ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் துரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.
ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்கொலை செய்ய வேண்டாம் முதல்வர் ஜெ., :
இது தொடர்பாக சபையில் அவர் பேசியதாவது: ராஜிவ் கொலையாளிகளுக்கான கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இதில் நான் தலையிட முடியாது. 3 பேரும் மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும். தூக்கு தண்டனையை நிறைவேற்ற கூடாது எனவலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்த செங்கொடி சம்பவம் வருத்தமளிக்கிறது. யாரும் தற்கொலை முடிவுக்கு செல்ல வேண்டாம்.
No comments:
Post a Comment