இந்தத் தேர்தலில் ரஜினியின் ஆசி பெற்ற வேட்பாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். முதலில் ஆயிரம் விளக்குத் தொகுதியின் வேட்பாளர் முகமது ஜின்னா ரஜினிக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார்.
அடுத்து துணை முதல்வர் முக ஸ்டாலின் போய் ரஜினியைச் சந்தித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். அடுத்து மத்திய அமைச்சர் முக அழகிரி தொலைபேசியில் ரஜினியிடம் பேசி வாழ்த்துக்களைப் பெற்றார். இதனால், ரஜினியின் மறைமுக ஆதரவு திமுகவுக்குதான் என்று பேச ஆரம்பித்துவிட்டனர். துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் பகுதி ரஜினி ரசிகர்கள் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்ததாகக் கூறப்பட்டது. (தட்ஸ் தமிழ்)
இந்த நிலையில், அதே கொளத்தூர் பகுதியில் முக ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கியுள்ள சைதை துரைசாமியும் நேற்று ரஜினியைச் சந்தித்தார். ரஜினிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். ரஜினியும் அவருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்துக்களைச் சொன்னார்.
தேர்தல் நேரத்தில் வெளிநாட்டில் இருப்பார் ரஜினி என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க சென்னையிலேயே இருந்தார் ரஜினி. இன்னும் சில அதிமுக, பிஜேபி வேட்பாளர்கள் ரஜினியைச் சந்திக்க இப்போது நேரம் கேட்கிறார்களாம்...
இதுக்கு வெளிநாட்டுக்கே போயிருக்கலாமே, என்று ரஜினியை யோசிக்க வைத்துவிட்டது தமிழக அரசியல்!
யாருக்கும் தனிப் பெரும்பான்மையோ... அல்லது ஆதரவு அலையோ இல்லாத நிலையில் ரஜினின் ஆதரவு இருந்தால் ஓட்டு வங்கியை வாங்கி விடலாம் என்பது பல்வேறி கட்சியின் குறியாக இருக்கிறது. ஆனால் ரஜினி இன்னும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையோடு வகித்து வருகிறார்..
பஜ்ஜி.....
ReplyDeleteவெட்டு...
ReplyDeleteஅருவா...
ReplyDeleteகத்தி...
ReplyDeleteகோடாலி...
ReplyDeleteசுத்தியல்...
ReplyDeleteகடப்பாரை....
ReplyDeleteகம்பு...
ReplyDeleteரசினி பயங்கர உஷார் பார்ட்டிங்கோ ஏற்கெனவே பட்ட சூடு போதும்...
ReplyDelete:)
ReplyDelete