இந்தோனேஷியா, இஸ்லாமிய நாடு என்பது, உலகம் அறிந்த உண்மை. ஆனால், அந்த நாடு, தன் கரன்சியில், இந்துக்களின் முதல் கடவுளான, பிள்ளையாரின் உருவத்தை அச்சிட்டு உள்ளது.
இப்போது, அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் உள்ள இந்தோனேஷியா தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு, பரிசாக அளிக்கவுள்ளது.
உண்மையான மதச் சார்பின்மைக்கு, இந்தோனேஷியா உதாரணமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. அதனால், அம்மதத்திற்கென சிலைகள் எதுவும் கிடையாது.
ஆனால், கிறிஸ்தவ மதத்தில், இயேசு, மேரி, குழந்தை இயேசு என்று சிலைகள் உண்டு. அமெரிக்கா கிறிஸ்தவ நாடு. இந்தோனேஷியா நினைத்திருந்தால், இயேசு, மேரி போன்றவற்றில் ஒரு சிலையை வழங்கி இருக்கலாம். ஆனால், இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை, பரிசாக வழங்கி உள்ளது.
படைக்க, காக்க, அழிக்க என்று, இனம் பிரித்து வகைப்படுத்தி, கடவுள்களைக் கொண்டிருக்கும் ஒரே மதம், இந்து மதம்.
அதில் எந்தக் கடவுள் சிலையையும், இந்தோனேஷியா தயாரிக்கவில்லை. கல்விக் கடவுள் என்று வணங்கப்படும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தானய்யா மதச் சார்பின்மை...அமெரிக்காவுக்கு, இந்தியா ஏதாவது சிலையை பரிசளிப்பதாக இருந்தால், கிறிஸ்தவ மத சம்பந்தமான, ஒரு சிலையைத் தான் வழங்கி இருக்கும்.
ஆனால், இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, கிறிஸ்தவ நாடான அமெரிக்காவுக்கு, இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை பரிசாக அளித்து, மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி உள்ளது.
போலி மதச் சார்பின்மை பேசும் நம் நாட்டு அரசும், அரசியல்வாதிகளும், வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது. (
எஸ்.ஆறுமுகம், சென்னை)
இந்து மதமும் சின்னங்களும் இந்தோனேசியாவின் பழைய பாரம்பங்களில் ஒன்று என்பதால் அவ்வாறு செய்கின்றார்கள், இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் பவுத்த அசோக சக்கரம், பவுத்த தூபியின் நான்கு சிங்கமும் சின்னங்களாக இருப்பதை போன்றே. வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ReplyDelete