கடந்த சில மாதங்களாக, ஊடகங்களிலும், நீதிமன்றத்திலும் பரபரப்பான செய்தியாக வெளிவந்து கொண்டிருப்பது, தர்மபுரி மாவட்டம், செல்லன்கோட்டையைச் சேர்ந்த, திவ்யா என்ற தமிழ் பெண்ணும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த, தமிழ் இளைஞன் இளவரசனும் செய்து கொண்ட திருமணம் குறித்து தான்.
இந்த திருமணத்தால், இரண்டு ஜாதியக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள, "நீயா, நானா' போட்டியில் ஏற்பட்ட கலவரங்கள், உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் மதிப்பிட முடியாதவை.
இந்த தம்பதிக்குள், எவ்வித மனக் கசப்போ, சச்சரவுகளோ இல்லை என்பது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு,
நீதிபதிகள் முன், திவ்யா அளித்த வாக்கு மூலங்கள் மூலம் வெளிப்படுகிறது. இரண்டு உள்ளங்கள் இணைந்து, மண வாழ்வில் ஈடுபடுவதை, எப்படி ஜாதியப் பிரச்னையாக பார்க்கின்றனர்?
அப்படியே கணவன் - மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டால், திருமண முறிவுக்கு உண்டான சட்டங்கள் மூலம், நீதிமன்றத்தில் தகுந்த பரிகாரம் தேடிக் கொள்ள, இருவருக்கும் உரிமை உள்ளது.அதை விடுத்து, கணவன் - மனைவி என்ற புனிதமான உறவை, மேற்கண்ட ஜாதியக் கட்சிகளின் செயல்பாடுகள், தலையீடுகள் கொச்சைப்படுத்தி
விட்டன.
கடல் கடந்து வாழும், இலங்கைத் தமிழர்களை தொப்புள் கொடி உறவு என்று கூறுவோர்; தமிழர்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்வோர், தமிழகத்தில், அருகருகே உள்ள கிராமத்தில், இரண்டு தமிழ் உள்ளங்கள் இணைந்து, மணம் செய்து வாழ்வு நடத்துவதற்கு, ஏற்படும் தடைகளை ஏன் கண்டு கொள்ளவில்லை; ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் ஏன் செய்கின்றனர்.
முதலில் கிராம அளவில், மாவட்ட அளவில், தமிழக அளவில், தமிழர்கள் ஒன்றுபடுவோம். பின், கடல் கடந்து வாழும், இலங்கைத் தமிழர்களை பற்றி சிந்திப்போம்.திவ்யாவும் - இளவரசனும், நம் தமிழ் ரத்தங்கள் தான் என்பதை, இவர்கள் ஏன் மறந்தனர்? எல்லாமே அரசியல் தானோ?
ஆர்.பி.பன்னீர் செல்வம், வழக்கறிஞர், சென்னை.
கடிதம்.
சாதி வெறி தீருமா....? சந்தேகம் தான்...
ReplyDeleteகுறுகிய உள்ளம்கொண்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி பிரச்சின தீரவே தீராது.
ReplyDelete\\கடல் கடந்து வாழும், இலங்கைத் தமிழர்களை தொப்புள் கொடி உறவு என்று கூறுவோர்; தமிழர்களுக்காக போராடுவதாகக் கூறிக் கொள்வோர், தமிழகத்தில், அருகருகே உள்ள கிராமத்தில், இரண்டு தமிழ் உள்ளங்கள் இணைந்து, மணம் செய்து வாழ்வு நடத்துவதற்கு, ஏற்படும் தடைகளை ஏன் கண்டு கொள்ளவில்லை; ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் ஏன் செய்கின்றனர்.\\ நியாயமான கேள்வி!!
ReplyDeleteஐயா ,
ReplyDeleteதமிழ் சமூகம் அதன் உள் அடுக்குகளில் மிக மிக கேவலமாக உள்ளது.வெளியில் தான் நாம் பெருமை பேசிகொள்கிறோம் .சுயமாக சிந்தித்து ஒருவன் நல்லவனாக தமிழ் நாட்டில் வாழவே முடியாது.அவ்வளவு கேவலம் .அடிபட்டு,அனுபவ பட்டு இதை சொல்கிறேன்
one of the best statement, this was in my mind for long............
ReplyDelete