சுதந்திரத்திற்குப் பிறகு, "காங்கிரஸ்' என்ற பெயரை, எந்த ஒரு அரசியல் கட்சியும் உபயோகப்படுத்தாமல், தடை செய்திருக்க வேண்டும். அன்று, அப்படி செய்யாததாலே, இன்று, கறை படிந்த ஊழல் கட்சியாக அது திகழ்கிறது.அதிலும், 2004ம் ஆண்டு முதல், காங்கிரஸ் ஆட்சியில், லட்சம் கோடிகளில் ஊழல் செய்து, முழுமையான ஊழல் கட்சியாகவும் திகழ்கிறது. உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும், இதைப் பார்த்து வெட்கி, கதர் சட்டை அணிவதையே விட்டு விடுவரோ என, நினைக்கத் தோன்றுகிறது.
காந்தியவாதிகளில் ஒருவரான அன்னா ஹசாரேவை, ஒரு பயங்கரவாதியைப் போல பார்க்கிறது மத்திய அரசு. மேலும், அறவழியில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் அவரையும், அவர் ஆதரவாளர்களையும், மக்கள் விரோத சக்தியாகப் பார்க்கிறது.இந்திய காங்கிரஸ் கட்சி, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியாகவோ
அல்லது லிபியா, எகிப்து நாட்டில், ஊழல் ஆட்சி செய்த அதிபர்களைப் போன்றோ, சர்வாதிகாரி ஹிட்லரைப் போன்றோ செயல்பட்டு, ஊழலுக்கு எதிராக போராடுபவர்களை அடக்க நினைக்கிறது."ஊழல் அற்றவர்' எனக் கூறிக்கொள்ளும் பிரதமர், 2004ம் ஆண்டு முதல், இன்று வரை, பதவியில் ஒட்டிக்கொண்டு, "ஊழலை ஒழிப்பேன்' என கூறி,
ஊழலை வளர்த்தது தான் மிச்சம்.
"ஊழலை ஒழிக்க, மந்திரக்கோல் ஏதும் நம் கைகளில் இல்லை' என, பேட்டி கொடுக்கிறார்.தன் அதிகாரத்தை கொண்டு, கடந்த எட்டு ஆண்டுகளில், ஊழலை அவரால் ஒழிக்கவோ அல்லது குறைக்கவோ முடியவில்லை; இனியும் அது நடக்கும் என நினைத்தால், நாம் தான் முட்டாள்கள் ஆவோம். மேடையில் வெறுமே பேச
மட்டும், பிரதமருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருக்கிறது; செயல்பட அல்ல.அனேகமாக மன்மோகன் சிங், மீதமுள்ள தன் பதவிக் காலத்தில், காங்கிரசை அடியோடு அழித்துவிட்டுத்தான், ஓய்வு பெறுவார் போலும்!
No comments:
Post a Comment