ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றவர், ஆறு ஆண்டு காலம் பதவி வகிக்கலாம். தொகுதி வளர்ச்சிக்காக இவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் அதிகம்.
லோக்சபா தேர்வாளர்களின் பதவி காலம், ஐந்து ஆண்டு தான். தொகுதி வளர்ச்சி நிதியும் குறைவு.லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வீதி வீதியாக அலைந்து ஓட்டு கேட்பர்.
கட்சியின் தலைவர் முதல், கிளைச் செயலர் வரை, அவருக்காக, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், மக்களிடம் காவடி எடுத்து, "அம்மா... தாயே...' என, கெஞ்சி கெஞ்சி ஓட்டு கேட்பர்.
மக்களும், தங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவர்களுக்கு ஓட்டளிப்பர். ராஜ்ய சபா தேர்தல் அப்படி அல்ல. நோகாமல் நுங்கு சாப்பிடுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படித் தான், ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், வெற்றி பெறுவர்.
ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்களின் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால், கட்சியின் தலைவருக்கும், கட்சிக்கும், கடமைப் பட்டவராகிறார். இதனால், இவருக்கு அளிக்கப்படும், தொகுதி வளர்ச்சி நிதியை கட்சிக்கு கொடுத்தே ஆகவேண்டும்.
கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு, இ.க்யூ., பாரம் கொடுக்க வேண்டும். இது தான் இவர்களின் அதிகபட்ச கடமை.மக்கள் நலனை, இவர்களிடம் துளியும் எதிர்பார்க்க முடியாது. இதில், எவர் ஜெயித்தால் என்ன,தோற்றால் என்ன?இவர்களால், மக்களுக் கும் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.
ஆமாம் பாஸ் நோவாம நோம்பு கும்பிடுற வேலைதான்.
ReplyDelete