தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வது குறித்து சந்தோஷப்பட்ட ரஜினி, எங்களை வாழ்த்தினார், என்றார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தற்போது மிர்ச்சி சிவா நடிக்க ரீமேக் ஆகிறது. பத்ரி இயக்குகிறார்.
சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடந்த தில்லு முல்லு பட பிரஸ்மீட்டில் சிவா பேசுகையில், “ரஜினியின் தில்லு முல்லு பட ரீமேக்கில் அவர் கேரக்டரில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.
படம் திருப்தியாக வந்துள்ளது. தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய முடிவானதும் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினோம். ஒரு நாள் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரைமணி நேரத்தில் ராகவேந்திரா மண்டபத்துக்கு வரச் சொன்னார். காரில் சென்றால் தாமதமாகும் என கருதி பைக்கிலேயே போய்விட்டோம்.
நாங்கள் அப்படி வந்ததைக் கேட்டு… ‘ஏன் ஏன் இப்படி?’ என்று கேட்ட ரஜினி, பின்னர் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்வதை கேட்டு சந்தோஷப்பட்டார்.
படம் நல்லா வரும்னுதான் தோணுது என்றார். ‘சரி.. என்னென்ன பாடல்களை யூஸ் பண்ணப் போறீங்க?” என்று கேட்டார். `தில்லு முல்லு தில்லு முல்லு’ மற்றும் `ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல்களை பயன்படுத்தப் போவதாகக் கூறியதும், “சூப்பர்… எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ராகங்கள் பதினாறு..” என்று கூறி வாழ்த்தினார்.
இந்தப் படம் பெரிய அளவில் வரும் என்பதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்,” என்றார்.
இந்தப் படத்தில் சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் பிரகாஷ் ராஜும், கமல் வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர்.
கோவை சரளா ஜமாய்த்து விடுவார்கள்...
ReplyDelete