யுஏ சான்றிதழை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்குப் போய் சில கட்களுடன் யு சான்று பெற்றது தலைவா படம் என்று வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் படத்தின் பிஆர்ஓ.
அந்தப் படம் என்ன சான்றிதழ் பெற்றது என்பதை நாங்களாக சொல்லும் வரை காத்திருக்கவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விஜய் நடித்துள்ள தலைவா படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படத்துக்கு சென்சாரில் யுஏ சான்று தரப்பட்டது. இதனால் அரசின் வரிச்சலுகைகள் கிடைக்காது என்பதால் படத்துக்கு யு சான்று கோரி ரிவைசிங் கமிட்டிக்கு போனார் தயாரிப்பாளர்.
அதன்படி நேற்று முன்தினம் இந்தப் படத்தைபப் பார்த்தது ரிவைசிங் கமிட்டி. படசத்தில் சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் காட்சிகளுக்கு கட் கொடுத்து, யு சான்று தந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை படத்தின் பிஆர்ஓ நிகில் முருகன் மறுத்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டரில், ' தலைவா சென்சார் சான்று குறித்து வந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதுகுறித்து விரைவில் அப்டேட் செய்யப்படும்," என்று ட்விட்டரில் கூறியுள்ளார். படம் பார்த்து முடிந்ததும் எப்படியும் ஏதோ ஒரு சான்றிதழ் கொடுத்திருப்பார்களே...!
No comments:
Post a Comment