2003-ம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பூக்களுக்கு வாசல் திறந்து வசந்தத்தை காட்டியது கூகுள் நிறுவனம். 2004 ம் ஆண்டு முதல் விஸ்வரூபம் எடுத்து வந்த தமிழ் வலைப்பூக்கள் நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் மாறியது.
புதிய புதிய பதிவர்கள் வந்து தன்னுடைய படைப்புகளையும், தன்னுடைய ஆக்கங்களையும் இந்த வலைப்பூக்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவவிடப்பட்டது.
அடுத்தக்கட்டத்தில், தமிழ்10, இண்டிலி, தமிழ்மணம், உலவு, தமிழ்வெளி போன்ற திரட்டிகள் வந்து தமிழ் வலைப்பூக்களின் வாசகர்களை அதிக அளவில் ஈர்த்தது. இதனால் வலைப்பதிவர்களும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எழுத ஆரம்பித்தார்கள். பதிவுலகம் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது.
ஆனால் சில ஆண்டுகளாக கூகுள் பஸ் வந்தபிறகு அதன் வசதியை காரணமாக கொண்டு பிளாக்கில் எழுதுபவர்கள் அப்படியே கூகுள் பஸ்க்கு சென்று விட்டனர். இதனால் பதிவு எழுதும் பதிவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
கூகுள் நிறுவனம் கூகுள் + என்ற சமூக வலைதளத்தை பேஸ்புக்கிற்கு போட்டியாக ஆரம்பித்தது. ஆரம்பித்த உடன் கூகுள் பிளஸ்க்கு கிடைத்த ஆதரவு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் கூகுள் பஸ்ஸைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையாத பட்ச்சத்தில் கூகுள் பிளஸ்-ன் தாக்கம் குறைய தொடங்கியது இதனால் கூகுள் நிறுவனம் கூகுள் நிறுவனம் கூகுள் பஸ்ஸை மூட முடிவெடுத்துள்ளது என்று நினைக்கிறேன்.
இன்று காலை முதல் கூகுள் பஸ் மூடப்பட்டுள்ளது. (கூகுள் மெயிலை ஓபன் செய்து பார்க்க) கூகுள் பஸ்ஸில் எவ்வளவோ தகவல்கள் பகிரப்பட்டிருந்தது ஆனால் அது மூடப்பட்டவுடன் அவை அனைத்தும் அதோடே போய் விட்டது. இதையே தன்னுடைய பிளாக்கில் எழுதியிருந்தால் அவைகள் கால பொக்கிஷமாக இருந்திருக்கும் என்பதை கூகுள் பஸ் வாடிக்கையாளர்கள் கருதுவார்கள்.
இதனால் மீன்டும் பிளாக் பக்கம் அவர்கள் பார்வை திரும்ப வாய்ப்பிருக்கிறது. இனி தொடர்ந்து பிளாக் எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று நம்புகிறேன். இதனால் பிளாக் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிரிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆகையால் நண்பர்களே தங்களின் படைப்புகளை, கருத்துக்களை விவாதங்களை தங்களுக்கு என்று ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் பறிமாறிக்கொள்ளுங்கள். அவைகள் காலத்திற்கும் அடையாளம் காட்டப்படும்.
அடடே பஸ் போயிடுச்சா?
ReplyDeleteவரட்டும் வரட்டும் நல்லது தான்!
ReplyDeleteபாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி அதிரடியாக ரத்து அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது
ReplyDelete// காலத்திற்கும் அடையாளம் காட்டப்படும்.//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்..