Tuesday, April 19, 2011

கல்வியறிவு பெற்ற மாவட்டம் இப்படியா இருக்கும்...



கடந்த 13-ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவ்டடமான குமரியில் 4 ல்டசம் பேர் வாக்களிக்கவேயில்லை.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 424 வாக்கள்ர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கவில்லை.

இத்தனை பேர் வாக்களிக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் ஏராளமானோர் கேரளா, குஜராத் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும், வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறையின்போது மட்டும் தான் சொந்த ஊருக்கு வருகின்றனர்.

இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,

கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 63.7 சதவீத வாக்குகளும், 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 64.50 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 68.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார். (தட்ஸ் தமிழ்)

12 comments:

  1. படித்தவர்கள் வாக்களிக்காமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம்.

    ReplyDelete
  2. வெறுமனே அரசியல்வாதிகளை வாய் கிழிய திட்டுவது மட்டும் தான் படித்தவர்கள் செய்யும் வேலையா?


    வாக்களிக்காதவர்களுக்கு என்ன அக்கறை இருக்கக்கூடும் தேசத்தின் மீது..

    ReplyDelete
  3. கல்வியறிவு பெற்ற மாவட்டம் இப்படியா இருக்கும்?

    கல்வியறிவு இருந்தாலும் வேலைவாய்ப்புகள் இல்லை என்றால் இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  4. உண்மையில் வெட்கக்கேடுதான்...
    ஙாவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்...

    ReplyDelete
  5. ரண்டு வெச்சுக்கிட்டு ஒரே நேரத்தில் சமாளிப்பது எப்படி?அணுகவும் அண்ணன் அஞ்சா சிங்கம் சவுந்தர்

    ReplyDelete
  6. //இதுதவிர ஏராளமானவர்கள் கேரள மாநிலத்தில் கட்டுமானப் பணி செய்து வருகின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்களில் பலர் வாக்களிக்க வரவில்லை. அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.//

    இது சரிதான்னு தெரியுது....

    ReplyDelete
  7. //சி.பி.செந்தில்குமார் said...
    ரண்டு வெச்சுக்கிட்டு ஒரே நேரத்தில் சமாளிப்பது எப்படி?//

    எது ஸ்டெப்னியா....??
    அதை வியட்னாம் பார்ட்டிகிட்டே கேளுங்க....

    ReplyDelete
  8. கல்வி அறிவு இல்லாத ஊரில்தானே பெரும்பாலும் ஓட்டுகள் விழுகின்றன..

    ReplyDelete
  9. என்ன பெருசா ஜனநாயகம் ஜனநாயகம் நு பேசுரிங்க..... நூற்றுக்நூறு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் அப்புறம் எதுக்கிய வேற மாநிலத்துல பொய் வேலபாகுறோம் .... ஓட்டு கேகுரதுக்கு நாய் மாதிரி எத்தன பேறு . இப்போ எல்லாம் முடிஞ்சு போசு .....இனி எவனது வருவான .......அப்டி எவனது மக்களை பார்க்க வந்த அடுத்த வாட்டி ந ஓட்டு போடுவேன் ....

    ....விஜி ....கன்னியாகுமரி

    ReplyDelete
  10. என்ன பெருசா ஜனநாயகம் ஜனநாயகம் நு பேசுரிங்க..... சட்டசபை தேர்தலில் எத்தன கோடி.... செலஉ.... கருணாநிதிக்கு 10 ,0000 rs கடன காமெடி யா illa ஜெயாலலிதா வ பார்த்த மக்கள் மயங்கி வில்ரங்க அவங்களுக்கு என்ன ....அவன்கபடுக்கு பேசிட்டு போறாங்க .....ஏன்டா.... இலவசம் இலவசம் ..........கொடுகுரங்க............ நாங்க பிசைகரங்களா ....அந்த காச வச்சு விலைய கம்மி பண்ணு .........பெட்ரோல் விலைய கம்மி பண்ணு.............அப்டி கம்மி பண்ணுன நாங்கலே அத வாங்குஒம்ல ............... ஓட்டு கேகுரதுக்கு நாய் மாதிரி எத்தன பேறு . இப்போ எல்லாம் முடிஞ்சு போசு .....இனி எவனது வருவான .......அப்டி எவனது மக்களை பார்க்க வந்த அடுத்த வாட்டி ந ஓட்டு போடுவேன் ....

    ....விஜி ....கன்னியாகுமரி

    ReplyDelete
  11. பெருசா எலூத வந்துடாங்க போங்கடா போங்கடா .............

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...