Showing posts with label தில்லு முல்லு. Show all posts
Showing posts with label தில்லு முல்லு. Show all posts

Friday, June 7, 2013

தில்லு முல்லு ரீமேக்.. ரஜினி கொடுத்த ஷாக்...



தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார்.

சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், “ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 

படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொன்னார். காரில் சென்றால் தாமதமாகும் என கருதி பைக்கிலேயே போய்விட்டோம்.



நாங்கள் அப்படி வந்ததைக் கேட்டு… ‘ஏன் ஏன் இப்படி?’ என்று கேட்ட ரஜினி, பின்னர் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை கேட்டு சந்தோஷப்பட்டார்.

படம் நல்லா வரும்னுதான் தோணுது என்றார். ‘சரி.. என்னென்ன பாடல்களை யூஸ் பண்ணப் போறீங்க?” என்று கேட்டார். `தில்லு முல்லு தில்லு முல்லு’ மற்றும் `ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல்களை பயன்படுத்தப் போவதாகக் கூறியதும், “சூப்பர்… எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ராகங்கள் பதினாறு..” என்று கூறி வாழ்த்தினார்.

இந்தப் படம் பெரிய அளவில் வரும் என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்,” என்றார்.


இந்தப் படத்தில் சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ் ராஜும், கமல் வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர்.

Saturday, May 4, 2013

தில்லு முல்லு டிரைலரும், ரசிகர்கள் படு கேவலமாக கமெண்டும்..!


கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காமெடிப் படமான தில்லு முல்லு படத்தை தற்போது வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் ரீமேக் செய்கிறார். வீராப்பு உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பத்ரி இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.


பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து இசையமைப்பது இப்படத்தின் ஹைலட்டான விஷயம். அதுமட்டும் இன்றி ஒரு பாடலுக்கு இருவரும் நடனமும் ஆடியிருக்கிறார்கள். இப்படி பல்வேறு புது அம்சங்களை சேர்த்து ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என்று நினைத்த இப்படக்குழுவினருக்கு இன்று பெரும் ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் இன்று யூடியூப் இணையத்தள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் படு கேவலமாக கமெண்ட் தெரிவித்துள்ளார்கள்.


அவற்றில் சில இதோ இங்கே:

பழைய தில்லு முல்லு படத்தை இப்போது ரிலீஸ் பண்ணாலும் 100 நாட்கள் ஓடும் ஆனால், இந்தப் படம் ஓடாது.

தேவையில்லாத ரீமேக்.

தமிழ் சினிமாவுக்கு வந்த கேடு காலம்.

ரஜினி மற்றும் அந்த குழுவுடன் இவற்றை ஒப்பிடக்கூடாது.

இப்படி தில்லு முல்லு ரீமேக்கிற்கு எதிராக பல்வேறு கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் சில ரசிகர்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்ற ஆறுதல் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...