Monday, May 30, 2011

ஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்!



மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வைகோ பங்கேற்கிறார்.

பிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் இக் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். அப்போது இலங்கையில் நடந்த படுகொலைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளின் பார்வையை வைகோ ஈர்ப்பார் என்று தெரிகிறது.

ஈழத்தமிழர் விவகாரம் குறித்து இங்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Friday, May 27, 2011

10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...

 
10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.

முதலிடம் பிடித்தவர்கள்

செய்யாறு மின்னலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நித்யா, கோபிச்செட்டிப்பாளையம், ரம்யா, சேலம் சங்கீதா, சென்னை திருவொற்றியூர் ஹரிணி.

11 பேர் 2வது இடம்

சேலம் மாவட்டம் மல்லூர் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி விக்னேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் போல மேலும் 10 மாணவ, மாணவியர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

24 பேருக்கு 3வது இடம்

494 மதிப்பெண்களைப் பெற்று 24 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் விரைவில் காணலாம்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.

பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.

இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாயின.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஜூன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல்

மதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மறு கூட்டல் விண்ணப்பம்

மறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு

தேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.

ஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும் நடைபெறும்.

Wednesday, May 25, 2011

மங்காத்தா அஜித்தின் அட்டகாசம்....


தயாநிதி அழகிரி மற்றும் ரத்னவேல் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் படம் மங்காத்தா. இது அவரது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அசல் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் கலவையாக உருவாகி வருகிறது. இவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படல் நடித்துள்ளனர்.

சென்னை, மும்பை தாராவி, உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இறுதிகட்ட படப்படிப்பிற்காக மே 10 அன்று பாங்காங்க் செல்ல இருக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பாடல்கள் வெளியிடப்படவில்லை. ‘விளையாடு மங்காத்தா... விடமாட்டா எங்காத்தா...’ என்ற ஒரு பாடலின் சரணம் மட்டும் டீஸராக வெளியாகி உள்ளது.

ஒளிப்பதிவை சக்தி சரவணன் கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பு வேலைகளை பிரவீண் & ஸ்ரீகாந்த் கவனிக்கின்றனர். இப்படத்தினை முதலில் அஜித்தின் பிறந்தநாளான மே – 1 அன்று வெளியிடுவதாக இருந்தது. அது முடியாமல் போகவே, பாடல் வெளியீடு மே- 1 அன்று இருக்கும் என்றனர். அதுவும் முடியாமல் போனதால், அன்றைய தினத்தில் ஒரு டீஸர் வெளியிட்டனர்.

மங்காத்தாவின் அஜித்தின் அட்டகாசம் ஜூன் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

Monday, May 16, 2011

ரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...



பல்வேறு உடல் கோளாறுகள் காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.

மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இரைப்பை மற்றும் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

புகைப் பழக்கத்தால் வந்த சிக்கல்...

ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும்போது, "ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறோம். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். விரைவில் குணமாகி விடுவார்," என்றார்.

ராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறும்போது, "ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம்" என்றார்.

ரஜினியின் உறவினர் ஒருவர் கூறும்போது, "ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்து வமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.

தனுஷ் சமாதானம்..

இந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (நன்றி தட்ஸ் தமிழ்)

Saturday, May 14, 2011

'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு




சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இதற்காக புதிய எம்.எல்.ஏக்கள் கூடினர்.

பின்னர் இக்கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளைக் கூறி பேசினார் விஜயகாந்த்.

'வசவாளர்கள் வாழ்க'-வடிவேலுக்கு 'வாழ்த்து'!:

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் காரணம் தி.மு.க,வை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.

சிறந்த எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் சுட்டிக் காட்டி பேசுவோம். அதற்குத் தயங்க மாட்டோம்.

அதிமுக, தேமுதிக இடையிலான உறவு பலமாகவே இருக்கிறது என்றார் விஜயகாந்த்.

வடிவேலு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வசவாளர்கள் வாழ்க' என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார் விஜயகாந்த். (தட்ஸ்தமிழ்)

சட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி தேமுதிகதான். எனவே இக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில்தான் திமுக அமரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.

ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்ச்சி..



தேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.

தோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.

இதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், "தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.

ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், "அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்", என்றனர்.

Wednesday, May 11, 2011

அழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு திரையிடல்



இயக்குனர் சுசீந்தரனின் இயக்கத்தில் நாளை (12-ம் தேதி) வெளியாக இருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ் எழுத்தாளர்களுக்கென பிரத்தியேகமாக இன்று திரையிடப்பட்டது.

சிறுகதை

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சிறுகதை அழகர்சாமியின் குதிரை. அக்கதை பத்திரிகையில் வெளியான போதே பல்வேறு தரப்பின் பாராட்டுக்களைப் பெற்றது. தேனி அருகேயுள்ள சிறு கிராமத்தில் தான் வளர்க்கும் குதிரையின் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அப்பாவி கிராமத்தானின் கதையே அது.

திரைப்படம் ஆனது

சுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார் பாஸ்கர் சக்தி. இருபடங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர்.

சிறப்பு திரையிடல்

அப்பாக்குட்டி, ஐஸ்வர்யா இவர்களோடு ஒரு குட்டிக்குதிரையும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சத்தியம் தியேட்டர் 6 டிகிரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கென் ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடலில் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், யுகபாரதி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

Monday, May 9, 2011

பெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)


கடந்த மாதம் பெண் எழுத்து என்ற தலைப்பில் தொ்டர் பதிவுகள் வந்தது. அது நம்ம மகளிர் அணியினர் எழுதி வந்தனர். மேலும் சில ஆண் பதிவர்களும் அதே தலைப்பில் பதிவுகள் வெளியிட்டனர். நாமும் ‌இதே தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று நினைத்து அதைப்பற்றி பல்வேறு கோணங்களில் நானும் ஆராய்ச்சி நடத்தி வந்தேன். 

என் ஆராய்ச்சியின் பயனாக பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...

ஙஞணநமன
 
 மேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...


புரிய வில்லையா... விளக்குகிறேன்..
  • வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
  • மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
  • இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
 வல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.
 

அப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது  ய் ர் ல் வ் ழ் ள்
இதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..
 
கண்டிப்பா டிஸ்கி போடனும் :

1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.
2. நாங்களும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..
3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...

Saturday, May 7, 2011

எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்?


உடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:

ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.

இருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்," என்றார்.
 

Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - ஒரு பார்வை...


இந்த உலகத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே காதல் என்ற மரம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது. கலாச்சார மாற்றத்தால் காதலும் வளர்ந்து வளர்ந்து இன்று மிக உயரத்தில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் தற்போது 100 %  காதல் திருமணங்கள்.

கலாச்சாரத்தில் ஊரிக்கிடக்கும் நம் இந்தியாவிலும் அதிக காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது. கிட்டதட்ட 50-லிருந்து 60 % வரை காதல் திருமணங்கள் நடப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சரி காதல் திருமணங்கள் சரிதான் ஆனால் இந்த காதல‌ர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.... ஒரு பெண் காதலை சொல்லும் வரை அமைதியாக இருப்பார்கள் ஓகே சொல்லிவிட்டால் போதும் அவ்வளவுதான், பார்க், பீச், சினிமா, ஓட்டல், கோயில் என் எங்கேயும் இவர்கள்தான் ஆக்கிரமித்து விட்டார்கள்... (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்க ரோட்டில் எக்கடி நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அதுக்குதான் அந்த படம்)

ஆகையால் தற்போது எங்கேயும் காதல் தான் நிலவுகிறது. ஆகையால் காதல் இன்று சமுதாயத்தில் இருந்து நீக்க முடியாததாக இருக்கிறது.

 (நீங்க இதைதானே சொல்றீங்க)

டிஸ்கி 1: இது சமூக விழிப்புணர்வு பதிவு.. உண்மைதாங்க...
டிஸ்கி 2: இதற்கும் எங்கேயும் காதல் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை (கிரேட் எஸ்கேப்)
டிஸ்கி 3: நீங்க எதாவது சமூக செய்தி சொல்லணுமா.. சொல்லுங்க...

Wednesday, May 4, 2011

காபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்கள்...


உங்களுக்கு தெரியுமா தற்போது காபி டூ பேஸ்ட் பதிவர்களை குறிவைத்து ஒரு கும்பல் மாபெறும் புரட்சியில் இறங்கியுள்ளது. காபி டூ பேஸ்ட்  பதிவர்களை திருத்தி விட்டால் நமது இந்தியா கண்டிப்பாக வல்லராசகிவிடும்... அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை கண்டுபிடித்து அந்த பலான பணத்தை திருப்ப முடியும். அந்த நாட்டில் ஜாதி மதங்களை ஒழித்துவிட முடியும். இன்னும் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அறவே நிறுத்தி விட முடியும். ரா‌ஜபக்சே திருத்திவிட முடியும், ஆகையால் கண்டிப்பாக காபி டூ பேஸ்ட் பதிவர்க‌ளே திருந்தி விடுங்கள்...


சரி அது போகட்டும். இனி நான் ஒரு பரபரப்பு மிகுந்த காபி டூ பேஸ்ட் தருகிறேன். படித்து பார்த்து ரசித்து விட்டுச் செல்லுங்கள்.

இது தாங்க காபி.. (காபியில் பல்வேறு வகையுள்ளது அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.)




இது டூ தானே.. அட உண்மைதாங்க...

இது என்ன பேஸ்ட்-ன்னு தெரியல... அவசரத்துக்கு இதுதான்  கிடைச்சது....

டிஸ்கி-1 : பதிவுலகம் உருவானது உலகத்தமிழர்கள் ஒன்று படுத்த, தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மட்டுமே தனிஒரு பதிவரை விமர்சிக்க இங்கு யாருக்கு அதிகாரம் இல்லை.


டிஸ்கி-2 : இங்கு யார்வேண்டுமானாலும் எத்தனை கமாண்ட் வேணும்னாலும் போடலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்... இது நண்பர்களுக்கான பதிவு

Monday, May 2, 2011

கண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...

விவரம் அறிய.. இதை கிளிக் செய்யவும்....

தங்கள் வருகைக்கு நன்றி...

மங்காத்தா ரிலீஸ் தேதி....?

ஜீத் ரசிகர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான். மன்றங்களே வேண்டாம் என்று அவர்களது நாயகன் அஜீத் அறிவித்து விட்ட நிலையிலும் கூட அஜீத் நடித்துள்ள மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கவும் அதை ரசிக்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அஜீத் ரசிகர்கள் அத்தனை பேரும் ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அஜீத் விடுத்துள்ள அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளனர். ஆனாலும் அவர்கள் சற்றும் தளரவில்லை. மன்றங்களுக்குள் புகுந்து விட்ட தேவையில்லாத அரசியலைக் களையும் வகையில்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அஜீத். ஆனால் அவர் ரசிகர்களைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அஜீத் அறிவிப்பை ஓரம் கட்டி வைத்து விட்ட அவர்கள் தற்போது அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்காக காத்துள்ளனர்.

அஜீத்தின் பிறந்த நாள்ளான மே 1. இந்தத் தேதியில்தான் மங்காத்தா வருவதாக திட்டமிடப்படடஜ்டிருந்தது. தற்போது அது ஜூனுக்குத் தள்ளிப் போய் விட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தை பெரும் வெற்றியாக்குவதறப்காக அவர்கள் தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அஜீத் ரசிகர்களின் இந்த வித்தியாச ஆர்வம், திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...

Sunday, May 1, 2011

ரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....



நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்தேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். 
 
இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.

ரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது… காணாவாவது… அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க… என்று சிரித்தபடியே கூறினார்.

இன்னும் என்னனன்ன இன்னல்களை வடிவேலு சந்திப்பார் என்று  ‌பொருத்திருந்து பார்ப்போம்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...