Wednesday, March 16, 2011

தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடையாது..


தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்குமாறு கூறி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.

தேமுதிக மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கும் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே, ஆனால் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் கிடையாது. எனவே இவற்றுக்கு சுயேச்சைகளுக்கான சின்னமே ஒதுக்கப்படுகிறது.

தேமுதிக ஆரம்பித்தது முதல் கடும் சிரமப்பட்டு முரசு சின்னத்தை பெற்று போட்டியிட்டு வந்தது. அப்படி கிடைக்காத போது முரசு சின்னம் யாருக்கு கிடைத்ததோ அவர்களை தேமுதிக வேட்பாளராக அக்கட்சி அங்கீரித்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது முரசு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேமுதிக உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்காலிக ஏற்பாடாக தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டது. அதன்படி முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிட்டது.

இந்த நிலையில் இந்த சின்னத்தை நிரந்தரமாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியது தேமுதிக. அதேபோல நட்சத்திர சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகளும், சிலிண்டர் சின்னம் கோரி கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் மற்றும் மனித நேய மக்கள்கட்சியும் மனு செய்தன.

இந்த மனுக்களுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தேமுதிக லோக்சபா தேர்தலில் அனைத்துத்தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த ஒரு கட்சி. மேலும் சட்டசபைத் தேர்தலிலும் கூட ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சி வென்றது. எனவே அக்கட்சிக்கு தனிச் சின்னத்தை ஒதுக்க முடியாது. மேற்கண்ட நான்கு கட்சிகளுமே சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவத்துடன் இல்லை. எனவே இவர்களுக்கு தனிச் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறியிருந்தது.

இதையடுத்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, குறிப்பிட்ட சின்னத்தை குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. நான்கு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தை அணுகி தீர்வு காண வேண்டும். இந்த கட்சிகள் தாக்கல் செய்யும் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி விட்டது.

இதன் மூலம் தேமுதிகவுக்கு முரசு சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது. தேமுதிகவை டெபாசிட் இழந்த கட்சி என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம்கூறியுள்ளதால் முரசை ஒதுக்காது என்றே தெரிகிறது. இதன் மூலம் தேமுதிகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பொதுவாக கூற முடியாத நிலைமைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. இருங்க படிச்சிட்டு வர்றேன்....

    ReplyDelete
  2. //இதனால் இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பொதுவாக கூற முடியாத நிலைமைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது//

    ஐயோ பாவம் பெரிய கேபிடன்......

    ReplyDelete
  3. கேப்டனுக்கு புதிய சிக்கலா/?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...