Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Tuesday, August 13, 2013

நீதிக்கே ஓய்வா...? நாம என்ன வெள்ளைக்காரனா...?


"நீதி மன்றங்களுக்கு, கோடை விடுமுறை விடப்படுவதால், தீர்ப்புகள் தாமதமாகின்றன என்ற கருத்து தவறு' என்று, நீதிபதிகள் கூறுகின்றனர். 

ஐ.ஐ.டி.,யில், பணி நியமனங்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக, ஆசிரியை ஒருவர், வழக்கு தொடர்ந்தார். 1997-98 கால கட்டத்தில், இந்த வழக்கு ஆரம்பமானது. 2013 ஜூலை, 25ம் தேதி, இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வழக்கு தொடரப்பட்ட நாள் முதல், இன்றைய தினம் வரை நடைபெற்ற, ஐ.ஐ.டி., பணி நியமனங்களை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று. ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது மிகச் சரியானதே. 

ஆனால், வழக்குத் தொடுத்த ஆசிரியை, நியாயம் கிடைக்காமல், பணி ஓய்வு பெற்று விட்டார். தவறான வழிகளில், பணி நியமனம் பெற்ற பலர், சம்பளம், சலுகைகள் அனுபவித்து, ஓய்வு பெற்று விட்டனர். 



ஆனால், வழக்கு தொடர்ந்தவரோ பாதிக்கப்பட்டு உள்ளார். "தாமதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு, மறுக்கப்பட்ட தீர்ப்புக்குச் சமம்!' ஆங்கிலேயர்களால், கோடை நாட்களில், பணி செய்ய இயலாது. நம் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. எனவே, அவர்கள், நம்மை ஆளும் போது, கோடை விடுமுறையை விரும்பினர். 

குழந்தைகளால், கோடையில், பள்ளிக்குச் செல்ல முடியாது. எனவே, கோடை விடுமுறை அவசியம். மற்ற அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களும், பணி செய்து கொண்டு தானே இருக்கின்றனர். 

எனவே, காலை, 10:30 மணிக்கு வந்து, 1:30 மணி வரையும்; 2:30க்கு வந்து, மாலை, 5:30 வரையும் பணி செய்யும், இந்திய நீதிபதிகளுக்கு, கோடை விடுமுறை தேவையில்லை. தேவைப்படுபவர்கள், விடுப்பு எடுத்துக் கொள்ளலாமே. 

தற்போதைய பள்ளி, கல்லூரிகள், இரண்டு, "ஷிப்டு'களில் செயல்படுகின்றன. அதுபோல, இரண்டு அல்லது மூன்று, "ஷிப்ட்'டுகளில், நீதிமன்றங்கள் வேலை செய்து, தேங்கியுள்ள வழக்குகளை, உடனடியாக முடித்து, தீர்ப்புகளை வழங்க வேண்டும். இதுவே, மக்கள் எதிர்பார்ப்பு.

Friday, August 9, 2013

இதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பெண்கள் மட்டும் படிக்கவும்


கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

அவள் விகடனில் இருந்தது. . !

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! 

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . ! மளிகை கடை லிஸ்ட் போல நீண்டன பாயின்ட்ஸ். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !
2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !
3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !
4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !
5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்
அவர் சமைக்கணும். . !
6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !
7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். . !சமயத்துல 'வாடா போடா’வையும்
ஜாலியா ரசிக்கணும். . !
8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ
அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !
9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.! 
10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !
11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . ! 
12.முக்கியமான பாயின்ட். . !மாமியார் எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

1.''மாப்பிள்ளை ஃபேர் மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. . ! ஆனா
பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். . ! அன்பு காட்டுறதுல
பணக்காரங்களா இருந்தா போதும். . !
2.அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. . !அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி
வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். . !இதுவரைக்கும் யார் கூடவும் நான்
பைக்ல போனதில்ல. . !பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும். . !
3.குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். . ! குவார்டர்லி, ஹாஃப் இயர்லி,
சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க
பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம்
பண்ணணும். . !
4.ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது,
டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா
இருக்கணும். . !
5.அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். . ! ஆனா, புடவை கட்டச் சொல்லி
என்னை கம்பல் பண்ணக்கூடாது. . !
6.அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம். . ! ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. . !
7.மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல. . !

லீலாவதி, எம்.காம் சென்னைப் பல்கலைக்கழகம்:

1.''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல. . ! ஆனா மொத்தமா பெரிய கூட்டுக்குடும்பம் வேண்டவே வேண்டாம். . !
2.மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். . !
3.மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். . !
4.மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு
சந்தோஷப்படுத்துவேன். . !
5.கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். . !
6.மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. . ! 7.கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும்
பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. . !
அதை எல்லாம் ரசிக்கணும். . !
8.வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். . !
9.கொஞ்சம் அதிகமா பேசுவேன். . !அதனால அவர் அமைதியானவரா
இருக்கணும். . !
10.சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும். . ! 

கொஞ்சமாவது மனசட்சின்கிறது இருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு!!!

Tuesday, June 18, 2013

திருமணத்திற்கு முன் அது சரியே...! மீண்டும் களம் இறக்கும் குஷ்பு...!


திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து தனது கருத்தை ஒட்டிய கோணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு. 

கற்பு குறித்து முன்பு கருத்து சொல்லி பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டவர் குஷ்பு. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார் குஷ்பு. 

இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன. போராட்டங்களும் வெடித்தன. அவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அதை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் வரை போய் தனக்கு சாதகமாக தீர்ப்பையும் பெற்றார். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் ஒரு வழக்கில் தீ்ர்ப்பளித்த ஹைகோர்ட், திருமணம் ஆகாவிட்டாலும் கூட ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக இணைந்து குழந்தையும் பெற்று்க கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுவர்.

அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் முறையற்றதாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. 

இதைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் ஒரு டிவிட் செய்தியைத் தட்டி விட்டுள்ளார் குஷ்பு. அதில், நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது நடக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு கத்துகிறார்களா என்பதை நான் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன போராட்டம் நடக்கப் போகிறதோ....!

Thursday, May 9, 2013

சிறுவர்களுக்கூடவா இப்படியெல்லாம் ஆசை வரும்...! கொடுமை...!


ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்  
பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க 
வேண்டும். 

அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும். 

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. 
என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும். 

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும் 
என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை. நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார், 

"அந்த குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்"

எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பலக்கபடுத்திகொள்ளுங்கள்.

எல்லார் வீட்டிலும் நட்ப்பது இதுதாங்க...  தொலைக்காட்சியை விட்டு நம் பிள்ளைகளையும்  கொஞ்சம் ரசிப்போம்....

தலைப்பு பொருத்தமா இருக்கா...?

# படித்ததில் பிடித்தது #

Saturday, May 4, 2013

தில்லு முல்லு டிரைலரும், ரசிகர்கள் படு கேவலமாக கமெண்டும்..!


கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காமெடிப் படமான தில்லு முல்லு படத்தை தற்போது வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் ரீமேக் செய்கிறார். வீராப்பு உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பத்ரி இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.


பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து இசையமைப்பது இப்படத்தின் ஹைலட்டான விஷயம். அதுமட்டும் இன்றி ஒரு பாடலுக்கு இருவரும் நடனமும் ஆடியிருக்கிறார்கள். இப்படி பல்வேறு புது அம்சங்களை சேர்த்து ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என்று நினைத்த இப்படக்குழுவினருக்கு இன்று பெரும் ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் இன்று யூடியூப் இணையத்தள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் படு கேவலமாக கமெண்ட் தெரிவித்துள்ளார்கள்.


அவற்றில் சில இதோ இங்கே:

பழைய தில்லு முல்லு படத்தை இப்போது ரிலீஸ் பண்ணாலும் 100 நாட்கள் ஓடும் ஆனால், இந்தப் படம் ஓடாது.

தேவையில்லாத ரீமேக்.

தமிழ் சினிமாவுக்கு வந்த கேடு காலம்.

ரஜினி மற்றும் அந்த குழுவுடன் இவற்றை ஒப்பிடக்கூடாது.

இப்படி தில்லு முல்லு ரீமேக்கிற்கு எதிராக பல்வேறு கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் சில ரசிகர்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்ற ஆறுதல் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” - தனுஷிடம் சீறிய நயன்தாரா?..

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் 

ஆரூர் மூனா செந்தில் விமர்சனம்

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

அட்ராசக்க சிபி செந்தில்குமார்  விமர்சனம் 

*********************************

\தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாராவின் காதல் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அனைவரும் அறிநததே. அவர் என்ன தான் தேவையே இல்லை என்று ஒதுக்கி வைத்தாலும் சில சம்யங்களில் அவர் காதலினால் பாதிப்பிற்குள்ள்ளாகிறார்.




யாருடனாவது பேசினால் தானே பிரச்சனை என்று பல படங்களில் நடித்து வந்தாலும் திரையுலகிடமிருந்து விலகியே இருந்து வருகிறார் நயன்தாரா. படமே! என்று அமைதியாக இருந்து வந்த போது ஒரு பாடல் ரூபத்தில் வந்தது நயன்தாராவுக்கு பிரச்சனை. நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். 


இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எதிர்நீச்சல் படத்தின் இயக்குனர் துரை “சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல” என்ற பாடல் ஹீரோவின் காதல் தோல்வியின் போது வரும் பாடல். இந்த பாடலுக்கு நடமாடுபவர் உண்மையிலேயே காதலி தோல்வியடைந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நயன்தாராவை தேர்வு செய்து, அவரிடம் பேசுமாறு தனுஷிடம் கூறினோம். தனுஷும் பேசி சம்மதம் பெற்றுத் தர பாடல் சூப்பராக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.


அவரது படத்தின் புரமோஷனுக்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும் ’இனி காதல் தோல்வி சப்ஜெக்ட் என்றால் நயன்தாரா தானா’ என்ற எண்ணத்தை திரையுலகில் ஏற்படுத்திவிட்டது. இதையறிந்த நயன்தாரா தனுஷிடம் ’இதுக்குத்தான் என்னை ஆட சொன்னீங்களா?’ என சீறியதாக கோடம்பாக்கத்தில் கிளுக் என்ற சிரிப்புடன் அடிக்குரலில் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் இயக்குனர் மாதிரி தனுஷ் வெளியே சொல்வாரா?

Thursday, April 25, 2013

வார்த்தை தவறிவிட்ட அ‌‌ஜீத்...? விருது வாங்கிய பிரபல இயக்குனர்..!


வார்த்தை தவறிவிட்டாய்.... 

கண்ணம்மாவைப் பார்த்து பாடியது போல் யாரும் அ‌‌ஜீத்தைப் பார்த்து பாடி விடுவார்களோ? விஷயம் வேறொன்றுமில்லை. தான் நடிக்கிற படத்தில் அல்டிமேட் என்று அடை மொழி போடுவது, ஊர் திரண்டு வாழ்த்த, 'வந்தேண்டா உங்க தலைவன்' என்பது மாதி‌ரி ஓபனிங் சாங் வைப்பது, பன்ச் டயலாக் போடுவது... இதெல்லாம் சுத்தமா கூடவே கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் அ‌‌ஜீத். ஆனால்...

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌‌ஜீத் நடித்து வரும் படத்தில் இதில் ஒன்று இடம் பெறுகிறதாம். ஓபனிங் மாஸ் சாங்.

பில்லா படத்தில் சேவற்கொடி பறக்குதடா ஓபனிங் சாங் வைத்த மாதி‌ரி இதிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வற்புறுத்தி விஷ்ணுவர்தன் அ‌‌ஜீத்திடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அட்வைஸ் பண்ற மாதி‌ரியெல்லாம் இல்லாமல், செம கிராண்டாக, கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார்களாம். பாடியிருப்பது சங்கர் மகாதேவன்.

அ‌‌ஜீத் அவ்வப்போது வார்த்தை தவறினாலும் நன்றாகதான் இருக்கும்.

*****************************



குறும் படம், ஆவணப் படங்கள் எடுக்கிற இளைஞர்கள் இப்போது வ‌ரிசையாக படம் இயக்குகிறார்கள். குறும் படங்கள் சினிமா இயக்குவதற்கான விசிட்டி‌ங் கார்டாக மாறியிருக்கிறது.

இயக்குனர் பாண்டியராஜன் விஷயத்தில் அப்படியே உல்டா. இருபது வயதில் ஆண் பாவம் படத்தை இயக்கி ஒரு வருடம் ஓட வைத்தவர் இப்போது குறும் படங்கள், ஆவணப் படங்கள் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவரது படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றிருக்கிறது. 

இந்நிலையில் மண் பானை என்ற படத்துக்காக அமெ‌ரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மண் பானைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், எடிட்டிங் பி.லெனின். 

Wednesday, April 24, 2013

தலைவா படத்தின் கதை எது? குழப்பத்தில் ரசிகர்கள்!


இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தின் ‘தலைவா’ என்ற பெயர் ரிலீஸானதும் திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பு சூழ்ந்துகொண்டது. அரசியல் சம்மந்தப்பட்ட படமாக தலைவா இருக்குமா என்ற கேள்வியும் பலரது தலையை பிய்த்துக்கொள்ள வைத்தது. 





சில நாட்களில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன் விஜய் நிற்பது போன்ற தலைவா படத்த்ன் போஸ்டர் ரிலீஸ் ஆனதும் இது அரசியல் சம்மந்தப்பட்ட படம் தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் தலைவா திரைப்படத்தின் இயக்குனர் விஜய்யும், நடிகர் விஜய்யும் அரசியலுக்கும், இத்திரைப்படத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என அடித்துக் கூறினர். 


தலைவா அரசியல் சம்மந்தப்பட்டது இல்லையென்றால் வேறு எந்த மாதிரியான் படம் என்று பலரும் குழம்பியிருக்கும் சமயத்தில் தலைவா திரைப்படத்தின் கதை வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி தலைவா திரைப்படத்தில் “விஜய் ஒரு தமிழ் நடனக்குழுவின் தலைவனாக இருக்கிறாராம். பல நாடுகளுக்கும் சென்று ’தமிழ் பசங்க’ என்ற குரூப்பின் பெயரில் நடனமாடுவது இவர்களின் வேலையாம்” 


மேலும் தமிழ் பசங்க என்ற ஒரு பாடலும் தலைவா திரைப்படத்தில் இடம்பெறுகிறதாம். தமிழ் பசங்க பாடல் காட்சிகளை படமாக்குவதற்காகத் தான் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த்தாம் தலைவா படக்குழு. அந்த கதையா? இந்தக் கதையா? என்ற குழப்பத்தில் தலைவா படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Monday, April 15, 2013

ஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா



பெயர் : ஜெயலலிதா

அடைமொழி : புரட்சி தலைவி (என்ன புரட்சி பணங்க அவங்களுகே தெரியாது )

சமிபத்திய அடைமொழி : பொன்னியின் செல்வி ( 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை முன்னித்து அவர்கள் நியாபகம கொடுத்தது )

பலம் : எம். ஜி. ஆர். / இரட்டை இலை

பலவீனம் : பெங்களூர், சசிகலா

சாதனை : 2 மணி நேரம் இருந்த மின்வெட்டை 26 மணி நேரம் ஆகியது (ஓ.. நளைக்கு 24 மணி‌ே

வேதனை : தமிழ்நாட்டு மக்கள்

சசிகலா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்

சசிகலா நடராஜன் : இவங்க எனக்கு தோழிதான் ஆனா அவங்க வீட்டுகாறு எனக்கு எதிரி

தினகரன் திவரகரன் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்

நண்பர்கள் : சசிகலா அண்ட் கோ

எதிரிகள் : கலைஞர் கலைஞர் கலைஞர் மட்டுமே

ஈழம் : தேர்தல் வரை

டெல்லி : மணி அடித்த உடன் வெளி ஏறும் இடம் பழக்கதோசத்தில்

கட்சி : அதிமுக - ............ ................... முன்னேற்ற கழகம் (நீங்களே ஏதாவது போட்டுக்கங்க...)
 

அமைச்சர்கள் : கூன் விழுந்தவர்கள் மட்டும்.


Thalapathy Bharani (பேஸ்புக்கில்)

சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தனுஷ் ஆதங்கம்...


  1. ரோஜா கூட்டம், பூ திரைப்படங்களின் இயக்குனர் சசி, பரத் நடிப்பில் 555 திரைப்படத்தை இயக்கியுள்ளார். 555 திரைப்படத்தின் போஸ்டர்களே ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்ட, இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இயக்குனர் ஷங்கர், தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் வருகையுடன் விமர்சையாக நடந்தது.



  1. ஷங்கர் இசைத் தகடுகளை வெளியிட தனுஷ் பெற்றுக்கொண்டார். இசைவெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் “சினிமாவில் பெயர் சம்பாதிக்கலாம். புகழ் சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல நண்பர்களை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம். இயக்குனர் சசி பற்றி பேசிய பலரும் ‘அவர் நல்ல நண்பர். நெருங்கிய நண்பர்’ என்று தான் பேசினார்கள்.


  1. சசி அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக பழகி நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.படிக்காதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்காமலேயே கலந்துகொண்டவர் பரத். அதனால் இந்த இசைவிழாவில் நான் கலதுகொள்வது என்னுடைய கடமையாகிறது. இந்த படத்தில் சத்தியமாக என்னால் நடித்திருக்க முடியாது என படத்தின் ஸ்டில்களை பார்த்தவுடன் தெரிந்துகொண்டேன்” என்று பேசினார்.


  1. விழாவிற்கு வந்தவர்கள் பலரும் பரத்தின் கடின உழைப்பை பாராட்டி பேசினார்கள். பிறகு பேசிய பரத் “ நான் தனுஷை கலந்து கொள்கிறீர்களா என ஒரு வார்த்தை தான் கேட்டேன். எவ்வித நிபந்தனையோ, யோசனையோ இல்லாமல் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்” என்று பெருமையுடன் பேசினார்.

Saturday, March 30, 2013

இது கவனக்குறைவல்ல, அலட்சியம்!

மழை வெள்ளத்தால் குடிசைகள் அடித்துச் செல்லப்படுவதும் மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதும் இயற்கைப் பேரிடர். இதையும்கூட சரியான திட்டமிடல் மூலம் தடுக்க முடியும். இருப்பினும் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல், அணை நீரைத் திறந்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதை ஒரு விபத்து என்று விட்டுவிட்டால் போதுமா? அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டாமா? 

மார்ச் 27-ஆம் தேதி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஒரு தையலர் குடும்பத்தினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இதற்குக் காரணம், பில்லூர் அணையிலிருந்து திடீரென 6,000 கனஅடி தண்ணீர் மின்உற்பத்திக்காகத் திறந்துவிடப்பட்டதுதான். இவர்கள் பவானி ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறி நின்று தப்பிக்க முயன்றும் முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், வண்டிப்பாளையம் அணை நீர் திடீரென 8,000 கனஅடி திறக்கப்பட்டு, அங்கே ஞாயிறு விடுமுறைக்காக குழந்தைகளுடனும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்துடனும் மகிழ்உலா வந்திருந்த இரண்டு குடும்பத்தினரில் 9 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் இறந்தனர். 

இந்தச் சம்பவத்திலும் சொல்லப்பட்ட காரணம், மின்உற்பத்திக்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டோம். எதிர்பாராத வகையில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்பதுதான். 

இவ்வாறு அணையின் நீர் திறக்கும்முன்பாக சங்கொலி எழுப்புவது மரபு. "அதிகாரிகள் ஏன் அவ்வாறு செய்யவில்லை?' என்ற கேள்விக்கு, அன்றைய ஆட்சியர் அளித்த பதில், "உள்ளூர் மக்களுக்கு அணை நீர் திறக்கப்படும் நேரம் தெரியும். பராமரிப்புப் பணிக்காகத்தான் அணையைச் சிறிதுநேரம் மட்டுமே மூடி வைத்திருந்தனர்' என்பதுதான். அணையை பலநாள் மூடிவைத்து திறப்பு விழா செய்தால் மட்டுமே சங்கொலி ஒலிக்கும் என்பதுபோல சித்திரிக்கப்பட்ட இந்தப் பதில், அதிகாரிகளையும் தொடர்புடைய ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவாது. 

2011-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், இந்தூர் அருகே ஒரு சுற்றுலாத் தலத்தில் மழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 5 பேர் உறவினர்கள் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கோ பல கிலோமீட்டர் தொலைவில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து, இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான தகவலோ, எச்சரிக்கையோ இல்லை. அதை வேண்டுமானால் இயற்கை இடர் என்றோ, விதிப்பயன் என்றோ எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டதா, அணைகளிலிருந்து நீரைத் திறந்து விடும் செயல்? 

ஒரு ரயில் வண்டி ஓட்டுநர்கூட, ஆளில்லா சாலைக்குறுக்குத்தடம் நெருங்கி வரும் முன்பாக ஒலி எழுப்புகிறார். சுமார் ஒரு மைல் தூரத்துக்கும் மேலாக அந்த ஒலி கேட்கும். ஆனால், அணையில் பல ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடும்போது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திறந்துவிடுவார்கள் என்றால், இதை எப்படி அனுமதிப்பது? ஒரு துயரச் சம்பவம் நடந்தபிறகும் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள் என்றால், தவறிழைத்தவர்களை மேலதிகாரிகளும், அரசும் தண்டிக்காமல் காப்பாற்ற முற்படுவதுதான் காரணமாக இருக்க முடியும். 

எல்லா அணைகளிலும் நீர் திறக்கும்போது எவ்வாறு குறைந்த அளவில் தொடங்கி, நீர்அளவைப் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும், எச்சரிக்கை ஒலி எழுப்பத் தேவையான வசதிகளை உருவாக்கித் தருவதற்கும் சட்டப்பேரவை நடைபெறும் இந்த நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வழி காண வேண்டும். முறையான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஒலி இல்லாமல் அணை நீர் திறக்கப்பட்டு அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு அணையின் பொறியாளரைப் பொறுப்பாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுங்கள் என்று மட்டுமே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்கள் அவ்வாறு வெளியேறினார்களா? வெளியேறினால் அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்தவித நடவடிக்கையையும் முன்னெச்சரிக்கையாகச் செய்வதில்லை. குடிசைகளும் மனிதர்களும் அடித்துச்சென்ற பிறகுதான் அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு, அவர்களுககு அரிசி, உணவு, உடை எல்லாமும் வழங்கப்படுகின்றன. முன்னதாகவே இவர்களைக் கட்டாயமாக வெளியேற்றி தங்க இடமும் உணவும் தந்தால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமே! 

ஜனநாயக இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, எந்த அசம்பாவிதத்திற்கும் யாரும் பொறுப்பேற்கவோ அல்லது பொறுப்பாக்கப்படுவதோ இல்லை என்பதுதான். ஓர் அரசு ஊழியர் தவறு செய்தால், அவரைத் தண்டிக்காமல் எப்படி காப்பாற்றுவது என்பதில்தான் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் முனைப்பாக இருப்பார்களே தவிர, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ, நிர்வாகம் சீர்கெடுவதைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது என்பதுதான் யதார்த்த உண்மை. 

அரசு ஊழியரின் குடும்பம் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர, பொதுமக்கள் அவதிப்படுவதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. எதிர்ப்பு வலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போதுகூடக் கடைநிலை ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவார்களே தவிர, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தவறுக்கு தார்மிகப் பொறுப்பேற்றதாக சம்பவம் இதுவரை இல்லை. இந்த நிலைமை மாறாதவரை, அப்பாவி இந்தியக் குடிமகனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் தோன்றவில்லை. 
(தினமணி தலையங்கம்)

Friday, March 8, 2013

”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம்” - கார்க்கி!


’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தின் பெயர் “ரெண்டாவது படம்”. தமிழ்ப்படம், ரெண்டாவது படம் என வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் அமுதன் தன் பட பாடல்களுக்கு குப்ப தொட்டி, ஆப்பு பர்த்டே, அடுத்த பருப்பு, ரோஜாப் பூ, டெத் ஆன்தம் (DEATH ANTHEM) என டைட்டில் கொடுத்திருக்கிறார். 

”ரோஜா பூ ஒன்று ராஜாவின் கைசேர... வானம் செந்தூரம் சூடும்” என்ற பாடல் 80-களில் வெளிவந்த பாடல்களின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவும்- வைரமுத்துவும் இணைந்து 80-களில் இணையற்ற பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின் அந்த ஸ்டைலில் யாராலும் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்ற குறை இப்போது தமிழ் சினிமாவில் இருப்பதை உணர்ந்தே அமுதன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். 


இந்த ரோஜா பூ பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதிய அனுபவம் பற்றி பேசிய மதன் கார்க்கி “ 80-களின் ஸ்டைலில் பாடல் எழுதியது எனக்கு சவாலாக இருந்தது. நான் சிறிய வயதிலிருந்தே வைரமுத்து - இளையராஜா இணைந்து உருவாக்கிய பாடல்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் பாடலை எஸ்.பி.பி - சித்ரா பாடியிருக்கிறார்கள். நான் எழுதிய வரிகளை முதல்முதலாக இருவரும் பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடல் இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கூறினார்.


புன்னகை மன்னன் படத்தில் பிரிந்த இளையராஜாவையும் வைரமுத்துவையும் இணைத்து வைக்க பலர் முயற்சி செய்தாலும், அது நடக்காமலே போனது. பாரதிராஜாவும் இந்த விஷயத்தில் போராடித் தோற்றுப்போனார். இந்த சூழலில் ரெண்டாவது படம் படத்தில் வரும் ரோஜா பூ ஒன்று என்ற பாடல் கேட்பவர்களை பரவசப்படுத்தும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது!


ரோஜா பூ - பாடல் வரிகள்...


குழு - மயில் தோகை கொண்டே 
விசிறி தோழன் ஒருவன் மயங்கிவிட்டானே
காதல் மதுவை அருந்தி... 
திருக்கோவில் தீபம் எனவே
தோழி கைத்தலம் பிடிக்க வந்தாலே
தீயில் ஒளியாய் பொருந்தி...
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே 
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே!


பல்லவி


ஆண் - ரோஜா பூ ஒன்று... ராஜாவின் கைசேர... 
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய்...
காற்றாய் நிறைந்தாய்...


குழு - உனக்கே பிறந்தாள் 
இதயம் திறந்தாள் 
நிலவாய் உன்னில் உதித்தாள்
காதல் தடம் பதித்தாள்


சரணம் - 1


ஆண் - தானாய் வந்ததொரு நந்தவனம் 
என் சொந்தவனம் 
பெண் - நீதான் காலமெங்கும் என் வசந்தம் 
ஒரு பொன்வசந்தம்
ஆண் - தேன் மழை பொழியவா
பெண் - நான் அதில் நனையவா
ஆண் - உயிரே... உயிரில் இணையவா...


சரணம் - 2


பெண் - காமன் கோயிலுக்குள் போக மேடை
அதில் ராஜ பூஜை
ஆண் - மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை 
பெண் - வேர்வையில் குளிக்கலாம்
ஆண் - பார்வையில் துடைக்கலாம் 
பெண் - உறவே இரவை படிக்கலாம்

Saturday, November 12, 2011

இந்த சில்லறைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி...


25 பைசா நாணயத்தை, புழக்கத்திலிருந்து அரசே நிறுத்திவிட்டது. பிச்சைக்காரர்கள் கூட, 50 பைசா நாணயங்களை வாங்குவதில்லை. பணப்பரிவர்த்தனை நடக்கும் எல்லா இடங்களிலும், 10.49 ரூபாய் எனில், 10 ரூபாய் எனவும், 10.51 ரூபாய் எனில், 11 என்றும், "ரவுண்ட் ஆப்' செய்யப்படுகிறது. மக்களும் இந்த, "ரவுண்ட் ஆப்' முறையை ஏற்றுக் கொள்ள பழகிவிட்டனர். 

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் பிடிவாதமாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவின் விலையை, அவ்வப்போது கூடுதலாக்கி அறிவிக்கும் போது, பைசா சுத்தமாகவே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் பெட்ரோல் விலையை, 1.82 ரூபாய் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. மக்கள் மீது கரிசனம் இருந்தால், விலையை உயர்த்தி இருக்கக் கூடாது. கரிசனம் இல்லை என்றான பின், அந்த 18 பைசாவில் என்னவாகிவிடப் போகிறது; பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் கூடுதல் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே! 

இனிமேலாவது, ஐ.ஓ.சி., எச்.பி., மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள், விலையை கூடுதலாக்கி அறிவிக்கும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று அறிவித்துத் தொலைக்கலாமே! எண்ணெய் நிறுவனங்களின் செவியில் ஏறுமா?

‌பெட்ரோல் வங்கிகளில் பெட்ரோல் போடும்போது இந்த  சில்லரை விஷயம் எவ்வாறு கையாளப்படுகிறது என்றும் தெரியவில்லை. அங்கு உள்ள மீட்டர்களில் ரூபாய்க்கான அளவு உள்ளதால் பெட்ரோல் போடுவோர்கள் 50 ரூபாய், 100 ரூபாய் எனதான் பெட்ரோல் போடுகின்றனர்.

இனியாவது இந்த பைசா பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமா நாடு..?

Wednesday, August 3, 2011

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!


இன்றைய இளைஞர்களின் விருப்பமான நடிகர், இளைஞர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் யார் தெரியுமா... அஜீத்!


ஆனந்த விகடன் பத்திரிகையின் சினிமா இணையதளத்தில் 'இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?' என்று கேள்வி கேட்டிருந்தார்கள்.

இதற்கு பதிலாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களில் ஒருவர் பெயரை குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது. 

38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள வாக்கெடுப்பில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார். 

சூர்யாவுக்கு 495 வாக்குகளும், கமலஹாசனுக்கு 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 376 வாக்குகளும், சிம்புவுக்கு 199 வாக்குகளும், ஆர்யாவுக்கு 107 வாக்குகளும், சீயான் விகரமுக்கு 73 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது. 

முன்பு வட இந்திய இணைய தளம் நடத்திய சர்வேயிலும் இதேபோல அஜீத் ரசிகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - ஒரு பார்வை...


இந்த உலகத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே காதல் என்ற மரம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது. கலாச்சார மாற்றத்தால் காதலும் வளர்ந்து வளர்ந்து இன்று மிக உயரத்தில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் தற்போது 100 %  காதல் திருமணங்கள்.

கலாச்சாரத்தில் ஊரிக்கிடக்கும் நம் இந்தியாவிலும் அதிக காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. கிட்டதட்ட 50-லிருந்து 60 % வரை காதல் திருமணங்கள் நடப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சரி காதல் திருமணங்கள் சரிதான் ஆனால் இந்த காதல‌ர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.... ஒரு பெண் காதலை சொல்லும் வரை அமைதியாக இருப்பார்கள் ஓகே சொல்லிவிட்டால் போதும் அவ்வளவுதான், பார்க், பீச், சினிமா, ஓட்டல், கோயில் என் எங்கேயும் இவர்கள்தான் ஆக்கிரமித்து விட்டார்கள்... (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்க ரோட்டில் எக்கடி நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அதுக்குதான் அந்த படம்)

ஆகையால் தற்போது எங்கேயும் காதல் தான் நிலவுகிறது. ஆகையால் காதல் இன்று சமுதாயத்தில் இருந்து நீக்க முடியாததாக இருக்கிறது.

 (நீங்க இதைதானே சொல்றீங்க)

டிஸ்கி 1: இது சமூக விழிப்புணர்வு பதிவு.. உண்மைதாங்க...
டிஸ்கி 2: இதற்கும் எங்கேயும் காதல் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை (கிரேட் எஸ்கேப்)
டிஸ்கி 3: நீங்க எதாவது சமூக செய்தி சொல்லணுமா.. சொல்லுங்க...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...