பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் பேசிய திமுக மேடைகளில் வடிவேலுவும் குஷ்புவும் பேசிக் கேட்க வேண்டிய கொடுமை வந்துவிட்டதே, என்றார் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்.
திண்டுக்கல்லில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியது:
வரும் காலம் வைகோவின் காலம்!
தி.மு.க.,வால் அவமானப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர்., திண்டுக்கல்லில்தான் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட விடாமல் அவமானப்படுத்தப்பட்ட ம.தி.மு.க.வின் முதல் கூட்டமும் இப்போது அதே திண்டுக்கல்லில் நடக்கிறது.
இதனால் வரும் காலம் வைகோவின் காலமாக மாறப்போகிறது. ம.தி.மு.க. உறுதி குலையாத இயக்கம். அ.தி.மு.க., தொண்டர்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. துரோகத்தை செய்த ஜெ., மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.
அ.தி.மு.கவிற்கு நாங்கள் உழைத்த உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் எங்களுக்கு கிடைத்த பரிசு இதுதானா. நாங்கள் தனித்து நின்றால், பணம் வாங்கி விட்டு தனித்து நிற்பதாக எங்கள் மீது பழி வரும். ஊடகங்கள் குறை கூறும்.
கூட்டணியில் இல்லாத விஜயகாந்துக்கு 41 சீட், கூட்டணியில் இருந்து 7 ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு 12 சீட்டா?
பெரியார் ஈவெரா, அண்ணா, சிட்டிபாபு, பட்டுக்கோட்டை அழகிரி, எம்ஜிஆர், வைகோ பேசிய திராவிட மேடைகளில், இன்றைக்கு வடிவேலு, குஷ்பூ, ராதிகா, செந்தில், சிங்கமுத்து என்று பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கையைச் சொல்லி ஓட்டுக்கேட்கவில்லை. இலவசங்களை சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள்.
ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறி விட்டு, ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். ம.தி.மு.க., இல்லாததால், அ.தி.மு.க.,வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது. துரோகம் செய்தவர்கள் அதற்கான துரோகத்தை அனுபவித்தே தீருவார்கள்.
நாங்கள் தேர்தலில் நிற்காததால் அ.தி.மு.க., தொண்டர்களிடம் அனுதாபம், தி.மு.க.,தொண்டர்களிடம் கவுரவம், பொதுமக்களிடம் பரிவு கிடைத்துள்ளது. பார்த்துக் கொண்டே இருங்கள், மே13-ம் தேதிக்குப் பின் பல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மதிமுகவுக்கு வருவார்கள்’’ என்றார்.

இன்னும் எதிர்காலம் மேடைப்பேச்சில் எவ்வளவு இழிவுகளை சந்திக்கபோகிறதோ....
அண்ணே கவிதை போடலியா?
ReplyDelete//பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் பேசிய திமுக மேடைகளில் வடிவேலுவும் குஷ்புவும் பேசிக் கேட்க வேண்டிய கொடுமை வந்துவிட்டதே, என்றார் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்.//
ReplyDeleteஇது வேதனை படவேண்டிய விஷயம்....
உண்மையிலே மேடை பேச்சு நாகரீகம் அற்று காணப்படுகிறது..
ReplyDelete