2003ல், நடிகர் விஜயகாந்த், தன் ரசிகர்கள், மூன்று லட்சம் பேரை திரட்டி, தே.மு.தி.க.,வை உருவாக்கி, தொண்டர்களாக மாற்றினார். அப்போது அவருக்கு என்று ஓர் எழுச்சி இருந்தது. ஏன் எனில், 1967க்கு பின், தமிழகத்தை, மாறி மாறி திராவிடக் கட்சிகள் ஆண்டு வருவதால், அவர்கள் மீது, வெறுப்புக்குள்ளான நடுநிலையாளர்கள், ஒரு மாற்றத்தை விரும்பியதே காரணம்.
அந்த நடுநிலையாளர்கள் தான், 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில், தே.மு.தி.க.,விற்கு ஓட்டு போட்டு வந்தனர்.ஆனால், விஜயகாந்தோ, மக்கள் தனக்கு அளித்த எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை, சரியாக பயன்படுத்தவில்லை.
கட்சியின் மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்களின் அரசியல் ஆலோசனைகளையும் சரியாக கேட்கவில்லை.
லோக்சபா தேர்தல் வரை, கூட்டணியில் இருந்து, தன் கட்சியை வளர்த்து, நல்ல எதிர்க்கட்சி தலைவராக இருந்து, மக்களுக்காக குரல் எழுப்ப வேணடியவர்,சட்டசபையில், சினிமா பாணியில் கோபமாக பேசி வெளியேறினார்.
இன்று, அவர் மனைவி பிரேமலதாவிற்கு இருக்கும் நற்பெயர் கூட, அவருக்கு இல்லை. தன் கட்சி, எம்.எல்.ஏ.,க்களைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாததால், இன்று, ஏழு, எம்.எல்.ஏ.,க்கள் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் ஓர் அணியும், தி.மு.க., தலைமையில் ஓர் அணியும், தேர்தலை சந்திக்கப் போவது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க., வைப் பொறுத்த வரை, வருகிற லோக்சபா தேர்தலை விட, அடுத்து வர உள்ள, 2016 சட்டசபைத் தேர்தல் தான் முக்கியமானது.
காங்கிரசை நம்பியவர்கள், கரை சேர்ந்ததாக வரலாறு கிடையாது. அந்த வகையில், தே.மு.தி.க., இன்று, காங்கிரசிடம் பாடம் கற்று விட்டது. எனவே, தற்போது, விஜயகாந்த், குஜராத் முதல்வர் மோடியை சந்தித்து, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்து, தமிழகத்தில், மூன்றாவது அணியை உருவாக்கி, அதற்கு தே.மு.தி.க., தலைமையேற்றால், நிச்சயம் அது நல்ல பலன் தரும்.அதுவே, தேசிய அரசியலில், தே.மு.தி.க.,விற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க வழி வகுக்கும்.
நல்ல வழி... தே.மு.தி.க. செயல்படுத்துமா...? பார்ப்போம்...!
ReplyDeleteஅரசியல் கோமாளி ஆகாம் மீண்டு வந்தால் நல்லதுதான்
ReplyDeleteஇரு கழகங்களுக்கும் மாற்றா இருப்பார் என எதிபார்த்தது எதிர்பார்ப்பாகவே இருக்கும் போல...
ReplyDelete