ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.... வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல் திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார்
அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".
மனிதர்களை பயன்படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம்...
எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?
*********************************
"என் வாட்ச், கேமரா, கால்குலட்டர், கம்ப்யூட்டர், ரேடியோ, டோர்ச் லைட்
எல்லாம் தொலைஞ்சுப் போச்சுனு கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன் !"
ஏன் ?
"வெறும் செல்போன் தொலைஞ்சதா சொன்னா, கண்டுக்க மாட்டேன்குறாங்க !"
நான் கோவக்கார தந்தை இல்லேங்க... அதனாலே படிக்கலேங்க... ஹிஹி...
ReplyDeleteகதையில் உள்ளது போல் பல "ஜென்மங்கள்" இருப்பதும் உண்மை...
கோபக்காரக் காரத் தந்தைகள்
ReplyDeleteநிச்சயம் படித்துத் திருந்த வேண்டிய
அற்புதமான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
the last two lines of the first story is beautiful....
ReplyDeletetouching
Excellent story, really touching
ReplyDeleteஅருமை, அதிக கோபம் எல்லா இடத்திலும் துன்பத்தில் தான் முடியும்.
ReplyDeleteமனித நேயத்தை எடுத்துச் சொல்லும் கதை அருமை.
ReplyDelete