ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கும் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், அதனை வரையறுக்கும் குழுவில் பொதுமக்கள், பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, கடந்த மாதம் 5ம் தேதி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு அலைகளை ஏற்படுத்தியதால், அவர் உள்பட 5 சமூகசேவகர்கள், அமைச்சர்கள் அடங்கிய லோக்பால் கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் லோக்பால் மசோதாவின் அதிகார வரம்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கறுப்பு பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும், ஊழலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 4ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக யோகா குரு ராம்தேவ் அறிவித்தார். அவர் உண்ணாவிரத திட்டத்தை கைவிட மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தது. வருமான துறை அதிகாரிகள் அவரை சந்தித்து, கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். பிரதமர் மன்மோகன் சிங்கும் கடிதம் எழுதினார். இதற்கிடையே டெல்லி வந்த பாபா ராம்தேவ்வை அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், பவன் குமார் சுபோத் காந்த் சகாய் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை ஏற்க ராம்தேவ் மறுத்து விட்டார். அவரிடம் மீண்டும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதற்கிடையே ராம்தேவ் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, தானும் அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியதாவது, ‘‘ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அரசு பலவீனப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஜூன் 5ம்தேதி முதல் ராம்தேவுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க போகிறேன். எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு வாக்குறுதி அளித்தது. இப்போது எங்களை ஏமாற்ற நினைக்கிறது. ஊழலுக்கு எதிராக நாங்கள் இணைந்து போராடுவோம். லோக்பால் மசோதா குறித்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை’’ என்றார்.

பாட்டு அண்ணே வணக்கம் அண்ணே...
ReplyDeleteஇந்த நியூஸ் முந்தாநாளே வெளிவந்துருச்சே அண்ணே ஹி ஹி...
ReplyDeleteபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்...
ReplyDeleteராம்தேவுடன் கலமிருங்குகிறார் அன்னா ஹசாரே ..!//
ReplyDeleteஎன்னாது இது..? கப்பல்லையா "கலம்" இறங்க போறாயிங்க..?
அடுத்த பரபரப்பு செய்தியா? வடக்கே பரபரப்புக்கு பஞ்சமில்லை.
ReplyDelete