கேள்வி: “ரஜினிகாந்துக்கும், ஒரு எலக்ட்ரீஷியனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்று சொல்லுங்கள்.. அதை வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன்,” -இப்படி ஒருவர் எழுதியிருக்கிறார். அதை தலைவரை வைத்து விழா நடத்தி புத்தக வெளியீடு செய்து பாராட்டிப் பேசிய மனுஷ்ய புத்திரம் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறாரே… இது சரியா? எந்த பதிலும் தராமல் இருப்பது சரியா?
- இப்படி தொலைபேசியில் நான்கைந்து நண்பர்கள் கேட்டார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை, கருத்தைப் பகிர்ந்த மனுஷ்யபுத்திரன் பக்கத்தில் முதலில் பதிவு செய்துவிட்டு, இங்கே தருகிறேன்.
எனது பதில்:
“மிகத் தவறான மனப்போக்கு இது. ஒரு எலெக்ட்ரீஷியனை வைத்து உங்களால் பிரமாண்டமாக ஒரு புத்தக வெளியீட்டை நடத்தி களிப்படைந்திருக்க முடியுமா? ‘இந்த மாமனிதர் வந்ததால் இந்த அரங்கம் எத்தனை மகிழ்ச்சியடைகிறது..’ என்று ஒரு எலெக்ட்ரீஷியனை உங்கள் வாய் புகழுமா?
நல்ல எழுத்துக்களைத் தருபவர்களின் தலைக்குப் பின்னால் எப்போதும் எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் தேவையே இல்லை, அது இல்லாத பல எழுத்தாளர்களை இந்த உலகம் கொண்டாடி இருக்கிறது.
உங்களைப் போன்ற பலருக்கும் ஆதர்ஸ எழுத்தாளராகத் திகழ்ந்த சுஜாதா, ஆணா பெண்ணா என்ன வித்தியாசம் கூட தெரியாத எண்பதுகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதற்காக அவருக்கு புகழும் மரியாதையும் கிடைக்காமலா போய்விட்டது..? அவரை இழுத்து வைத்து கண்டவனெல்லாம் கழுத்தறுப்பு செய்தானா என்ன?
ஒரு காலிப் பானை என்று தெரிந்த பிறகு அவ்வளவு நேரம் அந்த நபருடன் காலத்தை ஓட்டியது ஜெயமோகனின் தவறு. அவரது பக்குவமற்ற மனதை பறைசாற்றும் எழுத்து அது. மிக எளிமையாகக் கடந்து செல்ல வேண்டிய ஒருவனைப் பற்றி, தன் மேதைமையை துருத்திக் காட்டும் வகையில் அவர் எழுதிய ஒரு கட்டுரைக்கு இந்த அளவுக்கு மாய வேண்டியதில்லை (ஜெயமோகன் கட்டுரையை அவர் தளத்தில் படித்துக் கொள்ளவும்).
ஒருவர் தன் ஈகோவைத் தின்ன முயலும்போதே, அந்த ஈகோ அவரை காலி பண்ணிவிடுகிறது. அது எழுத்தாளனாக இருந்தால் என்ன, பிளம்பராக இருந்தாலென்ன.. அந்த ஈகோ, உலகெல்லாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடினாலும் ரஜினிக்கு ஒருபோதும் இருந்ததில்லை!” (Envazhi)
எந்தப் புகழையும் கெடுத்து விடும் ஆணவம்...! அகங்காரம்...!!
ReplyDeleteபதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா...
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா...