Saturday, April 2, 2011

கதவை தட்டி கேட்கலாமா? தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை


வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாம். ஆனால் வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்கிறார்கள் என புகார் கொடுத்தால் தேர்தல் சட்ட விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வேட்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தேர்தல் பார்வையாளர் அஜித்வர்மா தலைமை வகித்தார். வேட்பாளர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்க போகும்போது கடை பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து விளக்கப்பட்டது. 

ஓட்டு கேட்க செல்லும் போது போக்குவரத்துக்கு இடையூறு செய்ய கூடாது. வழிபாட்டு தலம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வளாகம் அருகே ஓட்டு கேட்டு கோஷம் போடக்கூடாது. வாக்காளர்களை இடையூறு செய்ய கூடாது. உரிய நேரத்தில் பிரசாரத்தை முடிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

கட்சியினர், 500 பேர் ஒட்டு மொத்தமாக ஓட்டு கேட்க செல்ல அனுமதிக்கப்படுமா, வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாமா, எத்தனை வாகனத்தில் செல்ல அனுமதி உண்டு என கேள்வி கேட்டனர். இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், ‘‘எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்லலாம்.

ஆனால் செல்லும் போது எந்த இடத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடாது. 3 வாகனங்களில் மட்டுமே வேட்பாளர், அவர் சார்ந்தவர் செல்லவேண்டும். வீட்டின் கதவை தட்டி ஓட்டு கேட்கலாம். ஆனால் வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்கிறார்கள் என புகார் கொடுத்தால் தேர்தல் சட்ட விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வீட்டுக்கு வெளியே நின்று ஓட்டு கேட்கலாம்’’ என தெரிவிக்கப்பட்டது. 


இதைதொடர்ந்து, தேர்தல் கணக்கு பார்வையாளர் முதின் நாக்பால் தலைமையில் செலவு கணக்கு தொடர்பாக வேட்பாளர்கள் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.  இதில் அதிகாரிகள் பேசுகையில், ‘‘தேர்தல் செலவு கணக்கு சரியாக தாக்கல் செய்யவேண்டும். வங்கி கணக்கு, அதில் எடுக்கப்பட்ட பணம், செலவிடப்பட்ட தொகை போன்றவற்றை சரியாக காட்டவேண்டும். ஆட்டோவில் பணம் எடுத்து சென்றால்கூட அதற்கான ஆவணங்களை எழுதி வைத்த பின்னரே கொண்டு செல்லவேண்டும்’’ என்றனர்.

4 comments:

  1. ஜன நாயகம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது

    ReplyDelete
  2. கருணாநிதி ஒப்பாரி வைக்குரதை பார்த்தாலே தெளிவாக புரியுது. பணம் குடுத்து மக்களை கவுக்க பார்த்து அவர் கவுந்து விட்டார்...

    ReplyDelete
  3. நல்ல கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் செயல்கள் சிலதுகள் பாராட்டும்படியே இருக்கிறது..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...