சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு
இப்படி தமிழில் உணவகங்களில் கேட்டால் ஏதெ நம்மை வைகிறான் என்று பரிமாறுபவர் அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....
தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...
இப்படி தமிழில் உணவகங்களில் கேட்டால் ஏதெ நம்மை வைகிறான் என்று பரிமாறுபவர் அடிக்க வந்தாலும் ஆச்சரியம் இல்லை....
தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...
புரிய வைக்க தயாராக இல்லை...!
ReplyDeleteதூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ...
ReplyDeleteஉண்மைதான் ..ஆதங்கம் ..!
நாம் பரப்புவோம். பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteபுரோட்டா தமிழ் வார்த்தையை கடையில் போய்ச் சொன்னால் நிச்சயம் புரியலை என்று தான் சொல்வார்கள்.
ReplyDelete//தூய தமிழ் இன்னும் படித்தவர்களையே சென்றடையவில்லை... பாமரனை சென்றடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ//
ReplyDeleteகணிணி,இணையம்,வலைப்பூ,மடிக்கணிணி,இணைய தளம், எல்லாம் எப்படி சாத்தியப் பட்டது?.தைரியம் சூழ்நிலையை பொறுத்தது என நினைக்கிறேன்.
அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். எளிமை முக்கியம்
Deleteஇப்போதைக்கு நடக்கக்கூடியதில்லை!
ReplyDeleteஇது நல்லா இருக்கே !
ReplyDeleteஇதில் துவையல் மட்டும் நடை முறையில் இருக்கிறது.
ReplyDeleteநமக்கே உரித்தான உணவு வகைகளை தவிர பிற உணவு வகைகளை தூய தமிழ்படுத்துவது தேவையில்லை என்றுதான் கருதுகிறேன்.பிற மொழி கலக்காத தூய மொழி உலகில் எதுவும் இல்லை என்றுதான் கருதுகிறேன்.
கூல் டிரிங்க்ஸ் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்கலாம் குளிர்பானம் என்ற சொல் .ஓரளவுக்கு பயன் படுத்தப் படுகிறது. பரோட்டாவை பரோட்டா என்று சொல்வதில் தவறில்லை. இட்லியை வேற்று மொழியினரும் இட்லி என்றுதானே கூறுகிறார்கள்.
எப்படி இருப்பினும் உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். பல பெயர்களை சேகரித்துத் தந்திருகிறீர்கள். வாழ்த்துக்கள்
எளிமையான தமிழில் பெயர் வைத்தால் எளிதில் சென்றடையும். அல்லது ஆங்கில மொழி போல சில பல சொற்களை அப்படியே தமிழில் எடுத்துக் கொள்ளலாம்..
ReplyDelete// ஈரட்டி, மாச்சில்// இந்தச் சொற்கள் தமிழ்தான் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ஐயா?
ReplyDelete//லட்டு - கோளினி// ஏன் கோளினி என்ற பெயர்? கோளம்+இனி ? அப்படின்னா என்ன பொருள்?
ReplyDeletekuttan baruthi tnmdharan@yahoo.com rajiv2020 jaya100 robin dindiguldhanabalan soundar76rasi@gmail.com jojosurya2011 kkarun09 ஆகிய நண்பர்கள் உங்கள் இடுகையை பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இந்தத் தமிழ் சொற்கள் எப்படி உருவாயின என்று சொல்லுங்களேன்.
ReplyDeleteஎல்லாமே சாத்தியம்தான் சில வார்த்தைகளை நடைமுறைப்படுத்த எல்லோரும் தயாராக இருந்தால் கண்டிப்பாக எலலாமே சாத்தியம்தான்...
Deleteஉதாரத்திற்கு மதராஸ் சென்னையாகிவிட்டது....
இது நடைமுறை சாத்தியம்....
இதுவும் கண்டிப்பாக ஒரு நாள் அரங்கேரும்....
நீங்களும் ஒத்துழைத்தால்
உங்கள் தமிழ் பற்று உங்கள் பெயரிலேயே தெரிகிறது....
Deleteவாழ்க உங்கள் தமிழ் ஆர்வம்
தேவையற்ற இறுகலான தமிழ்த்தனம், இருக்கும் தமிழை ஒழுங்காய் பேசினாலே போதும். செந்தமிழாக்கலை பின்னர் சிந்திக்கலாம்.
ReplyDeleteஆமோதிக்கிறேன்
Deleteவாழ்க உங்கள் தமிழ் ஆர்வம்
ReplyDeleteமொழி என்பது நாம் சொல்லுவது அடுத்தவர்க்கு எளிதாக புரிவதற்கே.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின்தேவதாஸ்