நாலு நூறு கோடி பட்ஜெட் படங்களில் நடித்தவள் என்று பெருமை பேசி திரியும் அசினின் நிலைமை தற்போது சீரியஸாகவே இருக்கிறது. கஜினி, லண்டன் ட்ரீம்ஸ், ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சான், கிலாடி 786... அத்தோடு அசினின் கரியர் நிற்கிறது.
இதில் கடைசிப் படம் கிலாடி 786 வந்தது சென்ற வருடம் டிசம்பரில். அதன் பிறகு ஒரு படம்கூட கமிட்டாகவில்லை.
இந்நிலையில் புதிய படம் ஒன்றில் அபிஷேக்பச்சனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அக்ஷய்குமார் தயாரிப்பில் ஓ மை காட் படத்தை இயக்கிய உமேஷ் சுக்லா விரைவில் அடுத்தப் படத்தை தொடங்குகிறார். அபிஷேக் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அசின் ஹீரோயின். பல மாதங்களாக ஒரு வாய்ப்புக்கு காத்திருந்தவருக்கு இந்த படம் ஜாக்பாட் என்பதில் சந்தேகமில்லை.
************************************
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார் ஓகே. இளையராஜாவின் இசையில்...?
யுவன் இசையில் மதன் கார்க்கி எழுதும் போது இளையராஜா இசையில் எழுதக் கூடாதா என்று சில பேர் கற்பனையாக இப்படியொரு கதையை கட்டிவிட்டனர். இளையராஜா இசையில் மதன் கார்க்கி பாட்டு எழுதுகிறார் என்று. இந்த விஷயம் மதன் கார்க்கிக்கே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார் என்பதுதான் செய்தி. ஆனால் அது உண்மையில்லை. இந்த பொய் செய்தியை படித்த ராஜாவின் பக்தர்களுக்கே பயங்கர ஆச்சரியம். இளையராஜாவை பற்றி நன்கு தெரிந்தவர்களாயிற்றே.
ராஜாவாவது இறங்கி வர்றதாவது.
அப்போ இசைஞானி இல்லையா...?
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDelete