Friday, April 8, 2011

அடுத்த முதல்வர் போட்டியா- முகஅழகிரி முடிவு


முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. கருணாநிதி 6வது முறையாக மட்டுமல்ல, 7வது முறையும் முதல்வராக அமர்வார் என்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வருகிற தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வர் பதவியில் அமரக் கூடும் என்று வருகிற செய்திகளில் உண்மை இல்லை. முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. அதைக் குறி வைத்தும் செயல்படவில்லை. எனது தந்தை கருணாநிதி 6வது முறையாக மட்டுமல்ல, 7வது முறையும் முதல்வராவார்.

திமுக கூட்டணி 200 இடங்களுகக்குக் குறையாமல் வெற்றி பெறும். அதிமுக அணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி என்பதெல்லாம் கிடையாது. திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும். மாநில அரசியலுக்குத் திரும்புவது குறித்து நான் முடிவெடுக்கவில்லை.

எங்களது சாதனைகளை நம்பித்தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். ஆனால் எங்களை வசை பாடியே எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக விஜயகாந்த் திமுகவை வசை பாடி வருகிறார். அத்தோடு நில்லாமல் அவரது கட்சி வேட்பாளரையே போட்டு அடிக்கிறார்.

கோவையில் நடந்த கூட்டத்திற்கு விஜயகாந்த் ஏன் போகவில்லை என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அந்தக் கூட்டத்திற்கு முதலில் விஜயகாந்த்தை அழைத்தார்களா என்பதே தெரியவில்லை என்றார் அழகிரி.

தற்போதுகூட கலைஞர் தான் முதல்வர் என்று கூறிவருகிறார் ஸ்டாலின் பற்றி அழகிரி  ஏதும் சொல்லாததது.. அடுத்த முதல்வர் அல்லது துணை முதல்வர் பதவிக்கு ஆசை படுவதாகவே தெரிகிறது.. அதிமுக பக்கம் வெற்றி முகம் தெரிவதாலே மு.க.அழகிரி தற்போது அடக்கி வாசிக்கிறார்.

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...