வார்த்தை தவறிவிட்டாய்....
கண்ணம்மாவைப் பார்த்து பாடியது போல் யாரும் அஜீத்தைப் பார்த்து பாடி விடுவார்களோ? விஷயம் வேறொன்றுமில்லை. தான் நடிக்கிற படத்தில் அல்டிமேட் என்று அடை மொழி போடுவது, ஊர் திரண்டு வாழ்த்த, 'வந்தேண்டா உங்க தலைவன்' என்பது மாதிரி ஓபனிங் சாங் வைப்பது, பன்ச் டயலாக் போடுவது... இதெல்லாம் சுத்தமா கூடவே கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் அஜீத். ஆனால்...
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் இதில் ஒன்று இடம் பெறுகிறதாம். ஓபனிங் மாஸ் சாங்.
பில்லா படத்தில் சேவற்கொடி பறக்குதடா ஓபனிங் சாங் வைத்த மாதிரி இதிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என வற்புறுத்தி விஷ்ணுவர்தன் அஜீத்திடம் சம்மதம் வாங்கியிருக்கிறாராம். ஆனால் அட்வைஸ் பண்ற மாதிரியெல்லாம் இல்லாமல், செம கிராண்டாக, கலர்ஃபுல்லாக எடுத்திருக்கிறார்களாம். பாடியிருப்பது சங்கர் மகாதேவன்.
அஜீத் அவ்வப்போது வார்த்தை தவறினாலும் நன்றாகதான் இருக்கும்.
*****************************
குறும் படம், ஆவணப் படங்கள் எடுக்கிற இளைஞர்கள் இப்போது வரிசையாக படம் இயக்குகிறார்கள். குறும் படங்கள் சினிமா இயக்குவதற்கான விசிட்டிங் கார்டாக மாறியிருக்கிறது.
இயக்குனர் பாண்டியராஜன் விஷயத்தில் அப்படியே உல்டா. இருபது வயதில் ஆண் பாவம் படத்தை இயக்கி ஒரு வருடம் ஓட வைத்தவர் இப்போது குறும் படங்கள், ஆவணப் படங்கள் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவரது படங்கள் சர்வதேச அளவில் விருதுகள் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் மண் பானை என்ற படத்துக்காக அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மண் பானைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார், எடிட்டிங் பி.லெனின்.
No comments:
Post a Comment