எங்கள் ஊரில் இருக்கும் சிலர் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் புளியமரத்தடியில் எப்போதும் மங்காத்தா ஆடிக்கொண்டு காலத்தையும் பணத்தையும் விரயம் செய்துக் கொண்டிருந்தனர்.
இதனால் பலகுடும்பங்கள் வறுமையில் வாட நேர்ந்தது. குடும்ப பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினார்கள். இதற்கு முடிவுகட்ட நினைத்த கிராம மகளிர் அணி அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சுமார் 20 பெண்கள் சென்று புகார் கொடுத்தார்கள்.
அந்த புகாரில் தங்களின் கணவன்மார்கள் வேலைக்கு செல்லாமல் எப்போதும் பொருப்பில்லாமல் மங்காத்தா ஆடிக்கொண்டிருக்கிறார்கள் எப்படியாவது அதை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள் ஒரு சிறப்புபடையுடன் சென்று அப்போது அங்கு மங்காத்தா ஆடிக் கொண்டிருந்த அனைவரையும் மடக்கிப் பிடித்தனர்.
பிடிப்பட்ட அனைவரையும் நைய்ய புடைத்த போலீஸ் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினர். பின்பு இனி மங்காத்தா ஆடுவதில்லை என்று அங்கு பிடிப்பட்ட அனைவரும் வாக்கு கொடுத்தோடு மட்டுமல்லாமல் கைப்பட எழுதியும் கொடுத்தனர். அதன் பிறகுதான் பெண்கள் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு மங்காத்தா நிறுத்தப்பட்டது.
டிஸ்கி : அஜித் நடிக்கும் மங்காத்தாவிற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
//பிடிப்பட்ட அனைவரையும் நைய்ய புடைத்த போலீஸ் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினர்.//
ReplyDeleteநல்லா அடியும் வாங்கிட்டு பதிவும் போட்டுருக்காரு.....
//அதன் பிறகுதான் பெண்கள் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு மங்காத்தா நிறுத்தப்பட்டது.//
ReplyDeleteஐயோ பாவம் பெண்கள், அடிபட்டவஅணுக எல்லோரும் டாஸ்மாக்'ல மட்டையாகி கிடக்குராணுவ...
அஜித் நடிக்கும் மங்காத்தாவிற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ReplyDeleteha ha ha
Deleteகண்டப்படி மற்றவர்கள் பதில் பின்னூட்டம் என்ற பெயரில் 'கக்கி' வைக்கிற நேரத்தில் உங்க வலைப்பூவில் நல்ல எழுத யோசிக்கலாமே! மத்தவங்க பின்னூட்டப்பகுதியும் நாறாமல் இருக்கும் உங்க பதிவும் மணக்கும். கொஞ்சம் யோசிங்க... தம்பி பாட்டை அப்புறமா ரசிக்கலாம்...
ReplyDelete