சமீபத்தில், பாரதிராஜா இயக்கி, தயாரித்து வெளியிட்ட, "அன்னக்கொடி' திரைப்படத்தை தடை செய்யக் கோரி, அவர் வீட்டு முன், பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். திரைப்படம் என்பது, மக்கள், திரை அரங்குகளில் கூடி, தங்கள் கவலைகளை மறந்து ரசிக்கக் கூடிய ஒரு சாதனம்.
திரை அரங்குகள், ஜாதி வேறுபாடு இன்றி, சமரசத்துடன், எல்லா ஜாதி மதத்தை சேர்ந்தவர்களும் அமர்ந்து, படம் பார்க்கும் இடம். திரையுலகில் மன்னராக விளங்கிய, எம்.ஜி.ஆர்., இன்றைக்கும், என்றைக்கும் இனிமையாய், எத்தனை முறை பார்த்தாலும், எப்போது பார்த்தாலும், சலிப்பு தட்டாத வகையில், படங்களில் நடித்து இருப்பார்.
எந்தப் படத்திலும், ஜாதியை பற்றியோ, மதத்தைப் பற்றியோ, காட்சிகளோ, பாடல்களோ இருக்காது. பொழுது போக்கு அம்சமாக, அப்படங்கள் திகழ்ந்ததால், அவர் மறைந்தாலும், மக்கள் அவரை மறக்கவில்லை.
ஆனால், சமீப காலமாக வந்த சில இயக்குனர்கள், ஜாதி, மதங்களை புண்படுத்தி, தன்னிச்சையாக திரைப்படம் தயாரிக்கின்றனர். தற்போது சர்ச்சைக்குள்ளான, "அன்னக்கொடி' படத்தில், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது போலவும், கலப்புத் திருமணம் செய்வதும், வேறு ஒருவருடைய மனைவியை அழைத்து வருவது போலவும், சமூகத்திற்கு ஒவ்வாத காட்சிகளும், அருவருப்பு வசனங்களும் நிறைந்த படம்.
அது மட்டும் அல்ல... ஆங்கிலேயர் நாட்டை விட்டு போய் விட்ட நிலையில், விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கர்கள், இன்னும், இந்த நாட்டை விட்டுப் போகவில்லை என்ற வகையில், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில், காட்சி உள்ளது.
சினிமாவில், தனிப்பட்டவர்களின் ஜாதி வெறியைத் திணிக்கக் கூடாது. அதனால், தமிழ் சமுதாயம் பாதிக்கப்படும். (
ஆர்.ராஜகோபால், சென்னை)
வாத்யார், வாத்யார்தான்!
ReplyDeleteதலைவர் பாடத்தை பலரும் மற(றை)ந்து விட்டனர்(து)...!
ReplyDelete