாவது சினிமா நடிகைகளைப் பற்றி கிசு கிசு எழுதலாம்.

    ReplyDelete
  6. நண்பரே,

    இந்த பதிவு உங்களுடைய கருத்துக்களாக இருக்கலாம்..

    உண்மையாக சொல்லுங்கள் ..பெரும்பான்மையான நாம் ஜனநாயகத்தை சரியாக பயன் படுத்துகிறோமா என்று? ஒட்டு வங்கி அரசியலையும், இலவசம், கவர்ச்சி அரசியலையும் தான் நாம் ஆதரிக்கிறோம். ஒரு மிகப்பெரிய விலையுர்வை கொடுத்த ஆட்சியை உடனே ஆதரிக்கிறார்கள். பணம் பயங்கரமாக விளையாடிய ஒரு தேர்தலில் 15 % ஒட்டுக்கள் வாங்கியதே ஒரு சாதனை தான்...
    வைகோவை தவிர வீதியில் இறங்கி போராடும் எத்தனை தலைவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்? .இங்கே 85 % மக்கள் தான் முட்டாள்கள் தவிர வைகோ அல்ல..தான் கொண்ட கொள்கையில் வழுவாமல் இருப்பதே ஒரு தலைவனுக்கு அழகு..அவருடைய கொள்கைகள் இன்று வரை மாற வில்லை..மக்கள் தான் மாறி இருக்கிறார்கள்..

    ReplyDelete
  7. காமராஜரைக் கூட ஊழல் வாதி என்று சொன்னவர் தான் வைகோ அந்த பவம் சும்மா விடுமா?

    ReplyDelete
  8. i support you 100%.
    -surya

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...