நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சில அடிப்படைக் குறிப்புகளை இங்கே தருகிறேன்.. பொதுவாக நாம் எழுதவிருக்கும் நுழைவுத் தேர்விற்கு அடிப்படையான பாடப்பிரிவுகளை நன்கு படித்துக் கொள்வது நல்லது.
அது மட்டுமில்லாமல், கடந்த சில ஆண்டுகளில் வந்த கேள்வித் தாள்களை வாங்கி அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளை படித்துக் கொள்ளலாம். வீட்டில் அவ்வப்போது உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்து அதற்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள்.
தேர்வில் கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. எனவே, கணிதக் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு அறையில் உங்கள் மதிப்பெண்ணும், நேரமும் மிகவும் முக்கியமானதாகும்.
தேர்வின் போது டைம் மேனேஜ்மென்ட் என்பது மிகவும் முக்கியமானதாகும். எளிதாக கேள்விகளை மிக விரைவாக முடித்துவிட்டு, சற்று கடினமான கேள்விகளுக்கு அதிகப்படியான நேரம் ஒதுக்கி அதற்கான சரியான பதிலை எழுதுவது மிகவும் நல்லது.
3 மணி நேரத்தில் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனில் நேரத்தை திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும்.
சில சிக்கலான கேள்விகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்க்கவும். முதல் முறை படித்ததும் நீங்கள் புரிந்து கொண்டது தவறாகக் கூட இருக்கலாம். எனவே நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
குழுக் கலந்துரையாடலின் போது உங்கள் பேச்சுத் திறமை, தலைமைப் பண்பு போன்வை கவனிக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரியாத தலைப்பாக இருந்தாலும், அந்த நிமிடத்தில் அந்த தலைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை எளிய வாக்கிய அமைப்புகளில் கனீரென்ற குரலில் பேசுங்கள்.
நேர்முகத் தேர்வில் உங்கள் நடை, உடை, பாவனை போன்றவையும் கவனிக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை பேச்சில் தெரிய வேண்டும்.
இது மட்டுமல்லாமல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப் பிரிவிற்கு அடிப்படையான சில திறமைகளை நீங்களாக வளர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
பயனுள்ள தகவல்கள்.. தொடர்ந்து வருகிறேன்..
ReplyDeleteபாட்டு ரசிகனே..புது பாட்டு எங்க?
ReplyDeleteரைட்டு நண்பா!
ReplyDeleteயூஸ் பண்ணிக்கிறேன்.
பயனுள்ள மேட்டருக்கு நன்றி!
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி..
ReplyDeleteமாணவர்கள் மீதுள்ள அக்கறைக்கு வாழ்த்துகள் மக்கா....
ReplyDelete