சினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தனுஷ் ஆதங்கம்...
ரோஜா கூட்டம், பூ திரைப்படங்களின் இயக்குனர் சசி, பரத் நடிப்பில் 555 திரைப்படத்தை இயக்கியுள்ளார். 555 திரைப்படத்தின் போஸ்டர்களே ரசிகர்களை ஒரு மிரட்டு மிரட்ட, இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இயக்குனர் ஷங்கர், தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் வருகையுடன் விமர்சையாக நடந்தது.
- ஷங்கர் இசைத் தகடுகளை வெளியிட தனுஷ் பெற்றுக்கொண்டார். இசைவெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் “சினிமாவில் பெயர் சம்பாதிக்கலாம். புகழ் சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல நண்பர்களை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம். இயக்குனர் சசி பற்றி பேசிய பலரும் ‘அவர் நல்ல நண்பர். நெருங்கிய நண்பர்’ என்று தான் பேசினார்கள்.
- சசி அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக பழகி நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரிகிறது.படிக்காதவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்காமலேயே கலந்துகொண்டவர் பரத். அதனால் இந்த இசைவிழாவில் நான் கலதுகொள்வது என்னுடைய கடமையாகிறது. இந்த படத்தில் சத்தியமாக என்னால் நடித்திருக்க முடியாது என படத்தின் ஸ்டில்களை பார்த்தவுடன் தெரிந்துகொண்டேன்” என்று பேசினார்.
- விழாவிற்கு வந்தவர்கள் பலரும் பரத்தின் கடின உழைப்பை பாராட்டி பேசினார்கள். பிறகு பேசிய பரத் “ நான் தனுஷை கலந்து கொள்கிறீர்களா என ஒரு வார்த்தை தான் கேட்டேன். எவ்வித நிபந்தனையோ, யோசனையோ இல்லாமல் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்” என்று பெருமையுடன் பேசினார்.
No comments:
Post a Comment