ஏட்டையா....கட ' மூடியாச்சு...ஏந்திரிங்க..இஞ்சிபெட்டரு வர்ற நேரம்.கவுந்திடீங்களே..
ஏய் தள்ளு தள்ளு தள்ளு ஏய் தள்ளு தள்ளு தள்ளு அட தள்ளுங்கப்பா எல்லாம் தள்ளுற மாதிரியே ஷோ காட்டுறீங்க
டேய் தம்பி பாத்துடா.... நானே இப்பதான் ஹோலி கொண்டாடிட்டு வர்றேன் இன்னும் மீடியாக்களுக்கே போஸ் குடுக்கல. கலர் அழிஞ்சிடாம ஊத்தறதுன்னா ஊத்து. இல்லைனா, நானே வழக்கம்போல என் தும்பிக்கையால புடிச்சு குடிச்சுக்கறேன்.
தம்பரம் அவர்கள் இந்த போட்டோவை பார்க்க வேண்டும். பெரும்பாலான மக்களின் நிலை இப்படி தான் இருக்கு, அரசு ஊழியர்களுக்கு பஞ்ச படி முன் தேதியிட்டு அதுவும் ஜனவரி 2012 லிருந்து கொடுக்க போகிறார்களாம் ?
மூணு ஆடும் இப்படி ஒண்ணா ஓரே பக்கெட்குள்ளே தலை விட்டு கும்மி அடிச்சா இல்லை கும்மி குடிச்சா இல்லை இல்லை தண்ணி குடிச்சா எப்புடி ? குழாய் அங்கிட்டு இருக்கு பக்கெட் இங்கிட்டு இருக்கு, யாரு அதை தள்ளி வச்சா ? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம கும்பகோண சுப்பிரமணி நேத்து வந்துட்டான்யா இங்கு ஆனா இந்த காது கிழிஞ்சு தொங்குன ஒத்தை யானை சென்னை அப்புக்குட்டனை காணவில்லை, கூவத்தில் குளிக்க போனவன் என்ன ஆனானோ ?
ரூம் போட்டு எப்படி எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா நமக்கு இப்படி ஐடியா ஒண்ணும் தோண மாட்டேங்குதே என்ன செய்ய ?
மாடு பாடுகிறது: ஏ.... தண்ணித்தொட்டி தேடிவந்த பசுமாடு நான்.... ஏ.... தண்ணித்தொட்டி தேடிவந்த பசுமாடு நான்.... அந்த ஆறு கொளம் வத்தி போச்சு சாமீ.... அட வயக்காடும் காஞ்சு போச்சு சாமீ.... இப்போ பைப்ப கொஞ்சம் தெறந்து தண்ணியத்தான் குடிச்சேன். பைப்ப கொஞ்சம் தெறந்து தண்ணியத்தான் குடிச்சேன்.. (ஏ.... தண்ணித்தொட்டி தேடிவந்த)
ஆணும்..........பெண்ணும் சமம் என்று இது போன்ற செயல்களை வைத்துதான் சொன்னார்களோ..... நம்ம ரயில்வே மந்திரிய ஒரு தடவை இதே போன்று ஜன்னல் வழியாக ஏற்றி.....கழிவறை அருகில் நிற்க்க வைத்தே ரயிலில் அனுப்ப வேண்டும்....அப்பொழுதுதான் தெரியும் மக்கள் படும் அவதி என்ன என்று....
ஆறு, குளம்னு பார்த்து குளித்து அனுபவிக்க பிறந்த விலங்கு மனுசன்கிட்ட மாட்டிக்கிட்டு பைப்பு தண்ணியிலே ஸ்நானம் செய்யவேண்டியிருக்கு
No comments:
Post a Comment