Thursday, August 11, 2011

ராமதாஸின் அடுத்த காமெடி... திராவிட கட்சிகளை ஒழிப்பதே முதல் வேலை...


தமிழ்நாட்டை சீரழித்ததே இந்த திராவிடக் கட்சிகள்தான். இவற்றை ஒழிப்பதுதான் பாமகவின் முதல் வேலையாகும் என்று கட்சி தொடங்கிய நாள் முதல் திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டணி வைத்து ஓய்ந்து போய் விட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை முதல் வேலையாக கொண்ட கட்சி பாமக. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைத்து புதிய சாதனை படைத்த கட்சி இது. இந்த நிலையில் திராவிடக் கட்சிகள்தான் தமிழ்நாட்டை சீரழித்து விட்டன. எனவே அதை ஒழிப்பதுதான் பாமகவின் முதல்வேலைஎன்று பேசியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேலூர் சத்துவாச்சாரியில் நடந்த பாமக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதுதான் இப்படிக் கூறினார் ராமதாஸ். அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 1967-க்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் 18 மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று 11 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான். சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிட கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக்கடமையாகும்.

சமச்சீர் கல்வியின் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழ் மட்டுமே இருக்கும் என்ற சட்டத்தைச் சட்டப்பேரவையின் இந்தக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வேண்டும் 

சமச்சீர் கல்வியில் முழு வெற்றி கிடைக்கவில்லை. கருணாநிதி அரைகுறை சமச்சீர் கல்வியைத்தான் கொண்டுவந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாமக மட்டுமே வெற்றி பெற வேண்டும். அனைத்து நிலையிலும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் மீட்பராகப் பாமக வந்துள்ளது என்றார் ராமதாஸ்.

2 comments:

  1. மாப்ள அண்ணன் அடிக்கடி பின்னாடி திரும்பி கேட்க்கும் பேச்சு இது -

    என்ன நான் சரியாத்தான் பேசுரனா!

    ReplyDelete
  2. கூட்டணி என்ற பெயரில் குதிரை ஏற மட்டும் திராவிட கட்சிகள் தேவைப்படுகிறது போல..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...