ஜீவா முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் இந்த சிங்கம் புலி. சில்வர்லைன் பிலிம் பாக்டரி பேனர் சார்பாக இந்த படத்தை தயாரித்துள்ளவர்கள் எஸ்.பார்த்திபன் மற்றும் சாய் ரமணி இயக்கியுள்ளார்.
ஜீவாவுடன், திவ்யா, ஹனி ரோஸ், சவுந்தர்யா, சந்தானம், பொன்வண்ணன், குயிலி, லிவிங்க்ஸ்டன், பாண்டு, மீரா கிருஷ்ணன், மாணிக்கம் வினாயாகம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். மணி ஷர்மா இசையமைத்துள்ளார்.
இரு வேடங்களில் வரும் ஜீவாவில், ஒரு ஜீவா மீனவனாகவும், இன்னொரு ஜீவா வக்கீலாகவும் வருகிறார். இதில், மீனவனாக வரும் ஜீவா நல்லவனாக வருகிறார். வக்கீலாக வரும் ஜீவா கெட்டவராக வருகிறார். இந்த 2 ஜீவாக்களில், 1 ஜீவா பிளேபாய் கேரக்டர் உடையவர். தனது வாழ்வில் சந்திக்கும் பெண்களை எல்லாம், தனது வசத்தில் மாற்றி காதல் லீலைகள் செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். மற்றொரு ஜீவாவின் கேரக்டர் நற்குணங்கள் உடையவராக வருகிறார். அப்பாவி ஜீவாவுக்கும், சூழ்ச்சிகரமான வில்லன் ஜீவாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் முக்கிய கதை. இதற்கிடையில், பெரும்பாலான தமிழ் படங்களில் உள்ளது போல், நிறைய கமர்ஷியல் அம்சங்கள் தாராளமாக உள்ளன.
முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜீவாவின் நடிப்பு குட். ஆனால் இரு வேடங்களுக்கிடையில் கான்பித்திருந்திருக்க வேண்டிய உச்சரிப்பு வித்தியாசங்களில் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தி இருந்திருக்கலாம். அறிமுக இயக்குனரான சாய் ரமணியின் டைரக்ஷனும் பாராட்டிற்கு உரியது தான். அவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஜனநாதனிடம் இணை இயக்குனராக இருந்தவர். ஹீரோயின்களின் நடிப்பு ஒகே. நா.முத்துகுமார் மற்றும் விவேகாவின் கவிதைகளும் குறுப்பிடத்தக்கது. எம்.பாலசுப்ரமனியம் செய்துள்ள ஒளிப்பதிவு இந்த கதைக்கேற்றவாறு உள்ளது.
காமடிக்கு சந்தானம் பழைய நடிகர் கெட்டப்பில் தனது வழக்காமான பாணியில் காமடி செய்திருக்கிறார்.. படம் பல தமிழ் படங்களை நினைவுப்படுத்துகிறது. பாடல்கள் அவ்வளவு சுபரஸ்யம் இல்லை.
கமர்ஷியல் கட்டாயங்களுக்காக ஒரு சில இடங்களில், படம் ட்ராக் மாறி போனாலும், படத்தின் சுறுசுறுப்பான திரைக்கதையும், மற்ற தவறுகளை மறக்கடிக்க செய்கிறது. 2 வேடத்தில் நடித்த ஜீவாவின் முயற்சிக்காக படத்தை காணலாம். மாஸ்களை கவர்ந்திழுக்கும் வகையில் படம் உள்ளது.
விமர்சனம் நல்லா இருக்கு நண்பரே!
ReplyDeleteதமிழ்மணத்துல இணைக்கவில்லையே!
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு.
ReplyDeleteபடம் பார்த்த பீலிங்கு......
ReplyDeleteஅசத்தல் விமர்சனம்..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி யிருக்கலாம்..
ReplyDeleteஇருந்தாலும் அருமை..