தன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார்.
கோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர்.
படப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ‘கோச்சடையான் ரிலீசாகும் வரை அமைதியாக காத்திருப்போம்’ என்று படம் ஒன்றை போட்டிருந்தார்.
அதை ரீடுவீட் செய்த சௌந்தர்யா “நீங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் கோச்சடையானை தரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை நம்புங்கள்” என்று கூறியிருக்கிறார்.

ம்ம் ரைட்டு
ReplyDeleteஎன்று தணியும் இந்தத் திரைப்பட மோகம் ? எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும். விரும்புவோர் பார்க்கட்டும். அதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ?
ReplyDelete