டில்லி, இந்தியாவின் தலைநகர் மட்டுமல்ல, கற்பழிப்பின் தலைநகரமாகவும் உயர்ந்து உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், மருத்துவ மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, அவள் இறந்ததை தொடர்ந்து, தற்போது, ஐந்து வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவது, வெட்கமும், வேதனையும் படக்கூடிய நிகழ்வு.
இந்த குழந்தை கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள மனோஜ் குமார், பீகாரைச் சேர்ந்தவன். அவன் பிறந்த ஊரான, பரத்துவா என்ற இடத்தின் பஞ்சாயத்து அமைப்பு, அவனையும், அவனது குடும்பத்தையும் அந்த ஊருக்கு வரக்கூடாது என்று தடைவிதித்துள்ளது.
அவனது குடும்பத்தை, "அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' என, முத்திரை குத்தியுள்ளது.வானளாவிய சட்டங்களையும், அதிகாரங்களையும் வைத்துள்ள, நம் அரசுகள் சாதிக்காததை, தன் சிறிய அதிகாரத்தை பயன்படுத்தி, மனோஜ்குமாரின் குடும்பத்தையும், அவனையும், பஞ்சாயத்து உடனடியாக, பகிஷ்கரித்திருப்பது, மக்கள் இந்த கொடுமைகளுக்கு, அரசின் தண்டனைகளுக்கு முன், சமுதாயத்தில் எந்த விதத்தில், அவனது பின்புலத்தை கிழித்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்பது புலனாகிறது.
மனோஜ் போன்ற காமுகர்களது வெறிச் செயலை, கிராம மக்கள் வெறுத்து, அவனை ஒதுக்கியது பாராட்டத்தக்கது. இந்த வெட்கக்கேடான குற்றத்திற்கு, கிராம மக்கள் குத்தியுள்ள முத்திரை, அவர்களது மனங்களின் அடித்தளத்தில் இருந்து எழுந்த, கோபத்தின் எழுச்சியே.
காவல் துறையை கைகாட்டுவதும், அரசின் கையாலாகாத அணுகுமுறைகளை குறை கூறுவதையும் தவிர்த்துள்ள, பரத்துவா கிராம பஞ்சாயத்து, இம்மாதிரி குற்றங்களில், சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மேல் குத்தும், படுபாதக, அவமான முத்திரையைப் பற்றி, தலைமுறை தத்துவமாய் பேசும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஊருக்கு பயந்தாவது, இந்த கொடிய செயலை எதிர்காலத்தில் தங்கள் சந்ததியினர், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் செய்யாமல், சுமுக வாழ்க்கைக்கு வழி கோலுவதாய், அந்த பஞ்சாயத்து முடிவு அமைந்துள்ளது.எதிர்காலத்தில், சமுதாயமே கடுமையாக தண்டித்து விடும் என்ற செய்தியை நமக்கு தெரிவிக்கிறது.
இப்படி பத்து குடும்பத்தை செய்தால் தவறு செய்ய பயபடுவார்கள்
ReplyDelete